தேசிய மாடல் மற்றும் திராவிட மாடலுக்கு உள்ள வித்தியாசம் இதுதாங்க என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
தி.மு.க. இளைஞரணி செயலாளர் மற்றும் விளையாட்டுத்துறை அமைச்சராக இருப்பவர் உதயநிதி ஸ்டாலின். இவர், கடந்த சில தினங்களுக்கு முன்பு மதுரையில் நடைபெற்ற அரசு நலத்திட்டம் வழங்கும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார். இந்நிகழ்ச்சியில், பத்திர பதிவுத்துறை அமைச்சர் மூர்த்தி, நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் மற்றும் கட்சியின் முக்கிய நிர்வாகிகள் என ஏராளமானவர்கள் கலந்து கொண்டனர். இதையடுத்து, மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நலத்திட்ட உதவிகளை வழங்கி கொண்டு இருந்தார்.
அப்போது, உதயநிதியை நோக்கி ஏராளமான பெண்கள் வந்து கொண்டு இருந்தனர். அந்த வகையில், தம்மை நோக்கி வரும் தாய்மார்களுக்கு உரிய மரியாதையை கொடுக்க வேண்டிய பொறுப்பு அமைச்சர் உதயநிதி ஸ்டாலினுக்கு உண்டு. எனினும், அதனையெல்லாம் மறந்து விட்டு நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனிடம் பேசிக் கொண்டே ஆணவத்துடன் பெண்களுக்கு நலத்திட்ட உதவிகளை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழங்கி இருக்கிறார். இந்த காணொளிதான் பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.