தமிழகத்தில் அரசு பேருந்துகள் தட்டுப்பாடு – புதிய பேருந்துகள் வாங்கிய பிறகும் தொடரும் நிர்வாக சீர்கேடு

தமிழகத்தில் அரசு பேருந்துகள் தட்டுப்பாடு – புதிய பேருந்துகள் வாங்கிய பிறகும் தொடரும் நிர்வாக சீர்கேடு

Share it if you like it

சமீபத்தில் போக்குவரத்து துறை மேம்படுத்தும் வகையில் ₹1,000 கோடிகளில் புதிய பேருந்துகள் வாங்கப்பட்டது மற்றும் பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டது என்று சுவர் விளம்பரங்கள் தென்படுகிறது. ஆனால் புதிய பேருந்துகள் வாங்கியது சரி. அதில் 75 சதம் செலவு செய்து பழைய பேருந்துகள் புதுப்பிக்கப்பட்டது ஏன்? . அதற்கு பதிலாக புதிய பேருந்துகள் கூடுதலாக வாங்கி இருக்கலாமே ? என்ற கேள்விக்கு பதில் இல்லை. இதை கேட்க வேண்டிய ஊடகங்கள் எதிர் கட்சிகள் ஆங்காங்கே பழுதடைந்து சாலையில் நிற்கும் பேருந்துகள் போல மௌனமாகி விட்டார்கள். அரசு பேருந்துகள் தட்டுப்பாடு மற்றும் நிர்வாக சீரழிவு காரணமாக மக்கள் இயல்பு வாழ்க்கை பாதிப்பது பற்றி யாருக்கும் கவலை இல்லை.

ஒரு குறிப்பிட்ட வழித்தடத்தில் அடுத்தடுத்து பேருந்துகள் சில வழித்தடத்தில் பேருந்து இல்லை என்று மணிக்கணக்கில் பேருந்து நிலையத்தில் காத்திருக்கும் மக்கள் மனநிலை எப்படி இருக்கும்? மக்களின் நலன் கருதி மாநில அரசு போக்குவரத்து துறையின் நிர்வாகத்தை முடுக்கி விட்டு இந்த நிர்வாக சீர் கேட்டை சரி செய்ய வேண்டும்.சென்னையில் புழக்கத்தில் இருந்த நகர மற்றும் புற நகர் பேருந்துகளில் தற்போது பத்தில் ஒரு பங்கு தான் இயங்குகிறது.

வேலூர் பெங்களூர் திருப்பதி வழித்தடங்களில் பல புதிய பேருந்துகள் சமீபமாக தென் படுகிறது. புறநகர் பகுதிகளில் சில முக்கிய வழித் தடத்தில் பேருந்துகள் எண்ணிக்கை கூடி வருகிறது. ஆனால் சென்னை மாநகர பகுதியில் இருந்து ஸ்ரீ பெரும்புதூர் திருத்தணி திருவள்ளூர் காஞ்சிபுரம் உள்ளிட்ட புறநகர் சேவைகள் இன்னும் சீரடையாதது தினசரி கல்வி வியாபாரம் தொழில் காரணமாக சென்னை பிரயாணம் செய்யும் மக்கள் சிரமப்படுகிறார்கள்.

எப்போதும் நிரம்பி இருக்கும் புறநகர் பேருந்து நிலையங்களில் இன்றைய நிலையில் இரண்டு பேருந்து இருப்பது அபூர்வம் ஆகி விட்டது

முதலில் பெண்களுக்கு கட்டணம் இல்லாத இலவச பேருந்து சேவை தான் தட்டுப்பாடு ஏற்பட்டது .ஆனால் போக்குவரத்து துறை நஷ்டம் தவிர்க்க அதை குறைத்து இயக்க வேண்டும் என்று வாய் வழி உத்தரவு காரணம் இருக்கலாம் என்று மக்கள் அதை பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை.

ஆனால் தற்போது டீலக்ஸ் பேருந்துகள் கூட பத்து பேருந்துகள் இருந்த இடத்தில் இரண்டு தான் இருக்கிறது .

முக்கிய வழித்தடங்களில் 10 நிமிடத்திற்கு ஒரு பேருந்து இருக்கும் ஆனால் இப்போது அரை மணி க்கு ஒரு பேருந்து கூட இல்லை

வெளியூர் பயணங்கள் போகும் பட்சத்தில் இரயில் மற்றும் பேருந்து நிலையங்களை சென்றடைய நகர பேருந்து களை நம்பினால் இரயிலை தவற விட்டு விடுவோம் என்பது தான் உண்மை. திட்டமிட்ட பிரயாணம் வேண்டும் எனில் ஓலா உபேர் என்று ஆட்டோ அல்லது கால் டாக்சி ஒன்று தான் தீர்வு தற்போது இது எல்லாருக்கும் சாத்தியமா? எல்லா நாட்களிலும் சாத்தியமா?

நகர் புறங்களில் மட்டும் தான் இந்த நிலை என்றால் தொலைதூர போக்குவரத்து நிலை இன்னும் மோசம். தாம்பரம் சானிடோரியம் ல் இருந்து காஞ்சிபுரம் போக குறிப்பிட்ட நிறுத்தம் உள்ள பேருந்துகள் 15 நிமிடத்திற்கு ஒன்று எல்லா நிறுத்தத்திலும் நிற்பவை 10 நிமிடத்திற்கு ஒன்று என்று இருந்தது. இப்போது எக்ஸ்பிரஸ் பேருந்துகள் பார்க்கவே முடியவில்லை. எல்லா நிறுத்த பேருந்துகள் கூட அரை மணிக்கு ஒன்று தான். ஒரகடம் – ஶ்ரீ பெரும்புதூர் -செய்யாறு தொழிற்பூங்கா போக சென்னை காஞ்சிபுரம் வழித்தடங்களில் பிரயாணம் செய்யும் மக்கள் நிலை??

தாம்பரம் மற்றும் காஞ்சிபுரம் ல் இருந்து வேலூர் க்கு வழிநில்லா பேருந்து மற்றும் விரைவு வண்டிகள் வரிசை கட்டி இருக்கும்

ஶ்ரீ பெரும்புதூர் மணிமங்கலம் மார்க்கம் தான் அபூர்வம் என்று இருந்தது.ஆனால் இப்போது காஞ்சிபுரம்- வேலூர்- திருப்பதி – தருமபுரி என்று எங்கு போகவும் பேருந்துகள் தட்டுப்பாடு தான் .

பெங்களூர் — சோழிங்கநல்லூர் ஐடி எக்ஸ்பிரஸ் என்ற பேருந்து சேவை சென்னை – பெங்களூர் ஃப்ளை ஓவர் சர்வீஸ் என்ற அதி விரைவு பேருந்து சேவை இந்த ஊர்களுக்கும் வழியில் இருக்கும் ஆம்பூர்- வேலூர் -கிருஷ்ணகிரி- ஓசூர் க்கு காலையில் போய் அன்று மாலையில் ஊர் திரும்பும் மக்களுக்கு வரமாக இருந்தது இன்று அந்த பேருந்துகள் பார்க்க முடியவில்லை .கோயம்பேடு முதல் வேலூர் விழுப்புரம் என்று எல்லா ஊர்களிலும் இதுதான் நிலைமை

திருச்சி _சேலம்- விழுப்புரம் -திருத்தணி -திருப்பதி – என்று மார்க்கங்களில் இருந்து தஞ்சை கும்பகோணம் மதுரை – நெல்லை – தேனி – குமரி என்ற தொலை தூர சேவை வரை இதுதான் நிலைமை .காரணம் பேருந்துகள் பழுதுபார்த்தல் மற்றும் பராமரிப்பு க்கான போதிய உபகரணங்கள் இருப்பு இல்லை பணி ஆட்கள் சரிவர பணிமனைக்கு வருவது இல்லை இதை எல்லாம் கேட்க நிர்வகிக்க வேண்டியவர்களுக்கு வேறு முக்கிய வேலைகள் இருக்கலாம்.

பல வருடங்களாக நஷ்டம் மற்றும் நிதி சுமையால் நொடிந்து கிடக்கும் போக்குவரத்து துறை இதனால் ஓய்வு பெற்ற பல ஆண்டுகள் கடந்தும் பணபலன் பெறாத முன்னாள் தொழிலாளர்கள் இவர்கள் நிலையையும் இன்றைய பொறுப்பற்ற அரசின் மகளிருக்கு இலவச பேருந்து சேவை என்ற முட்டாள்தன நிர்வாகம் கண்டு மனம் புழுங்கி கிடக்கும் போக்குவரத்து துறையின் இன்றைய தொழிலாளர்கள் என்று கிட்டத்தட்ட தமிழக போக்குவரத்து துறை சீரழிந்து வருகிறது. ஆனால் போக்குவரத்து துறை கட்டணம் என்று பார்த்தால் நல்ல இலாபகரமான நிலையில் தான் இயங்குகிறது .

மக்களே பேருந்துகள் தட்டுப்பாடு என்பது சாதாரணமாக கடந்து போகும் விஷயம் இல்லை அத்யாவசிய சேவை தட்டுப்பாடு என்பது அரசு நிர்வாகம் ஸ்தம்பித்து விட்டது என்பதன் வெளிப்பாடு .சீரழிந்த நிர்வாகம் – பொறுப்பற்ற மாநில அரசு இரண்டிற்கும் நடுவில் இருக்கும் பொதுப் போக்குவரத்தை நம்பி வாழும் மக்கள் அன்றாடம் படும் அவஸ்தை சொல்லி மாளாது.ஒன்று நிர்வாக சீர்கேடை போர்க்கால அடிப்படையில் சீரமைத்து ஊழல் இரும்பு கரம் கொண்டு ஓடுக்க பட வேண்டும். அத்யாவசிய பழுதுபார்த்தல் பராமரிப்பு சார்ந்த உபகரணங்கள் கையிருப்பை உறுதிப்படுத்த வேண்டும். சரிவர பணிக்கு வராத பணி ஆட்கள் பணி செய்யாத பணியாளர் மீது துறை ரீதியான கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும்.


Share it if you like it