வரும் நாடாளுமன்ற தேர்தலில் தனித்து போட்டியிட வேண்டும் என்ற அண்ணாமலையின் முடிவு தி.மு.க. கூட்டணியில் பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை. இவரது, எளிமை, பணிவு மற்றும் துணிச்சலான பேட்டி இளைஞர்கள் மத்தியில் பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. அந்த வகையில், பலர் பா.ஜ.க.வில் இணைந்து வருகின்றனர். குறிப்பாக, மாற்று கட்சியை சேர்ந்த தலைவர்கள் கூட பா.ஜ.க.வை நோக்கி நகர்ந்து வருகின்றனர். இவரது, வளர்ச்சியை பிடிக்காமல், தி.மு.க., காங்கிரஸ், வி.சி.க. உள்ளிட்ட கட்சிகள் மற்றும் தி.மு.க.வின் அதன் அடிமை ஊடகங்கள் தொடர்ந்து அவதூறு பிரச்சாரங்களை செய்து வருகின்றன.
எனினும், அதுகுறித்தெல்லாம் கவலைப்படாமல் பா.ஜ.க. தொடர்ந்து முன்னேறி வருகிறது. இப்படிப்பட்ட சூழலில், எதிர்வரும் 2024 நாடாளுமன்ற தேர்தலில் பா.ஜ.க. தனித்து களம் காண வேண்டும் என அண்ணாமலை தனது எண்ணத்தை வெளிப்படுத்தி இருக்கிறார். இதில், அவரது மனதில் ஓடும் எண்ணம் இதுவாக கூட இருக்கலாம்.
- அ.தி.மு.க. தலைமை தற்போது வலுவாக இல்லை. அவர்களது, ஓட்டு பா.ஜ.க.விற்கு முழுமையாக கிடைக்காது என்ற எண்ணம்.
- அ.தி.மு.க.வின் வாக்காளர்களை பா.ஜ.க.வின் பக்கம் திருப்புவது.
- இளம் புதிய வாக்காளர்களை மோடியின் பக்கம் இழுப்பது.
- விடியல் அரசு மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள கோவம். அதன் பலனை 2024-ல் அறுவடை செய்வது.
- பா.ஜ.க.வின் வாக்கு வங்கியை உயர்த்துவது. சிறுபான்மை மக்களின் எதிரி என்ற பிம்பத்தை உடைப்பது.
- பா.ஜ.க.வில் உள்ள குள்ள நரிகளை அடையாளம் காட்டுவது.
- தேசநலன் கொண்டவர்களை அதிகம் உருவாக்குவது.
- பா.ஜ.க. தொண்டர்களுக்கு நம்பிக்கையை விதைப்பது.
- அ.தி.மு.க., தி.மு.க.விற்கு மாற்று இனி பா.ஜ.க. தான் என்ற நிலையை ஏற்படுத்துவது.
- குடும்ப ஆட்சிக்கு முற்றுபுள்ளி, சீரழிந்த தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றுவது.
- இளம் தலைவர்களை தமிழகத்தில் உருவாக்குவது.
- etc…
இதுதான் தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலையின் எண்ணமாக இருக்கலாம் என்பதே அனைவரின் கருத்தாக உள்ளது. தனித்து களம் காண வேண்டும் என்ற அவரது எண்ணம் தி.மு.க. கூட்டணியில் உள்ள சில்லறை கட்சிகளுக்கு நிச்சயம் இனிமா கொடுத்து இருக்கும் என்பதில் யாருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.