சுவாமிக்கு மாலை போட்டு வந்த மாணவர்: அனுமதி மறுத்த கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம்!

சுவாமிக்கு மாலை போட்டு வந்த மாணவர்: அனுமதி மறுத்த கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம்!

Share it if you like it

ஆஞ்சநேயர் சுவாமிக்கு மாலை போட்டுக் கொண்டு வந்த மாணவருக்கு கிறிஸ்தவ பள்ளி நிர்வாகம் அனுமதி விவகாரம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

ஆந்திராவிலிருந்து தெலங்கானா தனி மாநிலமாகப் பிரிந்த நிலையில், இன்னொரு தமிழகமாக மாறி வருகிறதோ என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது. பா.ஜ.க.வுடன் கூட்டணியில் இருந்த அம்மாநில முதல்வர் சந்திரசேகர ராவ், திடீரென தனது நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார். இதன் பிறகு, ஹிந்துக்களுக்கு எதிரான நடவடிக்கைகளில் சந்திரசேகர ராவ் அரசு ஈடுபட்டு வருவதாக குற்றச்சாட்டு எழுந்திருக்கிறது.

இந்த சூழலில்தான், தெலங்கானாவில் ஆஞ்சநேயருக்கு மாலை போட்டுக் கொண்டு பள்ளிக்குச் சென்ற மாணவனை உள்ளே அனுமதிக்கத் தடை விதித்த சம்பவம் அரங்கேறி இருக்கிறது. அதிலாபத் மாவட்டம் உண்டூரில் இயங்கி வருகிறது செயிண்ட் பால் உயர்நிலை பள்ளி. இப்பள்ளியில் அபினவ் என்கிற மாணவர் 6-ம் வகுப்பு படித்து வருகிறான். இந்த சூழலில், ஆஞ்சநேயர் சுவாமிக்கு அபிநவ் மாலை போட்டுக் கொண்டிருக்கிறான். எனவே, காவி உடை அணிந்தபடி பள்ளிக்குச் சென்றிருக்கிறான்.

ஆனால், அபினவ்வை பள்ளிக்குள் அனுமதிக்க மறுத்துவிட்ட நிர்வாகம், சீருடையுடன் வருமாறு கூறி, வீட்டுக்கு அனுப்பி விட்டது. இத்தகவல் ஹிந்து அமைப்பினர் மத்தியில் பரவியது. இதையடுத்து, ஆஞ்சநேய பக்தர்களும், ஹிந்து அமைப்பினரும் சென்று பள்ளியை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். இதன் பின்னர், பள்ளி நிர்வாகம் மன்னிப்புக் கேட்டுக் கொண்டதோடு, காவி உடையணிந்து அபினவ் பள்ளிக்கு வரலாம் என்று கூறியது. இதையடுத்தும் போராட்டம் கைவிடப்பட்டது.


Share it if you like it