ரூ.12,000 கோடி சொத்து…103 கொலை வழக்கு… 45 வருட ரவுடி சாம்ராஜ்ஜியம்: முற்றுப்புள்ளி வைத்த புல்டோசர் பாபா!

ரூ.12,000 கோடி சொத்து…103 கொலை வழக்கு… 45 வருட ரவுடி சாம்ராஜ்ஜியம்: முற்றுப்புள்ளி வைத்த புல்டோசர் பாபா!

Share it if you like it

உத்தரப்பிரதேச மாநிலம் அலகாபாத்தைச் சேர்ந்தவன் அத்தீக் அகமது. பிரபல தாதாவான இவன் மீது 30-க்கும் மேற்பட்ட கொலை வழக்குகளும், 60-க்கும் மேற்பட்ட ஆள்கடத்தல் உள்ளிட்ட வழக்குகளும் நிலையில் உள்ளன. திடீரென அரசியல் கட்சியைத் தொடங்கிய அத்தீக் அகமது பின்னர் சமாஜ்வாதி கட்சியில் இணைந்தான். இதை தொடர்ந்து, மேற்கு அலகாபாத் தொகுதியில் நின்று எம்.எல்.ஏ.வாக தேர்வு செய்யப்பட்டார்.

அந்த வகையில், 5 முறை தொடர்ந்து எம்.எல்.ஏ.வாக இவர் இருந்துள்ளார். 2004 – 2009 வரை புல்பூர் மக்களவை தொகுதி எம்.பி.யாக பதவி வகித்துள்ளார். அதேவேளையில், அத்தீக் அகமது தனது ரவுடி சாம்ராஜ்ஜியத்தை உ.பி. மாநிலம் முழுவதும் விரிவுப்படுத்தி இருக்கிறான்.

இந்த சூழலில், கடந்த 2017-ம் ஆண்டில் உத்தர பிரதேசத்தின் முதல்வராக யோகி ஆதித்யநாத் பதவியேற்றார். அப்போது, முதல் அத்தீக் அகமது மற்றும் அவரது அடியாட்கள் 89 பேர் மீதான நடவடிக்கை தீவிரப்படுத்தப்பட்டது. அவரது ரூ. 12,000 கோடி மதிப்புள்ள சொத்துகள் முடக்கப்பட்டன.

அத்தீக் அகமதுவுக்கு 5 மகன்கள். இவர்களில், மூத்த மகன் மற்றும் இரண்டாவது மகன் சிறையில் உள்ளனர். அண்மையில், மூன்றாவது மகன் என்கவுண்டர் செய்யப்பட்டார்.

கடைசி 2 மகன்களும் மைனர்கள். அவர்கள் சிறார் சீர்திருத்தப் பள்ளியில் படித்து வருகின்றனர். உ.பி.யில் கொடி கட்டி பறந்து வந்த ரவுடியின் சாம்ராஜ்ஜியத்திற்கு யோகி முடிவு கட்டியுள்ளார் என சமூக ஆர்வலர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

உ.பி.யில் இதுவரை 10,713 என்கவுண்ட்டர்கள் நடைபெற்றுள்ளதாக அம்மாநில அரசு வெளியிட்ட ஆவணங்களில் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Share it if you like it