காதலர் தினத்தை கொண்டாடுபவர்களிடம் தமிழக ராணுவ வீரர் உருக்கமாக பேசிய காணொளி ஒன்று சமூக வலைத்தளங்களில் தற்போது வைரலாகி வருகிறது.
தமிழகத்தை சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர், மேகாலயாவில் சி.ஆர்.பி.எப். வீரராக பணியாற்றி வருகிறார். தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் வகையிலும் பேசும் நபர்களை கண்டித்து காணளொளி வெளியிட கூடியவர். அந்த வகையில், விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவன், திரைப்பட இயக்குனர் வெற்றிமாறன் மற்றும் திரைப்பட நடிகர் சித்தார்த்தை கண்டித்து காணொளிகளை வெளியிட்டு இருக்கிறார். அதேவேளையில், விடியல் ஆட்சியில் நிகழும் அவலங்களையும் தொடர்ந்து சுட்டி காட்டி வருகிறார்.
இப்படிப்பட்ட சூழலில், எதிர்வரும் பிப்ரவரி -14 காதலர் தினத்தை இன்றைய தலைமுறையினர் கொண்டாட வேண்டாம் என உருக்கமாக பேசியிருக்கிறார். மேலும், அதுகுறித்து காணொளி ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், அவர் கூறியதாவது ;
பிப்ரவரி 14 காதலர் தினமாக கொண்டாடப்படுகிறது. ஆனால், உண்மையிலேயே, நாட்டை காதலித்து 40 சி.ஆர்.பி.எஃப். வீரர்கள் இறந்த தினம் தான் பிப் -14. அயல்நாட்டு கலாசாரத்தை கொண்டாடி தீர்ப்பதை விட, புல்வாமா தாக்குதலில் உயிர்நீத்த வீரர்களுக்கு வீர வணக்கம் செலுத்தி அதனை கருப்பு தினமாக கொண்டாட வேண்டும். அடுத்த தலைமுறைக்கு நாம் எடுத்து செல்வது என்னவாக இருக்க வேண்டும் என்றால், தேச பக்தியாக மட்டும்தான் அது இருக்க வேண்டும்.
நாட்டை உண்மையாக காதலித்து உயிர் இழந்தவர்கள்தான் இந்த சி.ஆர்.பி.எஃப். வீரர்கள். இவர்களின், இழப்பை கருப்பு தினமாக கொண்டாடுவோம் காதலர் தினத்தை புறக்கணிப்போம் என கூறியிருக்கிறார்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.