சம்பளம் போடக்கூட நிதியில்லை: கேரள கம்யூனிஸ்ட் அரசின் அவலம்; உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்!

சம்பளம் போடக்கூட நிதியில்லை: கேரள கம்யூனிஸ்ட் அரசின் அவலம்; உயர் நீதிமன்றம் கடும் விமர்சனம்!

Share it if you like it

அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட நிதியில்லாமல் கேரள கம்யூனிஸ்ட் அரசு தத்தளித்து வருகிறது. இதற்கு உயர் நீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்திருக்கிறது.

தி.மு.க. உ.பி.ஸ்கள் எதற்கெடுத்தாலும் கேரள மாநில கம்யூனிஸ்ட் அரசைப் பாருங்கள், எவ்வளவு அற்புதமாக ஆட்சி செய்கிறார்கள். ஆனால், பா.ஜ.க. ஆளும் மாநிலங்களில் அவலநியைப் பாருங்கள் என்று மூச்சுக்கு முன்னூறு முறை கூறுவார்கள். ஆனால், அந்தோ பரிதாபம் அந்த கேரள மாடல் கம்யூனிஸ்ட் அரசுதான் தற்போது அரசு ஊழியர்களுக்கு சம்பளம் போடக்கூட முடியாத அளவுக்கு கடன் சுமையில் சிக்கித் தவித்து வருகிறது. அதேசமயம், பா.ஜ.க. ஆளும் மாநிலங்கள் ரிசர்வ் வங்கியிடம் தாங்கள் வாங்கிய கடனை திருப்பிச் செலுத்தி வருகின்றன.

கேரளாவில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையிலான கம்யூனிஸ்ட் அரசு நடந்து வருகிறது. இந்த அரசுதான், அரசு உதவிபெறும் நிறுவனங்களுக்கும், அரசு சார்பு நிறுவனங்களுக்கும் சம்பளம் போடக்கூட முடியாமல் திணறி வருகிறது. இம்மாதம் நிலைமை மேலும் மோசமாகி இருக்கிறது. பெரும் கடன் சுமையில் இருக்கும் கம்யூனிஸ்ட் அரசு, கூட்டுறவு வங்கிகளில் 2,000 கோடி ரூபாய் கடன் பெற முயற்சி செய்து வருகிறது. கேரள மின் வாரிய நிதி நிறுவனத்தில் இருந்து 4,000 கோடி ரூபாய் கடன் பெற மத்திய அரசு அனுமதி அளித்திருக்கிறது. ஆனால், அதற்கான உத்தரவு வருவதில் தாமதம் ஏற்பட்டிருப்பதால். அரசின் அன்றாட செலவுகளுக்கே அல்லாடும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

இந்த நிலையில், உரிய காலத்தில் சம்பளம் வழங்க உத்தரவிடக் கோரி, கேரள மாநில அரசு போக்குவரத்துக் கழக ஊழியர் ஒருவர், அம்மாநில உயர் நீதிமன்றத்தில் வழக்குத் தொடர்ந்திருக்கிறார். இந்த வழக்கில், கேரள அரசு போக்குவரத்துக் கழகத்தை உயர் நீதிமன்றம் கடுமையாக சாடி இருக்கிறது. ‘சம்பளம் கொடுக்க முடியவில்லை என்றால், போக்குவரத்துக் கழகத்தை இழுத்து பூட்ட வேண்டியது தானே?” என்று நீதிபதி கடுமை காட்டி இருக்கிறார். அப்போது, போக்குவரத்துக் கழக வழக்கறிஞர், இந்த நிறுவனத்தை நம்பி 26 லட்சம் பயணிகளும், 26,000 ஊழியர்களின் குடும்பங்களும் இருப்பதாக குறிப்பிட்டார். இதற்கு நீதிபதி, ‘நீங்கள் பூட்டினால், பயணிகள் தங்கள் பயணத்துக்கு வேறு வழி தேடிக் கொள்வார்கள்’ என்று பதிலளித்தார். இதையடுத்து, ‘பிப்ரவரி 15-ம் தேதிக்குள் ஜனவரி மாத சம்பளம் கொடுக்கப்படும்’ என்று போக்குவரத்துக் கழகம் தரப்பில் உறுதியளிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து வழக்கு முடித்து வைக்கப்பட்டது.


Share it if you like it