மழையால் பாதிக்கப்பட்ட நெற்பயிற்களை தட்டில் வைத்து பார்வையிட்ட முதல்வரின் செயல் பொதுமக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தமிழகத்தில், தி.மு.க. தலைவர் ஸ்டாலின் தலைமையில் விடியல் ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியில் பொதுமக்கள், கல்லூரி மாணவ மாணவிகள் மற்றும் விவசாயிகள் என பலர் பெரும் சிரமத்திற்கு உள்ளாகி இருக்கின்றனர். குறிப்பாக, விடியல் ஆட்சியில் விவசாயிகள் அனுபவிக்கும் கொடுமைகள் ஏராளம். அந்தவகையில், டெல்டா மாவட்டங்களில் அண்மையில் கன மழை பெய்தது. இம்மழையில், விவசாயிகளின் வாழைகள் மற்றும் நெற்பயிர்கள் நாசமடைந்தன.
இதையடுத்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மற்றும் எதிர்க்கட்சிகள் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு தமிழக அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரிக்கை விடுத்தனர். கன மழையால், தங்களது வாழ்வாதாரத்தை இழந்து விவசாயிகள் தவித்து வருகின்றனர்.
இப்படிப்பட்ட சூழலில், விவசாயிகளை நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவிக்க வேண்டிய இடத்தில் இருப்பவர் தமிழக முதல்வர் ஸ்டாலின். இதனையெல்லாம், கருத்தில் கொள்ளாமல் மழையால் சேதமடைந்த நெற்பயிர்களை தட்டில் வைத்து முதல்வர் ஸ்டாலின் அரசு அதிகாரிகளுடன் பார்வையிட்ட சம்பவம் விவசாயிகள் மத்தியல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.