காசி தமிழ் சங்கமத்தை தொடர்ந்து செளராஷ்டிரா தமிழ் சங்கமத்தை பா.ஜ.க. துவங்கியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இதுகுறித்து, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட பதிவில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்
நமது மாண்புமிகு பாரதப் பிரதமர் மோடி அவர்களின் ஒரே பாரதம் உன்னத பாரதம் எனும் உயரிய நோக்கின் ஒரு படியாக, தமிழகம் மற்றும் குஜராத் இடையேயான தொடர்புகளைக் கொண்டாடும் வகையில், சௌராஷ்டிரா தமிழ் சங்கமத்திற்கான அறிவிப்பு இன்று சென்னையில் வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் பங்கேற்க https://saurashtra.nitt.edu எனும் இணைப்பில் பதிவு செய்யவும். இந்த நிகழ்ச்சியை, மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு டாக்டர் மன்சுக் மாண்டவியா அவர்கள் இன்று தொடங்கி வைத்தார். மாண்புமிகு மத்திய அமைச்சர் திரு. அனுராக் தாக்கூர் மத்திய இணையமைச்சர் திரு. எல்.முருகன், குஜராத் மாநிலத்தின் மாண்புமிகு அமைச்சர்கள் திரு. குன்வர்ஜி பவாலியா மற்றும் ஜகதீஷ் விஸ்வகர்மா ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
சௌராஷ்டிரா மத்திய சபா தலைவர் டாக்டர் VR ராஜேந்திரன் மற்றும் குஜராத்தி சமாஜ் தலைவர் திரு ரமேஷ் பட் ஆகியோர் கலந்து கொண்டனர். தமிழகத்தில் சௌராஷ்டிர சகோதர சகோதரிகளின் பூர்வீகத்தைக் கண்டறியும் முயற்சியாகத் தொடங்கப்பட்டுள்ள சௌராஷ்டிரா தமிழ் சங்கமம், ஏப்ரல் 17, 2023 அன்று தொடங்கி, 10 நாள் நிகழ்ச்சியாக சோம்நாத், துவாரகா, ராஜ்கோட் மற்றும் ஏக்தா நகர் (Statue of Unity) ஆகிய இடங்களில் நடைபெறவுள்ளது.