ஹிந்துஸ்தானத்தின் ஆன்மீக அறிவியலாக இன்றளவும் உலகையாளும் ஜோதிடம் என்னும் வானியல் சாஸ்திரம் மனித குல வாழ்வில் ஒவ்வொரு அங்கமும் அவர்களது முற்பிறவி கர்மா மற்றும் இப்பிறப்பிலான முன்னோர் கர்மவினையின் அடிப்படையிலேயே அமைவதாக குறிப்பிடுகிறது. அதன் அடிப்படையில் தான் ஒன்பது கோள்களும் மானுட ஜனன வாழ்வில் பலன்களை தருவதை ஜனன கால ஜாதகம் குறிப்பிடுகிறது. ஆனாலும் விதியை மதியால் வெல்லலாம் என்ற இறை அருளால் உரிய பூஜைகள் எளிய பரிகாரங்களின் மூலம் நம் தலைக்கு வருவதை தலைப்பாகையோடு கடந்து போக செய்யும் சாதுரியத்தையும் நம் ஜோதிடமும் ஆன்மீக புராணமும் நமக்கு வழங்கி இருக்கிறது .
அதன் அடிப்படையில் மானுடனின் ஜனன கால ஜாதக அடிப்படையிலும் கோள்சார கிரக பெயர்ச்சி அடிப்படையிலும் மனிதனின் வாழ்வில் நடைபெறும் முக்கிய நன்மை தீமைகளை நிர்ணயிப்பதில் நிழல் கிரகங்கள் அல்லது சாயா கிரகங்கள் என்று குறிப்பிடப்படும் ராகு கேது என்னும் சர்ப்ப கிரகங்கள் முதலிடம் வகிக்கிறது. ராகுவை போல் கொடுப்பார் இல்லை கேதுவை போல் கெடுப்பார் இல்லை என்று ஞான காரகனான ராகுவையும் மோட்ச காரகரான கேதுவையும் ஜோதிடம் குறிப்பிடும் முன்னுரிமையிலிருந்து இந்த சர்ப்ப கிரகங்களின் சக்தியையும் அதனால் நம் வாழ்வில் நிகழும் மாற்றங்களையும் நம்மால் உணர முடியும்.
உருவமில்லாத அரூப வடிவமாக இருந்த போதிலும் அசுர குணங்களை உடையவை என்றாலும் கால தேவனின் கட்டளைக்கு உட்பட்டு கர்ம வினைகளை பாகுபாடின்றி மனிதனுக்கு வழங்கி அவனை கர்மாவிலிருந்து விடுவித்து மோட்சத்திற்கு தயார்படுத்தும் உன்னத பணியை செய்யும் பாரபட்சமற்ற கிரகங்கள் என்ற போதிலும் மானுடர்கள் நெருக்கடியான காலத்தில் தங்களின் இன்னல் நீங்க உண்மையான பக்தியோடும் நல்லெண்ணம் நம்பிக்கை கொண்டும் செய்யும் சிறு பூஜைகளும் பரிகாரங்களும் கூட அந்த நிழல் கிரகங்களின் ப்ரீத்திக்கு ஏதுவாகி வழிபடுவோருக்கு பெரும் நன்மையும் மங்கலமும் தரவல்லது.
இந்த சர்ப்ப கிரகங்களுக்கு பூஜிப்பதற்கென்று சில விசேஷ தினங்களும் உண்டு . அமாவாசை – பௌர்ணமி – சூரிய -சந்திர கிரகண நாட்கள் மற்றும் நாகசதுர்த்தி – கருட பஞ்சமி உள்ளிட்ட விசேஷ தினங்களில் நாம் செய்யும் சர்ப்ப வழிப்பாடும் பரிகார பூஜைகளும் அளப்பரிய நன்மைகளை தரவல்லது.
இந்த சர்ப்ப வழிபாட்டை சர்ப்பங்கள் வழிபட்ட பிரசித்தி பெற்ற தலங்களில் செய்வது சிறப்பு . இயலாத நிலையில் நாம் இருக்கும் இடங்களில் அருகில் இருக்கும் ஆலயங்களில் இருக்கும் கற்சிலை வடிவிலான சர்ப்பத் திருமேனிகளையும் புற்று வழிபாடும் செய்வதும் நல்ல பலன்களைத் தரும்.
பால் அபிஷேகம் – மஞ்சள் -குங்குமம் -பூ -வெற்றிலை- பாக்கு சாற்றி நல்லெண்ணையில் அகல் தீபம் ஏற்றி வழிபடுவதும் மஞ்சள் பழங்கள் நெய்வேத்தியம் செய்வதும் ராகுவிற்கு உகந்த கருப்பு வண்ண வஸ்திரம் கேதுவிற்கு உகந்த பல வண்ண வஸ்திரங்களை சான்றுவதும் சிறப்பு. அலறிப் பூக்கள் பல வண்ண பூக்கள் மஞ்சள் சிவப்பு நிற மலர்கள் கொண்டு பூஜிப்பதும் சிறப்பு.
சர்ப்ப தோஷம் நீக்கும் பிரசித்தி பெற்ற புராதன புண்ணிய தலங்கள் (இந்திய அளவில்)
ஷேஷ்நாக் திருத்தலம்
சேஷநாக்
ஜம்மு காஷ்மீர்.
12 ஜோதிர் லிங்கங்களில் ஒன்றான
தாருகாவனம் நாகநாதர் ஆலயம் . குஜராத்
மஹா காளேஷ்வரர் உஜ்ஜைனி .
பஞ்சபூத தலங்களில் வாயுத்தலமான ஸ்ரீ காளஹஸ்தி .ஆந்திரா .
அஹோபிலம் நவ நரசிம்மர் கோவில்
அஹோபிலம் . ஆந்திரம்
சௌமிய கேசவ பெருமாள்
பாண்டவபுரம் மேல்கோட்டை கர்நாடகா.
தமிழகத்தில் இருக்கும் சர்ப்பங்கள் வழிபட்ட தலங்கள் .
ஸ்ரீ சேஷபுரிஸ்வரர் கோவில்
திருப்பாம்புரம்
கும்பகோணம்
ஸ்ரீ நாகநாதர் ஆலயம்
திருநாகேஸ்வரம்
ராகு தலம்
கும்பகோணம்
ஸ்ரீ நாகநாதர் ஆலயம்
கேது தலம்
கீழ் பெரும் பள்ளம்
கும்பகோணம்
ஸ்ரீ வாஞ்சிநாத ஸ்வாமி
ஸ்ரீ வாஞ்சியம்
கும்பகோணம்
ஸ்ரீ கைலாசநாதர் கோயில்
கார்கோடகேஸ்வரர்
கார்கோடகநல்லூர்
திருநெல்வேலி
நவதிருப்பதி வரிசையில் இருக்கும் இரட்டை திருப்பதி கோவில்
தொலைவிலி மங்கலம் தலத்தில் உள்ள
தேவபிரான் தலம் – ராகு
அரவிந்த லோசனர் தலம் – கேது.
நாகராஜன் கோயில்
நாகர் கோவில்
கன்யா குமரி
புற்றுக்கோவில்
சென்னை பெங்களூர் தேசிய நெடுஞ்சாலை
வாணியம்பாடி
திருவாலீஸ்வரர் கோவில்
குரங்கணில் முட்டம்
தூசி
திருவண்ணாமலை மாவட்டம்
ஸ்ரீ மஹா காளேஸ்வரர் ஆலயம்
காஞ்சிபுரம் .
மாரியம்மன் கோவில்
சமயபுரம்
திருச்சி
ஆங்காங்கே சிவாலயங்களில் இருக்கும் ஏகபாதர் எனும் சரபேஸ்வரர் – தெற்கு நோக்கி பிரதிஷ்டை செய்யப்பட்டு இருக்கும் நாகர் திருமேனிகள் (குறிப்பாக அரசமரம் வேப்பமரம் இணைந்து இருக்கும் இடத்தில் ஆறு குளம் கரையில்) யாவும் சர்ப்ப தோஷம் நீங்க ஆளும் மன்னர்கள் நாடு நலம் பெற வேண்டி ஆன்மீக மகான்களின் வழிகாட்டுதலில் சர்ப்பங்களை வணங்கி அவை எழுந்தருளி அருள் பாலித்த இடத்தில் கட்டமைத்தவையே .அதனால் எங்கெல்லாம் தெற்கு நோக்கி நாகர் திருமேனிகள் பிரதிஷ்டை ஆகி இருக்கிறதோ அவை எல்லாம் நாகதோஷம் நீங்க செய்யும் சக்தி வாய்ந்த பரிகார ஸ்தலங்களே அவற்றை உரிய முறையில் வழிபட்டு வருவது நல்லது .