சிவாஜி என்ற வீரத்திருமகன் பிறவாமல் போயிருந்தால் காசியும் ராமேஸ்வரம் நம்மிடம் இல்லாமல் போயிருந்திருக்கும் தஞ்சை பாலையாக மாறி இருக்கும் ஸ்ரீரங்கநாதர் பாற்கடலுக்கு பதிலாக வங்கக்கடலுக்கு நடுவே வாசம் செய்திருப்பார். வள்ளுவனையும் பாரதியும் பயின்று வரும் நம் பிள்ளைகள் உருதும் அரபும் படித்து அரேபியா தேசத்திற்கு அடிமையாக இருந்திருப்பார்கள், நிமிர்ந்த நடையும் நேர்கொண்ட பார்வையும் நிலத்தில் யாருக்கும் அஞ்சாத துணிவும் கொண்ட நம் வீட்டு தாய்மார்கள் முகத்தில் பர்தா அணிந்து உள்ளத்தில் ஒளி இழந்து வாழும் அவல நிலைக்கு சென்று இருப்பர்.
பாரத தேசம் பல ஆயிரம் ஆண்டுகளாக அசுரர்கள் கயவர்கள் காட்டுமிராண்டிகள் மூலம் பல துன்பங்களை சந்தித்துள்ளது. ஒவ்வொரு முறை இன்னல் ஏற்படும்பொழுது அதிலிருந்து வெளிவர யுவ புருஷன் ஒருவன் தோன்றுவான் ராவணன் கொன்ற ராமன் போல் கம்சனை அளித்த கிருஷ்ணன் போல் மகிஷன் அளித்த மகிஷாசுரமர்த்தினி போல் அலெக்ஸாண்டருக்கு சிம்ம சொப்பனமாக விளங்கிய புருஷோத்தமனை போல் காட்டுமிராண்டிகளான முகலாய கொடுங்கோலான அவுரங்கசீப்பிற்கு பாடம் புகட்ட பிறந்தவன் வீரசிவாஜி.
ஏழாம் நூற்றாண்டில் அரேபியர்களுக்கும் இந்தியர்களுக்கும் ஆரம்பித்தது போர் 300 ஆண்டுகள் நமது தேசத்தில் வலிமைமிக்க போர் செய்து சிந்து நதிக்கரைக்கு அப்பால் ஒரு சதுர அடி கூட பிடிக்க விடாமல் வலிமையான போர் நடத்தி வந்தனர் . நமது பள்ளி பாட புத்தகங்கள் இதைப் பற்றி ஒன்று நமக்கு கற்றுத் தருவதில்லை. வீரத்தால் பிறந்த தேசம் துரோகத்தால் வீழ்ந்தது. முதல் முறை ஆயிரம் ஆவது வருடம் பிரித்விராஜ் தோற்க, முகலாயர்கள் காந்தாரம் முதல் குமரி வரை தங்களது கொடுங்கோலாட்சியை நிறுவினர். மீனாட்சி அம்மன் கோயில் தீக்கரையாக்கப்பட்டது.
ஸ்ரீரங்கத்தில் பன்னிரண்டாயிரம் பேர் ஒரே நாளில் தங்களை பலிதானமாக கொடுத்தனர். கங்கைகொண்ட சோழபுரம் சோழர்களின் பெரும் தலைநகரம் காணாமல் போனது. வாரங்கல் ஏழு தடுப்புகளை கொண்ட கோட்டை தகர்ந்தது பிறர் மனை நோக்கு கூடாது என்று உயரிய தத்துவம் கொண்ட தேசத்தில். குஜராத் மன்னனின் மனைவியை கவர்ந்தான் அலாவுதீன் கில்ஜி இத்தக கொடுங்கோள் ஆட்சியை விஜயநகரபேரசு ஒரு முடிவு கொண்டு வந்த போதிலும் பின்னால் அவர்களும் துரோகத்தால் வீழ்ச்சி அடைய முகலாயர்கள் டெல்லியின் அரியணை ஏறினர் எண்ணற்ற கொடுங்கோல்களை புரிந்தனர்.
பாபர், அக்பர், ஹிமாயூன், ஷாஜகான், ஜஹாங்கீர், அவுரங்கசீப் என்ற எண்ணற்ற கொடுமையாளர்களின் ஆட்சி நடந்து கொண்டிருந்தது. இதில் கொடுமை என்னவென்றால் ஷாஜகானை காதல் தேவனாக கருதும் பழக்கம் நம்மிடம் இப்பொழுது வந்துவிட்டது. அவன் கட்டிய தாஜ்மஹாலின் மூலம் இந்தியாவில் ஒரு மிகப்பெரிய பஞ்சத்தை உருவாக்கி பல இந்தியர்களை பலியாக்கிய கொடுங்கோலன் அவன். இத்தகைய இக்கட்டான சூழ்நிலையில் பாரத தேசம் பல நூற்றாண்டுகளாக கார் இருளில் மூழ்கியுள்ள பொழுது, திஜா பாய் மகனாகப் பிறந்தான் வீரசிவாஜி.
அன்னையின் அரவணைப்பில் தேசப்பற்றும் பிரித்விராஜ் சவ்தானின் வீரக்கதையும் ராமன் ராவணனை கொன்ற கதையும் கிருஷ்ணன் கம்சனை கொண்ட கதையும் சிறுவயதிலேயே கேட்டு இந்த தேசமும் இந்த தேசத்தில் உள்ள தர்மத்தையும் அதன் கலாச்சாரங்களின் பழக்கவழக்கங்களையும் நன்கு உணர்ந்தவனாய் 15 வயதில் வீரக்கலைகள் பலவற்றைக் கற்று தனது கன்னிப்போரை துவக்கி அதில் வெற்றியும் கொண்டான். அக்காலத்தில் கோட்டையே அதை சுற்றியுள்ள நகரை கட்டுப்படுத்தும் திறன் கொண்டதாக இருந்தது. அப்படி இருக்கும் பொழுது சிறு படையை கொண்டு தோரணக் கோட்டையில் உள்ள பெரும்படையை வீழ்த்தி முகலாயர்களின் கண்ணில் முதல் பயத்தை உருவாக்கியவன்.
அர்ஜுனனுக்கு துரோணர் போல் ராமருக்கு வசிஷ்டப் போல் சந்திரகுப்தனுக்கு சாணக்கியர் போல் சிவாஜி மகாராஜருக்கு சமர்த்த ராமர் தாசர், கொண்டதே என்று ஒப்பற்ற குருமார்கள் இருந்தனர். அவர்கள் மூலம் அரசியல் போர்க்களங்கள் இன்ன பிற கலைகளையும் கற்றுக் கொண்டான். போரில் எதிர்த்து நின்று போர் இடுவது மட்டுமல்லாமல் பின்வந்த தன்னை பலப்படுத்திக் கொண்டு மீண்டும் புலி போல் தாக்குவது சமயத்துக்கு தக்கவாறு சிந்தித்து முடிவுகளை எடுப்பது போன்றவற்றை தனது குருமார்கள் மூலம் சிவாஜி மிக எளிமையாக கற்றான். பிஜாபூர் கோட்டையின் தளபதியான அப்சல் கான் சிவாஜியை நட்புரீதியாக அழைத்தான். ஆனால், கயவர்கள் எதையும் செய்யக் கூடியவன் என்று முன்பே அறிந்து வைத்த சிவாஜி கையில் ஆயுதங்கள் ஏதும் இல்லாமல் விருந்தோம்பலை அனுசரிக்க சென்றார்.
தனது குருமார்கள் வழங்கிய ஆசியின் மூலம் புரிந்து வைத்திருந்த சிவாஜி தன் கையில் யாரும் அரியா வன்னம் புலி நகம் வைத்து அப்சல் கான் என்ற கொடுங்கோலனை வீழ்த்தினார். அப்சல் கானை கொன்றதன் மூலம் அவுரங்கசீப்பின் நேரடியாக எதிர்கொள்ள வேண்டிய நிலை வந்தது. ஒருமுறை அவுரங்கசீப் சிவாஜி மகாராஜை அவரது கோட்டையிலேயே சந்திக்க ஏற்பாடு ஒன்று நடந்தது. அதில் சிவாஜி மகாராஜை அவுரங்கசீப் கைது செய்து சிறைக்குள் வைத்தான். நரியைப் போல் வஞ்சமாக சிவாஜி மகாராஜை கைது செய்தனர்.
இது வஞ்சகத்தால் வீழ்ந்த தேசம் என்ற உணர்ந்த சிவாஜி ராமன் எப்படி வாலியை மறைந்திருந்து தாக்கினானோ, அதேபோல் சிறையில் இருந்து பழ குடையின் மூலம் தப்பித்து வெளியே வந்து அவுரங்கசீப்பிடமே ஒரு ஒப்பந்தம் போட்டு சிறிது காலம் எடுத்துக் கொண்டு தனது படையும் பராக்கிரமத்தின் பலப்படுத்திக் கொண்டு மீண்டும் முகலாயர்களை தாக்கி வென்றெடுத்தார். அவரோட ஒப்பற்ற சாதனை என்னவென்றால் அவர் இறந்த பின்பும் மராட்டிய சாம்ராஜ்யம் இமயம் முதல் தஞ்சை வரை ஒரு மாபெரும் சாம்ராஜ்யமாக கட்டி எழுப்பப்பட்டது.
கட்டுரையாளர் – ஜெய்கணேஷ்