‘தி கேரளா ஸ்டோரி’ திரைப்படம் ஹிந்துக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றிருக்கிறது. குறிப்பாக, ஹிந்து பெண்கள் வீதிவீதியாகச் சென்று போஸ்டர் ஒட்டும் அளவுக்கு மிகப்பெரிய எழுச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
தயாரிப்பாளர் விபுல் அம்ருத்லால் ஷா தயாரிப்பில், இயக்குநர் சுதிப்தோ சென் இயக்கத்தில், அதா சர்மா, யோகிதா பிகானி, சோனியா பாலானி மற்றும் சித்தி இத்னானி ஆகியோர் நடிப்பில் கடந்த 5-ம் தேதி வெளியான திரைப்படம் தி கேரளா ஸ்டோரி. தமிழ், மலையாளம், தெலுங்கு, கன்னடம், ஹிந்தி, வங்காளம் ஆகிய மொழிகளில் தயாரிக்கப்பட்டிருக்கும் இப்படம், உலகம் முழுவதும் 37 நாடுகளில் வெளியானது. சுமார் 100 கோடி ரூபாய் வசூல் செய்திருக்கும் இப்படம், 2023-ம் ஆண்டு வெளியான ஹிந்தி படங்களில் வசூல் சாதனையில் 5-வது இடத்தை பிடித்திருக்கிறது.
இது ஒருபுறம் இருக்க, இந்த படம் கேரளாவில் ஹிந்து மற்றும் கிறிஸ்தவ இளம்பெண்கள் லவ்ஜிகாத் என்னும் காதல் வலையில் வீழ்த்தப்பட்டு, மதமாற்றம் செய்யும், ஐ.எஸ்.ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு அடிமைகளாக விற்கப்படுவதை தோலுரித்துக் காட்டி இருக்கிறது. ஆகவே, இப்படம் ஹிந்துக்கள் மட்டுமல்லாது கிறிஸ்தவர்கள் மத்தியிலும் மிகப்பெரிய வரவேற்பையும், எழுச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. காரணம், கேரளாவில் ஏராளமான இளம்பெண்கள் லவ்ஜிகாத்தால் பாதிக்கப்பட்டிருப்பதுதான். ஆகவே, ஹிந்து இளம்பெண்கள் இப்படத்தை புரொமோஷன் செய்வதில் மிகவும் ஆர்வம் காட்டி வருகின்றனர்.
அந்த வகையில், வடமாநிலங்களில் தி கேரளா ஸ்டோரி திரைப்படத்தின் போஸ்டர்களை இளம்பெண்கள் வீதிவீதியாக ஒட்டி வருகிறார்கள். மேலும், படத்தை பார்த்த ஹிந்து பெண்கள், லவ்ஜிகாத் காதல் வலையில் விட்டில் பூச்சிகளாக விழும் இளம்பெண்களுக்கு இப்படம் ஒரு பாடம் என்று கூறிவிருகிறார்கள். இது தொடர்பான வீடியோக்கள் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.