உதயமாகும் பலசிஸ்தான் – தனது 76 வது சுதந்திர ஆண்டில் சிதற தயாராகிறது பாகிஸ்தான்

உதயமாகும் பலசிஸ்தான் – தனது 76 வது சுதந்திர ஆண்டில் சிதற தயாராகிறது பாகிஸ்தான்

Share it if you like it

இந்திய விடுதலைக்கு முன் எங்களுக்கான இசுலாமிய நாட்டை வழங்க மறுத்தால் நாடு முழுவதும் இரத்த ஆறு ஓடும் என்றவர்கள்.

தங்களின் விருப்பத்திற்கு ஏற்ப தனி நாடு கண்டவுடன் இசுலாமியர் அல்லாதோர் என்ற ஒற்றை காரணமாக அங்குள்ள இந்துக்கள் – சீக்கியர்கள் கொன்று குவித்து அவர்கள் உதிரத்தை ஆறாக ஓட விட்டு நேரடி நடவடிக்கை என்றால் இது தான் . இப்படி தான் இருக்கும் என்று எக்காளமிட்ட ஜின்னாவின் பாகிஸ்தான் இன்று பல துண்டுகளாக சிதற தயாராகிறது.

எந்த காரணம் கொண்டும் பலுசிஸ்தான் பகுதியை பாகிஸ்தானோடு இணைக்காதீர்கள். எங்களை இந்தியாவிலிருந்து பிரிக்காதீர்கள். பிரிவினை தான் கட்டாயம் என்றாலும் எங்களை ஜின்னா என்ற உதிரம் குடிக்கும் ஓநாயோடு விட்டு விடாதீர்கள். தயவுசெய்து பலுசிஸ்தான் பகுதியை தனி நாடாக பிரகடனம் செய்து விடுங்கள் என்ற எல்லை காந்தி என்ற கான் அப்துல் காபர் கான் தலைமையிலான கோரிக்கையை ஏளனம் செய்து அவரை வாழ்நாள் முழுவதும் இந்திய – பாகிஸ்தான் மற்றும் ஆப்கானிஸ்தானின் எல்லைகளில் நாடோடியாக அலையவிட்டதற்கான விலையை இன்று பாகிஸ்தான் தர தயாராகிறது.

வங்க தேச பிரிவினையின் காரணங்களில் இருந்து பாகிஸ்தான் பாடம் கற்க மறந்ததன் பலன் இன்று அதன் வரலாற்று பிழைகள் யாவும் மீண்டும் படிப்பினையாக பலசிஸ்தான் வடிவில் பாகிஸ்தான் எதிரில் விஸ்வரூபம் எடுத்து நிற்கிறது. தனது 76 வது சுதந்திர தினத்தை சம்பிரதாயமாக கூட கொண்டாட முடியாத நிலைக்கு பாகிஸ்தான் தள்ளப்பட்டு விட்டது.

1971 க்கு முன்னர் கிழக்கு பாகிஸ்தானில் மிகப்பெரிய மழை வெள்ளம் வந்தது. அதன் விளைவாக பெரும் சேதமும் அடுத்து வரலாறு காணாத பஞ்சமும் ஏற்பட்டது. பாகிஸ்தான் தலைமை இருப்பவற்றையெல்லாம் மேற்கு பாகிஸ்தானிற்கென்று இருப்பு வைத்துக்கொண்டு கிழக்கு பாகிஸ்தானை (தற்போதைய வங்கதேசம்) இரண்டாம் பட்சமாக நடத்தியது. அதன் விளைவாக அங்கு ஏற்கனவே கடும் அதிருப்தியில் இருந்த பலரும் ஒன்று கூடி மக்களின் செல்வாக்கு பெற்றிருந்த முஜிபுர் ரஹ்மான் தலைமையில் பாகிஸ்தான் அரசுக்கு எதிராக பெரும் கிளர்ச்சியில் ஈடுபட்டார்கள்.

கடுமையான அதிகார துஷ்பிரயோகம் ஆயுத பிரயோகம் கொண்டு ராணுவம் காவல்துறையின் மூலம் பாகிஸ்தான் அரசு அதை அடக்க பார்க்க பாதிக்கப்பட்ட மக்கள் இந்தியாவில் அகதிகளாக தஞ்சம் புகுந்தனர்.

நிலைமை கை மீறி சென்றதை தாமதமாக உணர்ந்த போதிலும் சமயோசிதமாக சுதாரித்துக் கொண்ட அப்போதைய பாரத பிரதமர் இந்திரா காந்தி பாகிஸ்தானை உள்நாட்டு பிரச்சனைக்கு உடனடியாக தீர்வு கண்டு இந்தியாவிற்கான அகதிகள் வருகையை தடுத்து நிறுத்த வலியுறுத்தியதை பாகிஸ்தான் அரசு அலட்சியம் செய்தது. இந்தியாவின் நலன் பாதுகாப்பு கருதி, கிடைத்த சந்தர்ப்பத்தை முன்வைத்து பாகிஸ்தானிற்கும் தகுந்த பாடம் கற்பிக்க வேண்டும் என்று இந்தியாவின் உளவுத்துறை – ராணுவ தளபதி உள்ளிட்டவர்களின் தலைமையில் பெரும் படையை கிழக்கு பாகிஸ்தானிற்கு அனுப்பி முஜ்பூர் ரஹ்மானுக்கு ஆதரவளிக்க வங்கதேசம் என்ற ஒரு புதிய நாடு உருவானது.

ஆனால் அன்று தனது தவறுகளை உணராது இந்தியாவை பழி தீர்க்க காஷ்மீரை தனி நாடாக்குவோம் என்று கங்கணம் கட்டி பல வழிகளில் இந்திய எல்லையில் நேரடி யுத்தம் மறைமுகத் தாக்கத்தினால் என்று அமைதியை சீர்குலைத்தது.பாகிஸ்தானின் சதிகளை எல்லாம் தகர்த்து 70 ஆண்டு கால காஷ்யபரின் சிறப்பு அந்தஸ்துக்கு காரணமான 370 வது சட்ட பிரிவு விலக்கப்பட்டு இன்று காஷ்மீரில் வளர்ச்சி அமைதி பாதுகாப்பு நிலவுகிறது.

இவ்வளவுக்கு காரணமான பாகிஸ்தான் ஆக்கிரமிப்பில் இருக்கும் காஷ்மீரிகள் தங்களை இந்தியாவுடன் இணைக்க கோரி போராட்டம் நடத்தி சமீபத்தில் பாகிஸ்தான் அரசை அதிரவைத்தது. அந்த அடி மறையும் முன் இன்று பலுசிஸ்தான் பிரிவினை படமெடுத்து ஆடுவதும் அதற்கு ஆப்கானிஸ்தான் ஆதரவு பூரணயமாக இருப்பதும் பாகிஸ்தான் நிலையை இரு தலை கொள்ளி எறும்பாக்கியிருக்கிறது.

2022 ல் மேற்கு பாகிஸ்தானில் மிகப்பெரிய மழை வெள்ளம் வந்தது. அதனால் ஏற்பட்ட பஞ்சத்தால் மக்கள் கைப்பிடி கோதுமை மாவுக்கும் வழியின்றி தவிக்கிறார்கள். வெள்ளத்தில் பெருமளவு கால்நடைகளையும் இழந்ததால் பச்சிளம் குழந்தைகளுக்கு கூட பால் கூட இல்லை என்ற நிலை தான் பாகிஸ்தான் முழுவதும் நீடிக்கிறது. விளைவு ? .பாகிஸ்தான் உதயமான நாள் முதலாய் பலுச்சிஸ்தான் பகுதியில் ஒன்று இந்தியாவுடன் ஒருங்கிணைய வேண்டும் ! இல்லையேல் தனி நாடாக பிரிய வேண்டும். எந்த நிலையிலும் பாகிஸ்தானின் அங்கமாக இருக்க வேண்டாம்! என்ற கோரிக்கையோடு பாகிஸ்தான் அரசிற்கு எதிராக நீண்ட காலமாக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் பலுசிஸ்தானம் விடுதலைப் படைகள் பல ஆண்டுகளாகவே பஞ்ச்ஷீர் பகுதியை தங்களின் முழு கட்டுப்பாட்டில் வைத்திருப்பதோடு, பாகிஸ்தான் ராணுவம் காவல் துறையை பார்த்த இடத்தில் சுட்டுக் கொல்கிறார்கள்.

கடந்த ஆண்டு வெள்ளத்திற்கு பிறகு ஏற்பட்ட நெருக்கடியான சூழலை பயன்படுத்தி அவர்கள் பலுசிஸ்தான் மாகாணம் முழுவதையும் தங்களின் கட்டுப்பாட்டில் கொண்டு வந்து விட்டதாக தகவல்கள் வெளியாகிறது. அரசு ஊழியர்களின் சம்பளம் ராணுவத்திற்கான சம்பளம் வழங்குவதற்கு பணம் இல்லை . கடன் கொடுக்கும் நட்பு நாடும் இல்லை. கடன் கேட்கும் வலிமையிலும் பாகிஸ்தானின் பொருளாதாரம் இல்லை. என்று திவாலை நோக்கி வேகமாக நகரும் பாகிஸ்தானில் இதையெல்லாம் எதிர்கொள்ளும் வலுவான தலைமையும் இல்லை. எனவே பலுசிஸ்தான் என்ற ஒரு தனி நாடு உதயமாவது தவிர்க்க முடியாததாகிறது. ஆனால் இம்முறை இந்திய ராணுவம் பாகிஸ்தானில் நுழைந்து பலுசிஸ்தான் படைக்கு உதவ தேவையிருக்காது. ஆனால் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீர் நிச்சயம் பாரதத்தின் வசமாகும்.காரணம் பலுசிஸ்தானின் இயற்கையான அமைவிடம், கிளர்ச்சியாளர்களின் வலுவான கட்டமைப்பு , பலுசிஸ்தான மக்களின் பாகிஸ்தான் அரசுக்கு எதிரான தீவிரமான மனநிலை, இவை எல்லாம் பலுசிஸ்தானின் விடுதலையை எளிதாக்கும்.

இந்திய ராணுவம் நேரடியாக களம் இறங்காமல் போனாலும் அதற்கான தேவை இல்லாவிட்டாலும் நிச்சயம் இந்திய ராணுவம் – உளவுத்துறை முழு ஆசி பலுசிஸ்தான விடுவிப்பிற்கு உண்டு. பாகிஸ்தானில் பல ஆண்டுகள் தங்கி இருந்த இந்திய உளவுத்துறை அதிகாரி உருவாக்கி வைத்த கட்டமைப்புகள் நிச்சயம் பலசிஸ்தானத்தின் விடுதலையை வெற்றிப்பாதையில் இட்டுச்செல்லும் என்பதில் சந்தேகம் இல்லை. பாகிஸ்தானின் தற்போதைய சூழல் கருத்தில் கொண்டு அண்டை நாடுகளோ அரபு நாடுகளோ கூட பாகிஸ்தானின் தற்போதைய உள் விவகாரத்தில் பாகிஸ்தானுக்கு ஆதரவான மனநிலையிலோ பொருளாதார உதவியோ ராணுவ உதவியோ செய்ய முன்வராது.

பல்லாயிரம் கோடிகள் கடனாக கொடுத்து அதற்கு ஈடாக பாகிஸ்தானை அடமானம் பிடித்து வைத்திருக்கும் சீனா பாகிஸ்தானிற்கு ஆதரவாக களம் இறங்க நினைக்கலாம் . ஆனால் செயல்படுத்த முடியாது. ஒருவேளை அதை செயல்படுத்தினால் அது இந்தியாவோடு நேருக்கு நேர் மோதுவதாக தான் அர்த்தம் என்பதும் அதன் விளைவுகள் என்னவாக இருக்கும்? என்பதும் நிச்சயம் சீனாவிற்கு தெரியும். மேலும் சீனாவின் கடந்த கால வெள்ளம் – கொரோனா பாதிப்புகள் மீண்டும் பரவும் கொரோனா சீன தடுப்பூசியின் மீதான அவநம்பிக்கை – உள்நாட்டு நெருக்கடி – பொருளாதாரக் குழப்பம் என்று ஒட்டுமொத்தமாக சீன மக்கள் சீன அரசுக்கு எதிராக போராடி வரும் நிலையில் அண்டை நாட்டு விவகாரத்தை பற்றி சீனா வாய் திறக்குமானால் உள்நாட்டில் பெரும் கலவரம் வெடிக்கும் என்பதே சீன நிலை.

பாகிஸ்தானிற்கு ஆதரவாக இல்லை என்றாலும் பாரதத்தை எரிச்சல் படுத்த வேண்டும் என்பதற்காகவாவது துருக்கியும் – ஈரானும் பலச்சிஸ்தானுக்கு எதிராக காய் நகர்த்துமே ஆனால் அவர்களது எல்லையில் இருக்கும் பலுச்சிஸ்தான் திருப்பி அடிக்கும் அடியில் அவர்களது நாடு இருக்கும் இடம் தெரியாமல் போகும் என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து இருப்பதால் நிச்சயம் அவர்கள் இதைப் பற்றி யோசிக்கக்கூட மாட்டார்கள்.

கடந்த கால நிகழ்வுகளையும் சமகால சூழல்களையும் சீர்தூக்கிப் பார்த்தால் பாகிஸ்தான் சிதறுவதும் பலசிஸ்தான் என்ற ஒரு புதிய நாடு உதயமாவதும் காலத்தின் கட்டாயமாகிறது. அதுவே பாரதத்தின் பாதுகாப்பிற்கும் உகந்ததாக இருக்கும்.

மண்ணையும் மக்களையும் பாதுகாக்க தற்காப்பு யுத்தம் நடத்தும் தேசங்களே பேரழிவை சந்திக்கும். அதன் விளைவுகளுக்கெல்லாம் அதன் தலைமைகள் பொறுப்பேற்க வேண்டி இருக்கும். அதுவே எதார்த்தம்.. அப்படி இருக்க ஆக்கிரமிப்பு – அராஜகம் – அபகரிப்பு என்ற சித்தாந்தத்தை முன்னிறுத்தி மத ரீதியாக ஒரு தேசத்தை துண்டாடுவதும், வெளியேறுவதற்கு கூட உரிய அவகாசத்தை தராது ஆண் -பெண் -குழந்தைகள் என்று வயது வித்தியாசம் இன்றி கொத்து கொலைகளை கொடூரமாக நிகழ்த்தி பல லட்சம் மக்களின் மரண ஓலத்தில் பிறந்த தேசம். இன்று தனது சொந்த மக்களின் மரண ஓலத்தோடு சிதறத் தயாராகிறது . அதுதான் கர்மா . விதி வலியது . கர்மா அதனினும் கொடியது.


Share it if you like it