இந்தியா சீனா இடையே எல்லையில் பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், அருணாசலப் பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி என அமெரிக்கா தீர்மானம் இயற்றியுள்ளது.
இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதியான அருணாசலப் பிரதேச மாநிலத்தை சீனா தங்களுடைய பகுதி என தொடர்ந்து சொந்தம் கொண்டாடி வருகிறது. அந்த வகையில், இந்திய – சீன இடையே எல்லை பகுதியில் பெரும் பதற்றம் ஏற்பட்டுள்ளது.
இப்படிப்பட்ட சூழலில், அமெரிக்க நாடாளுமன்ற மேலவையான செனட் சபையில், எம்.பி.க்கள் பில் ஹேகர்டி, ஜெப் மெர்க்லே ஆகியோர் ஒரு தீர்மானத்தை கொண்டு வந்தனர். அதில், அருணாசல பிரதேசம் இந்தியாவின் ஒருங்கிணைந்த பகுதி எனவும், மெக்மோகன் கோட்டை இருநாடுகள் இடையேயான சர்வதேச எல்லையாக அமெரிக்கா அங்கீரித்துள்ளது என்று தெரிவித்தனர். எல்லை விவகாரத்தில், உண்மை தன்மையை மாற்ற சீனா தான் முயற்சி செய்கிறது என குற்றம் சாட்டியுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.