தமிழக நிதியமைச்சர் விளக்கம் தந்த பின்பு அதனை பெரிதுப்படுத்த வேண்டாம் என தி.மு.க. தலைவர் ஸ்டாலின் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பெரும் சிரிப்பலையை ஏற்படுத்தி இருக்கிறது.
தி.மு.க. மூத்த தலைவர் மற்றும் நிதியமைச்சராக இருப்பவர் பழனிவேல் தியாகராஜன். இவர், அண்மையில் பேசிய ஆடியோ ஒன்று வெளியாகி பொதுமக்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருந்தது. அந்த, ஆடியோவில் அவர் கூறியதாவது ; கடந்த ஒரு வருடத்திற்குள் சபரீசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் சுமார் ரூ. 30,000 கோடி சொத்து குவித்துள்ளனர் என்ற திடுக்கிடும் தகவலை கூறியிருந்தார். இந்த சம்பவம்தான் தற்போது பொதுமக்கள் மத்தியில் பேசுப்பொருளாக மாறியிருக்கிறது.
இதையடுத்து, அந்த ஆடியோவிற்கும் தனக்கும் எந்தவிதமான தொடர்பும் இல்லை என்று நிதியமைச்சர் விளக்கம் கொடுத்தார். அந்த ஆடியோ பி.டி.ஆர். உடையதுதான் என்னிடம் ஆதாரம் உள்ளது என தமிழக பா.ஜ.க. தலைவர் கூறியிருந்தார். இப்படிப்பட சூழலில், பி.டி.ஆர். விளக்கம் கொடுத்த பின்பு அதுகுறித்து மேலும் பேச வேண்டாம் என தமிழக முதல்வர் கூறியிருப்பது பொதுமக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
சாதாரண மீம்ஸ்க்கே வழக்கு போடும் விடியல் அரசு இச்சம்பவத்தில் கடந்து செல்ல முயல்வதுதான் ஹைலைட் என்பது குறிப்பிடத்தக்கது.