தேன்கனிக்கோட்டையில் செயல்பட்டு வரும் அரசு மேல்நிலை பள்ளியின் சுற்றுச்சுவர் இடிந்து விழும் நிலையில் உள்ளது. இதன், மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்
கிருஷ்ணகிரி மாவட்டம் ஓசூர் அடுத்த தேன்கனிக்கோட்டையில் சுமார் 5 ஏக்கர் பரப்பளவில் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி செயல்பட்டு வருகிறது. இப்பள்ளியில், சுமார் 600-க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இப்பள்ளியின், சுற்றுச்சுவர் பாதி இடிந்த நிலையில் உள்ளது. இந்த சுவரை சீரமைக்கும் பணியை மேற்கொள்ளாமல், கருங்கற்கலைக்கொண்டு பள்ளி நிர்வாகம் முட்டு கொடுத்து இருக்கிறது.
அதேபோல, இப்பள்ளியில் உள்ள கழிப்பறைகளுக்கு போதிய தண்ணீர் வசதி இல்லை. மேலும், மாணவர்களுக்கு குடிக்க தூய்மையான குடிநீரும் இல்லை என்று சொல்லப்படுகிறது. இதனை தொடர்ந்து, பள்ளி வளாகத்தின் பின்புறத்தில் சுற்றுசுவர் இல்லாததால் இரவு நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாக மாறியுள்ளது.
80 கோடியில் மெரினா கடலில் சிலை அமைக்க நிதி இருக்கிறது. அரசு பள்ளியின் சுற்றுச்சுவரை சீரமைக்க துட்டு இல்லையா? என நெட்டிசன்கள் கேள்வி எழுப்பி வருகின்றனர்