ஸ்ரீ ராமகிருஷ்ணரிடம் பக்தர்கள், சுவாமி! இல்லறத்தில் எவ்வாறு வாழ வேண்டும்? என்று கேட்டார்கள். ஆமை, தண்ணீரில் இங்குமங்கும் திரிகிறது. ஆனால் அதன் மனமெல்லாம், தான் கரையில் இட்ட முட்டைகளின் மீது இருக்கும். அதுபோல் மனைவி, மக்கள் தாய், தந்தை எல்லோருடனும் சேர்ந்து வாழ்! அவர்களுக்கு சேவை செய்! ஆனால் மனத்தை இறைவனிடம் வை! இவ்வாறு வாழ்ந்து வந்தால் இல்லறம் நல்லறமாக இருக்கும் என்றார் பகவான் ராமகிருஷ்ணர்.
ஒருவன் குறுக்கிட்டுக் கேட்டான். “ஆண்டவனை அடைய நாம் ஏன் ஆலயம் செல்ல வேண்டும்? ஆலயமின்றி ஆண்டவனை அடைய முடியாதா? என்று
.கேட்ட கேள்விக்கு பதில் சொல்லும் முன், அவனிடம்
கொஞ்சம் தண்ணீர் கிடைக்குமா? என்று சுவாமி கேட்டார்.
அவன் உடனே ஓடிப் போய் ஒரு சொம்பு நிறையத் தண்ணீர் கொண்டுவந்தான் சுவாமி கேட்டார். நான் தண்ணீர்தானே கேட்டேன். எதற்கு இந்த சொம்பு.? செம்பு இல்லாமல் தண்ணீர் கொண்டு வரமுடியாதா?
குழம்பிப் போனான் அது எப்படி முடியும்? என்று கேட்டான்.
இப்போது, பதில் சொன்னார் சுவாமி தண்ணீரைக் கொண்டுவர சொம்பு தேவைப்படுவது போல, ஆண்டவனை உணர்ந்து மகிழ, ஓர் இடம் வேண்டாமா?
.அதுதான் ஆலயம். ஆனாலும், சொம்பே தண்ணீர் ஆகாது.
ஆலயமே ஆண்டவனாகாது.
- திரு. ரஞ்சீத்.V. C