சமையல் எரிவாயு விலை ₹200 – ₹400 வரை குறைப்பு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை – எதிர்க்கட்சிகள் பீதி

சமையல் எரிவாயு விலை ₹200 – ₹400 வரை குறைப்பு மத்திய அரசு அதிரடி நடவடிக்கை – எதிர்க்கட்சிகள் பீதி

Share it if you like it

சில மாதங்களுக்கு முன்பு நடந்து முடிந்த கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் தேர்தலில் வாக்குப்பதிவிற்கு முந்தைய தினம் கர்நாடக மாநிலம் முழுவதிலும் உள்ள வாக்கு சாவடிகளுக்கு வெளியே காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் சமையல் எரிவாயு உருளை ஒன்றை நிற்க வைத்து அதற்கு பூவும் பொட்டும் வைத்து அஞ்சலி வழிபாடு செய்தார்கள். வாக்களிக்க போகும் ஒவ்வொருவரிடமும் சிலிண்டரை தொட்டு வணங்கி விட்டு போகும் படி வேண்டுகோள் வைக்கப்பட்டது. அங்கு பூ மற்றும் குடிநீர் உள்ளிட்டவை இருந்தது. அதாவது தொடர்ந்து மூன்று ஆண்டுகளாக சமையல் எரிவாயு விலையை உயர்த்தி வரும் பாஜக மோடி அரசுக்கு வாக்களிக்க வேண்டாம். நாங்கள் ஆட்சிக்கு வந்தால் சமையல் எரிவாயு விலை குறைப்பு இலவசங்கள் உள்ளிட்ட வாக்குறுதிகளை வழங்கி இருக்கிறோம்,அதன் அடிப்படையில் வாக்களியுங்கள் என்று நினைவூட்டினார்கள்.

வாக்கு சாவடியில் இருந்து சில நூறு மீட்டர் தூரம் வரையிலும் தடை செய்யப்பட்ட பகுதிகளாக தேர்தல் நடத்தை விதி அமலில் இருக்கும் பாதுகாக்கப்பட்ட பகுதிகளாக அறிவிப்பில் இருக்கும். அங்கு யாரும் யாரிடமும் எந்த ஒரு கட்சிக்கும் வேட்பாளருக்கும் ஆதரவாகவோ எதிர்ப்பாகவோ பேசக்கூடாது. தங்களுடைய பேச்சு செயல்பாடுகள் சமிக்ஞை மூலமாக எந்த ஒரு கட்சிக்கும் சின்னத்திற்கும் ஆதரவான செயல்பாடுகளை முன்னெடுக்கக் கூடாது என்பது தேர்தல் நடத்தை விதி. ஆனால் இந்த விதியை மீறி ஒவ்வொரு வாக்குச்சாவடிக்கும் வெளியே அப்பட்டமான இந்த ஜனநாயக விரோதத்தை காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் கடந்த கர்நாடக சட்டமன்ற தேர்தலில் முன்னெடுத்தது.

பெண்கள் மத்தியில் பெரும் வருத்தத்தை ஏற்படுத்தி இருந்த இந்த சமையல் எரிவாயு விலை உயர்வு ஆண்கள் மத்தியில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி இருந்த பெட்ரோல் – டீசல் விலை உயர்வு கர்நாடக தேர்தலில் கணிசமான எதிரொலியை கொடுத்தது .அதன் விளைவு பாஜக கூட்டணி ஆட்சியை இழந்தது .காங்கிரஸ் கூட்டணி பெரும்பான்மை பலத்தோடு ஆட்சி அமைத்தது. இந்த வெற்றியில் புது உற்சாகம் அடைந்த காங்கிரஸ் மற்றும் கூட்டணி கட்சிகள் இந்த சமையல் எரிவாயு விலை மற்றும் பெட்ரோல் டீசல் விலையை முன்னிறுத்தி அடுத்து வரும் நாடாளுமன்ற தேர்தலையும் சாதுர்யமாக எதிர்கொள்ளலாம். எதிர்வரும் வட மாநிலங்களின் சட்டமன்றத் தேர்தலையும் இதை வைத்தே வியூகம் வகுக்கலாம் என்று காத்திருந்த வேளையில் மத்திய அரசின் இந்த சமையல் எரிவாயு விலை குறைப்பும் அந்த விலை குறைப்பு இன்று முதல் அமலுக்கு வந்திருப்பதும் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.

நாடு முழுவதும் கடந்த மூன்று வருடங்களாக சமையல் எரிவாயு விலை தொடர்ந்து உயர்ந்து வந்ததையும் அதன் காரணமாக ஏழை மற்றும் நடுத்தர மக்கள் பெரும் நடைமுறை பொருளாதார சிக்கலை எதிர்கொண்டதையும் வைத்து காங்கிரஸ் தேர்தல் அரசியல் செய்தது. மத்தியில் ஆளும் அரசிடம் சமையல் எரிவாயு விலை குறைப்பை பற்றி வாரம் ஒரு அறிக்கையை வெளியிடும் தமிழக காங்கிரஸ் கட்சியினர் இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு சட்டமன்றத் தேர்தலில் வெற்றி பெற்றால் சிலிண்டரின் மீது ₹100 ரூபாய் விலை குறைப்போம் என்ற சொன்ன வாக்குறுதி என்ன ஆனது ? நீங்கள் ஏன் இன்னும் விலையை குறைக்கவில்லை ? என்று ஆளும் திமுக விடம் அதுவும் அவர்களின் கூட்டணி திமுக விடம் இன்று வரை ஒரு கேள்வி கேட்டதில்லை. ஆனால் நடுத்தர ஏழை மக்களின் பெரும் எதிர்பார்ப்பான சமையல் எரிவாயு பெட்ரோல் டீசல் விலை உயர்வை மத்திய அரசு குறைக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பை உள்வாங்கிக் கொண்டு தற்போது சமையல் எரிவாயுமீது ரூபாய் ₹200 விலை குறைப்பு செய்ததோடு அந்த விலை குறைப்பு அனைத்து தரப்பு பயனாளர்களுக்கும் பொருந்தும் என்ற ஒரு அறிவிப்பை வெளியிட்டு மத்திய அரசின் விலை குறைப்பை நாட்டு மக்கள் அனைவருக்கும் பொதுவாக்கியதோடு மானிய விலையில் சிலிண்டர்களை பெற்றுக் கொள்ளும் பயனாளர்களுக்கு இந்த விலை குறைப்போடு சேர்த்து கூடுதலாக மானிய தொகையையும் உயர்த்தியது. இதன் மூலம் மானிய விலையில் சிலிண்டர் பெற்றுக் கொள்ளும் பயனாளர்களுக்கு தற்போது ஒரு சிலிண்டர் மீதான மானிய உதவி தொகை ரூபாய் ₹400 வரையில் கிடைக்கப்பெறும்.

கடந்த ஆறு மாத காலமாகவே அடுத்த ஆறு மாதங்களில் சமையல் எரிவாயு – பெட்ரோல் – டீசல் உள்ளிட்டவை பெருமளவில் விலை குறைக்கப்படும். .அந்த விலை குறைப்பு பல வருடங்கள் வரை அதே அளவில் கட்டுப்படுத்தும் அளவிற்கு செயல்திட்டங்கள் ஆய்வில் இருப்பதாக அவ்வப்போது தகவல்கள் வெளியானது. அந்த தகவலின் அடிப்படையில் தற்போது சமையல் எரிவாயு மீதான விலை குறைப்பு அமலுக்கு வந்திருக்கிறது. இனி அடுத்த சில மாதங்களில் மெத்தனால் உதவியோடு பெட்ரோல் – டீசல் விலையும் பெருமளவில் குறைக்கப்படும் என்ற எதிர்பார்ப்பு மேலோங்குகிறது.

தேர்தல் வந்தால் பெட்ரோல் – டீசல் விலை பட்டியல் வைத்து ஆண்களிடமும், சமையல் எரிவாயும் விலை உயர்வை வைத்து பெண்களிடமும் வாக்கு கேட்டு மோடி எதிர்ப்பு பிரச்சாரம் செய்யும் வழக்கம் கொண்ட எதிர்க்கட்சிகளுக்கு தற்போதைய இந்த அதிரடி விலை குறைப்பும் இனி விலையேற்றம் அவ்வளவாக இருக்காது கட்டுப்பாடுகள் கண்காணிப்புகள் தீவிரமாகும் என்ற வியூகமும் பெரும் கலக்கத்தை கொடுத்திருக்கிறது.

எதிர்க்கட்சிகள் என்ற பெயரில் அரசியல் செய்ய வேண்டும் என்ற கட்டாயத்தில் மோடி நாடாளுமன்ற தேர்தலையும் எதிர்வரும் வட மாநில சட்டமன்றத் தேர்தல்களையும் முன்வைத்து இந்த விலை குறைப்பை செய்ததாக மலிவான விமர்சனம் செய்கிறது. கர்நாடக சட்டமன்றத் தேர்தலில் மக்கள் மோடி பாஜகவை புறக்கணித்ததால் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தேர்தலை எதிர்கொள்ள இந்த விலை குறைப்பு தற்காலிகமாக வரும் தேர்தலில் வெற்றி பெறவும் வெஙபெற்ற பிறகு மீண்டும் விலை உயரும் என்று வழக்கமான விஷம அரசியலை செய்தாலும் கூட இந்த அதிரடி விலை குறைப்பும் அதை தொடர்ந்து அடுத்தடுத்த வெளியாகும் அறிவிப்புகளும் எதிர்க்கட்சிகளை பெரும் கலக்கத்திலும் பீதியிலும் ஆழ்த்தி இருப்பது உண்மை.

காரணம் இந்தப் பெட்ரோல் – டீசல் – சமையல் எரிவாயு விலை உயர்வுகளும் அந்த உயர்வு காரணமான பெரும் பணம் எங்கே ? எப்படி ? எதன் காரணமாக முடங்கி இருக்கிறது? ஏன் இன்னும் விலை குறைப்பு அமலுக்கு வரவில்லை ? என்ற நிதிநிலை காரணங்களும் மத்திய அரசின் மேல்மட்ட நிர்வாக நடவடிக்கைகளும் தெரிந்தவர்கள் இந்த விலை உயர்வை பற்றி பெரும் எதிர்ப்பு விமர்சனங்கள் முன் வைக்காமல் கடந்து போனார்கள். .ஆனால் மேல்மட்ட நிர்வாகமும் கடந்த காலங்களில் உணவுக்கு எண்ணெய் என்ற பெயரில் இந்த எண்ணெய் எரிவாயு பொருளாதாரத்தை சீரழித்த பொருளாதார நடவடிக்கைகளையும் பற்றியும் அறியாத நடுத்தர – கடைநிலை மக்கள் இந்த பெட்ரோல் – டீசல் விலை உயர்வு மற்றும் சமையல் எரிவாயு விலை உயர்வு அதன் காரணமான அத்தியாவசிய பொருட்கள் விலை உயர்வு பற்றிய கடுமையான அதிருப்தியில் இருந்தார்கள் . அது கணிசமாக நாடாளுமன்ற தேர்தல் தொடங்கி உள்ளாட்சி தேர்தல்கள் வரை பல இடங்களில் பிரதிபலித்ததும் எதார்த்த உண்மை. இந்த எதிர்ப்பு மனநிலையை தங்களின் ஆதரவு மனநிலையாக மாற்றி எதிர்வரும் தேர்தலை எப்படியும் எதிர் கொண்டு தங்களின் இருப்பை வெற்றியாக்கிவிடலாம் என்று இருந்த எதிர்க்கட்சிகளுக்கு இந்த எதிர்க்கட்சி விலை குறைப்பும் அதைத் தொடர்ந்து வரும் அறிவிப்புகளும் ஒரு தேர்தல் கிலியை ஏற்படுத்தியிருக்கிறது.

ஸ்வச் பாரத் திட்டம் கொண்டு வந்த போது ஏளனம் பேசியவர்கள் எல்லாம் அது தேர்தலில் கடை கோடி மக்களின் பாஜக ஆதரவு மனநிலையை வெளிப்படுத்திய போது அதிர்ந்து நின்றார்கள். அந்த வகையில் இன்று திரு ஓணம் பண்டிகை ரக்ஷா பந்தன் பண்டிகையை உள்ளிட்டு நாடு முழுவதிலும் உள்ள சகோதர சகோதரிகளுக்கு மத்திய அரசின் பரிசாக இந்த சமையல் எரிவாயு விலை குறைப்பை அமலுக்கு உடனே கொண்டு வருவதாக மத்திய அரசு அறிவித்திருப்பது எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தும்? . அது அடுத்து வரும் தேர்தல்களில் எப்படி எதிரொலிக்கும்? என்ற நாடித் துடிப்பை உணர்ந்த எதிர்க்கட்சிகள் அலறுவதில் ஒன்றும் அதிசயம் இல்லை. இந்த விலை குறைப்பு தேர்தலுக்கான கண்துடைப்பு நாடகம் என்று அவர்கள் அறிக்கை விடுவதிலும் ஆச்சரியம் இல்லை.

சில மாதங்களுக்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் சட்ட சபை தேர்தலில் பரப்புரையின் போது எனதருமை இந்திய சகோதர சகோதரிகளே! சமீப காலமாக தொடர்ந்து விலை உயரும் சமையல் எரிவாயு மற்றும் பெட்ரோல் டீசல் விலை காரணமாக நீங்கள் பெரும் நடைமுறை பொருளாதார சிக்கலை எதிர் கொள்வதையும் என் மீது வருத்தம் – அதிருப்தியில் இருப்பதை நானறிவேன். ஆனால் கடந்த கால ஆட்சியின் சீரழிவால் பெரும் நிதி சுமையில் இருக்கும் எண்ணெய் வள துறைகள் மீளும் வரை இந்த சுமையை நாம் ஏற்கத் தான் வேண்டும். ஆனால் சில மாதங்களுக்கு பிறகு நிச்சயம் அதிரடி விலை குறைப்பு வரும். அதன் பிறகு விலை உயர்வு இருக்காது என்று சொன்ன வார்த்தையை மோடி இன்று நிறைவேற்றி இருக்கிறார்.


Share it if you like it