Share it if you like it
- ஊரடுங்கு உத்தரவினால் திரிபுராவில் உள்ள பால் விநியோகம் செய்யும் உரிமையாளர்கள் மிகுந்த பாதிப்புக்குள்ளாகியுள்ளனர். திரிபுராவில் அகர்தலா அருகே கோலாபஸ்தி என்ற பகுதியில் பால் விற்பனையாளர்கள் அதிகம் வசித்து வருகின்றனர். ஊரடங்கு உத்தரவினால் பாலின் விலை வெகுவாக குறைந்து வருவதால் சேமிப்பு வசதியும் இல்லாததால் அந்த பாலை வீணாக வடிகாலில் கொட்டுகின்றனர்.
- கோலாபஸ்தியில் கிட்டத்தட்ட நானூறு குடும்பங்கள் உள்ளன. அவர்களுக்கு குறைந்தது நூறு மாடுகள் உள்ளன. பொதுவாக பாலை இனிப்பு பண்டங்கள் செய்யும் கடைகளிடம் விற்பனை செய்வோம். தற்போது ஊரடங்கினால் கடைகள் எல்லாம் மூடப்பட்டுள்ளது. எனவே எங்களுக்கு தேவையான பாலை மட்டும் வைத்துக்கொண்டு மீதம் உள்ளதை வெளியில் கொட்டிவிடுவதாகவும் அங்குள்ள 63 வயதான தினேஷ் ராய் கூறுகிறார். கோலாபஸ்தியில் வசிக்கும் சுபாஷ் ராய், எங்கள் மாடுகளுக்கு தீவனம் இல்லை. ஊரடங்கினால், எங்கள் பால் விற்பனை குறைந்தது. காவல்துறையினர் வீதிகளில் இருப்பதால், பயம் காரணமாக நாங்கள் வீட்டை விட்டு வெளியே செல்வதில்லை. நாங்கள் பட்டினியை எதிர்கொள்ள நேரிடும் என்று நாங்கள் அஞ்சுகிறோம். இவ்வாறு கூறுகிறார்.
- கொரோனா வைரஸ் தொடர்பான எந்தவொரு வழக்கையும் திரிபுரா இதுவரை தெரிவிக்கவில்லை. மாநிலத்தில் மொத்தம் 88 பேர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டனர். மொத்தம் 5,267 பேர் வீட்டு தனிமைப்படுத்தலின் கீழும், 49 பேர் நிறுவன தனிமைப்படுத்தலின் கீழும் உள்ளனர் என்று சமீபத்திய தகவல்கள் தெரிவிக்கின்றன.
Share it if you like it