கொரோனாவில் இருந்து தமிழகத்தை மீட்டது தமிழக முதல்வர் ஸ்டாலின் தான் என தி.மு.க. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சிரிப்பலையை ஏற்படுத்தியுள்ளது.
ஈரோடு கிழக்கு சட்டமன்ற உறுப்பினராக இருந்தவர் திருமகன் ஈவெரா. இவர், கடந்த மாதம் மரணமடைந்தார். அந்த வகையில், அந்த தொகுதி காலியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில், பிப்-27 அன்று இடைத்தேர்தல் நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் அறிவித்து இருந்தது. அதன்பொருட்டு, தற்போது தேர்தல் களம் சூடுபிடித்துள்ளது. அந்தவகையில், அ.தி.மு.க. சார்பில் தென்னரசு களம் காண்கிறார். அதேபோல, காங்கிரஸ் சார்பில் இ.வி.கே.எஸ். இளங்கோவன் களத்தில் நிற்கிறார்.
இதனை தொடர்ந்து, தங்களது வேட்பாளர்களை ஆதரித்து அக்கட்சியின் தலைவர்கள் தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகின்றனர். அந்தவகையில், தனது கூட்டணி கட்சியின் வேட்பாளரான இளங்கோவனை ஆதரித்து அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் ஈரோட்டில் பிரச்சாரம் மேற்கொண்டார்.
அந்தவகையில், அவர் பேசும் போது இவ்வாறு கூறினார் ; தமிழகத்தை கொரோனா தொற்றிலிருந்து மீட்டது தமிழக முதல்வர் ஸ்டாலின்தான். பிரதமர் மோடி நாட்டு மக்களை வெளியில் வந்து கைதட்டவும், விளக்கு பிடிக்க மட்டுமே கூறினார் என அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வழக்கம் போல வாய் கூசாமல் பொய் பேசியிருக்கிறார். இதற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனங்களை தெரிவித்து வருகின்றனர்.
மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.