திருத்தணியில் அமைக்கப்பட்டு வரும் மழைநீர் வடிகால் பணிகளை பார்த்துவிட்டு மக்கள் புல்லரித்துப்போய் இருக்கிறார்கள்.
திருவள்ளூர் மாவட்டம் திருத்தணி நகராட்சி பகுதியான பைபாஸ் சாலையில் நெடுஞ்சாலைத்துறை சார்பில் மழைநீர் வடிகால் அமைக்கும் பணிகள் நடந்து வருகிறது. இந்த சூழலில், திருத்தணி பகுதியில் 2 நாட்களாக நல்ல மழைபெய்தது. இதனால், மழைநீர் வடிகாலுக்காக தோண்டப்பட்டிருந்த பள்ளங்களில் மழைநீர் தேங்கி நின்றது. ஆனால், நெடுஞ்சாலைத் துறையினர் இந்த மழைநீரை அகற்றாமல் அதன் மீதே கான்கிரீட் கலவையை கொட்டி, மழைநீர் வடிகால் அமைத்து வருகின்றனர். இதை பார்த்துவிட்டுத்தான் மக்கள், அட அட அட, என்ன அழகா மழைநீர் வடிகால் அமைக்கிறாங்க என்று புல்லரித்துப்போய் பேசி வருகிறார்கள்.
இந்த வீடியோ சமூக வலைத்தளங்களில் வைரலாகி பலரது கண்டனத்தையும் பெற்றிருக்கிறது. மழைநீர் வடிகால் அமைக்கும் அழகை கீழே உள்ள வீடியோவை கிளிக் செய்து நீங்களும் பார்த்து ரசியுங்கள்…