ம.தி.மு.க.வை தி.மு.க.வோடு இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை – வைகோ திட்டவட்டம்!

ம.தி.மு.க.வை தி.மு.க.வோடு இணைக்கும் பேச்சுக்கே இடமில்லை – வைகோ திட்டவட்டம்!

Share it if you like it

ம.தி.மு.க.வை தி.மு.க.வோடு இணைக்கும் எண்ணம் கிடையாது என அக்கட்சியின் பொதுச் செயலாளர் வைகோ உறுதிப்பட தெரிவித்துள்ளார்.

தி.மு.க.வின் மிக மூத்த தலைவர்களில் ஒருவராக திகழ்ந்தவர் வைகோ. இவர், தி.மு.க.வில் வாரிசு அரசியல் இருப்பதாக கூறி அக்கட்சியில் இருந்து வெளியேறினார். இதையடுத்து, மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகம் என்ற கட்சியை நிறுவினார். வைகோவின் தவறான முடிவினால் ம.தி.மு.க. மக்களிடம் தனது செல்வாக்கை இழந்தது. இதையடுத்து, கட்சியை காப்பாற்றும் வண்ணம் தி.மு.க.விடம் வைகோ தஞ்சம் அடைந்தார். இதனை தொடர்ந்து, கடந்த சட்டமன்ற தேர்தலில் உதயசூரியன் சின்னத்தில் ம.தி.மு.க. 6 இடங்களில் போட்டியிட்டு 4 இடத்தில் வெற்றி பெற்றது.

சொந்த சின்னத்தில் கூட நிற்க முடியாமல் ம.தி.மு.க. தேய்ந்து விட்டது என அக்கட்சியின் மூத்த தலைவர்கள் பலர் தங்களது ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருந்தனர். இப்படிப்பட்ட சூழலில், சென்னையில் செய்தியாளர்களிடம் ம.தி.மு.க. தலைவர் வைகோ பேசும் போது இவ்வாறு கூறினார் : “மதிமுகவில் தற்போது உள்கட்சித் தேர்தல் நடைபெற்று வருகிறது. 70 சதவீத தேர்தல் முடிந்துள்ளது. அனைவரும் ஒற்றுமையாக இருந்து தேர்தலை நடத்திக்கொண்டிருக்கிறோம். சிறு சலசலப்பும் எங்கும் கிடையாது. விரைவில் கட்சியின் பொதுக்குழு கூட இருக்கிறது. மதிமுக தற்போது முக்கிய காலகட்டத்தில் இருக்கிறது. மதிமுகவை, திமுகவோடு இணைத்துவிட வேண்டும் என கட்சியின் அவைத் தலைவர் திருப்பூர் துரைசாமி கூறி இருப்பது குறித்து கேட்கிறீர்கள்.

மதிமுகவை திமுகவோடு இணைக்கும் எண்ணம் இல்லை. அவருக்கு வேண்டுமானால், உள்நோக்கம் இருக்கலாம். மதிமுகவின் 99.90 சதவீத தொண்டர்களுக்கு அத்தகைய எண்ணம் இல்லை. கட்சியில் குழப்பம் இருப்பதுபோல சித்தரிக்க முயற்சி நடந்தது. அந்த முயற்சி தோற்றுப்போய்விட்டது. இதற்கு மேல் திருப்பூர் துரைசாமிக்கு முக்கியத்துவம் கொடுக்க விரும்பவில்லை. பொதுக்குழு கூட்டத்திற்குப் பிறகு மதிமுக இன்னும் வேகமாக செயல்படும்” என தெரிவித்தார்.


Share it if you like it