பெண் நர்ஸின் தோளை பிடித்து அமைச்சர் இழுத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
தி.மு.க. ஆட்சியில் அமைச்சர்கள் தொடர்ந்து சர்ச்சையில் சிக்கி வருகின்றனர். அந்த வகையில், பெண்கள் அனைவரும் ஓசி பஸ்ஸில் பயணம் செய்வதாக உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடி சர்ச்சைக்குறிய வகையில் பேசியிருந்தார். இதனிடையே, கோரிக்கை மனு கொடுக்க வந்த பெண்ணின் தலையில் அம்மனுவை கொண்டு ஓங்கி அடித்தார் வருவாய்த்துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன்.
இதனை தொடர்ந்து, கடந்த சில நாட்களுக்கு முன்பு பால்வளத்துறை அமைச்சர் ஆவடி நாசர் தனது கட்சி தொண்டரை கல்லை கொண்டு தாக்க முயன்ற காணொளி சமூக வலைத்தளங்களில் வைரலாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. இதனிடையே, தி.மு.க. மூத்த தலைவரும் நீலகிரி எம்.பி.யுமான ஆ.ராசா தனது கட்சி தொண்டர் ஒருவரை பார்த்து ‘நாய்’ என்று திட்டி இருந்தார்.
தி.மு.க. அமைச்சர்கள் மற்றும் மூத்த தலைவர்களின் அருவருக்கதக்க செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியையும், கொதிப்பையும் ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில், தி.மு.க.வின் மூத்த தலைவரும் நகர்ப்புற வளர்ச்சித்துறை அமைச்சருமாக இருப்பவர் கே.என்.நேரு. இவர், அரசு மருத்துவமனையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். அவருடன், சுகாத்தாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் மற்றும் அக்கட்சியை சேர்ந்த முக்கிய நிர்வாகிகள் என பலர் கலந்து கொண்டனர்.
இதையடுத்து, நிகழ்ச்சியின் தொடக்கமாக குத்து விளக்கு ஏற்றும் நிகழ்வினை முன்னிட்டு அமைச்சர்களுக்கு உதவி செய்யும் பொருட்டு பெண் நர்ஸ் ஒருவர் மெழுவர்த்தியை ஏற்ற முயன்று இருக்கிறார். அப்போது, அமைச்சர் கே.என்.நேரு அப்பெண்ணின் தோளை தொட்டு இழுத்த சம்பவம்தான் பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.