Share it if you like it
- இயந்திரங்கள் மனிதன் நன்மைக்காக பெருகினாலும். இறுதியில் மனிதனாக இல்லாமல் இயந்திரமாக மாறி நல்லுணர்வுகளை இழப்பான்.
- இவ்வுலகில் நியாங்கள் செயலற்றுப் போகும் அநியாயங்களே தலையோங்கி நிற்கும்.
- உண்மைகள் பொய்யாகும்; பொய்மைகள் உண்மையாகத் தோன்றும்.
- நல்லவைகளுக்குப் பெருமை அற்றுப் போகும்; இவ்வுலகில் தீமைகளுக்கு தான் முதலிடம் அளிக்கப்படும்.
- பொருளாசை மக்களை மிருகமாக்கி, கொலை வெறியைத் தூண்டிவிடும்.
- மனிதருள் போட்டி, பொறாமை, பெருகி ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டு தாழ்வடைவர்.
- ஒருவர் பொருளை மற்றவர் அபகரித்துச் செல்வர்.
- சாந்தம் குறையும்; கோபம் அதிகரிக்கும்.
- கபட வேடதாரிகளால் மக்கள் ஏமாற்றப்படுவர்.
- போதைப் பொருள்கள் பெருகி, மக்கள் அதன் வாய்ப்பட்டு பெருவாரியாக அழிந்து போவார்கள்.
- உணவுப் பொருள்களின் தரம் குறைந்து, அற்ப லாபம் கருதி கலப்படம் செய்து விற்பனைக்கு வருவது பெருகும். அதனால் புதிய புதிய நோய்கள் பரவும்.
- கண்பார்வை மிகையாக கெடும்.
தொடரும்…
Share it if you like it