ஆர்.எஸ். பாரதியின் மீது தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மானநஷ்ட வழக்கு தொடர்ந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை கடந்த ஏப்-14-ஆம் தேதி தி.மு.க.வின் சொத்து பட்டியலை வெளியிட்டார். இதில், தமிழக முதல்வர் ஸ்டாலின் குடும்பம் மற்றும் தி.மு.க. அமைச்சர்கள், எம்.பி.க்களின் சொத்து பட்டியலும் அடக்கம். இவ்வளவு பணத்தை தி.மு.க.வினர் எப்படி சேர்த்தனர்? என பொதுமக்கள் கேள்வி எழுப்பினர். சமூக வலைத்தளங்களில் இதுகுறித்து நெட்டிசன்கள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருகின்றனர்.
இந்த நிலையில், தி.மு.க. மூத்த தலைவர் ஆர்.எஸ். பாரதி, தமிழக பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை மீது மானநஷ்ட வழக்கு தொடர்ந்தார். அதில். தி.மு.க.வினர் மீது கூறிய குற்றச்சாட்டிற்கு மன்னிப்பு கேட்க வேண்டும். மேலும், 500 கோடி ரூபாய் இழப்பீட்டு தொகை வழங்க வேண்டும் என வழக்கறிஞர் நோட்டீஸில் தெரிவித்திருந்தார். தவிர, ஆருத்ராவிடம் அண்ணாமலை ரூ.84 கோடி பணம் பெற்றதாகவும் ஆர்.எஸ். பாரதி குற்றச்சாட்டினை முன்வைத்திருந்தார்.
இந்நிலையில், ( ரூ. 84 கோடி ) பணம் பெற்றதாக தன் மீதும், பா.ஜ.க.வின் மீதும் வீண் பழி சுமத்திய ஆர்.எஸ். பாரதி ரூ.501 கோடி இழப்பீடு தொகையை வழங்க வேண்டும் என பதிலுக்கு வழக்கறிஞர் நோட்டீஸை அண்ணாமலை அனுப்பி இருக்கிறார்.
இந்த அசிங்கம் உனக்கு தேவையா? என நெட்டிசன்கள் ஆர்.எஸ். பாரதியை விமர்சனம் செய்து வருகின்றனர்.