கடந்த 2000 ம் ஆண்டு செப்டம்பர் 11 ஆம் நாளில் அமெரிக்காவின் நான்கு விமானங்களை கடத்திய அல்குவைதா பயங்கரவாதிகள் இரண்டு விமானங்களை நியூயார்க்கின் இரட்டை கோபுரத்தின் மீது மோதி தகர்த்தார்கள். இதன் மூலம் பல ஆயிரக்கணக்கான மக்கள் உயிரிழப்பு பல லட்சம் கோடிகள் மதிப்பிலான பொருளாதார சேதத்தை அமெரிக்காவிற்கு ஏற்படுத்தினார்கள்.
ஒரு விமானத்தைக் கொண்டு அமெரிக்காவின் உயர் பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் தலைமை ராணுவ கட்டுப்பாட்டு மையமான பென்டகன் பகுதியை தகர்த்து தாக்குதல் நடத்த முயற்சித்தார்கள். ஆனால் விமானத்தில் இருந்த அமெரிக்க மக்கள் தங்களின் உயிரைக் கொடுத்து அந்த தாக்குதல் சதியை முறியடித்தார்கள். அதன் மூலம் சிறு பாதிப்போடு பென்டகன் தப்பி பிழைத்தது.
நான்காவது விமானத் தாக்குதல் திட்டம் தோல்வியில் முடிந்து விழுந்து நொறுங்கியது. அதில் இருந்த பயணிகள் அனைவரும் எரிந்து சாம்பல் ஆனார்கள். அந்த வகையில் நான்கு விமானங்களை கடத்தி அதன் மூலம் அமெரிக்காவில் பேரழிவையும் பயங்கரவாதத்தின் கோரத்தாண்டவத்தையும் நடத்த இஸ்லாமிய பயங்கரவாதிகள் திட்டமிட்டு காரியம் சாதித்தார்கள். அவர்களுக்கு அமெரிக்க அளவிலேயே பல ஆண்டுகள் ஊடுருவி இருந்த அவர்களின் ஆதரவாளர்களும் ஸ்லீப்பர் செல்களும் பெரும் துணை கொடுத்தார்கள்.
இந்த சம்பவத்தின் மூலம் பயங்கரவாதத்தின் பிடி தாக்குதலில் இருந்து அமெரிக்காவும் கூட தப்ப முடியாது என்ற ஒரு கருத்தியலின் மூலம் உலகம் முழுவதும் ஒரு பாதுகாப்பு அச்சுறுத்தலையும் பயங்கரவாத அச்சுறுத்தலையும் இஸ்லாமிய பயங்கரவாதிகள் நிறுவ பார்த்தார்கள். இந்த தாக்குதலுக்கு காரணமான அல்கொய்தா பயங்கரவாத அமைப்பின் நிறுவனர் தலைவர் ஒசாமா பின்லேடன் ஆப்கானிஸ்தானின் இந்துகுஷ் மலைகளை பதுங்கி இருப்பதை உறுதி செய்த அமெரிக்கா முதலில் ஆப்கானிஸ்தான் மீது படையெடுத்து தேடுதல் வேட்டையை தொடங்கியது . ஆனால் ஒசாமா தனது ஆதரவாளர்களுடன் பத்திரமாக ஆப்கனியிலிருந்து வெளியேறி இருந்தார். அடுத்து இவர்களின் ஆதரவாளர்கள் என்று சொல்லி ஈராக் மீது போர் தொடுத்து. சதாம் உசேனுக்கு தூக்கு தண்டனை விதித்தது. ஆனால் இன்றளவும் அதன் பாதிப்பிலிருந்து அமெரிக்க ராணுவம் வெளிவர இயலவில்லை.
இறுதியில் கடந்த 2010 ஆம் ஆண்டு பாகிஸ்தானின் அப்போதாபாத் நகரில் ஒரு வீட்டில் பதுங்கி இருந்த ஒசாமா பின்லேடன் மற்றும் அவனது குடும்பத்தை அமெரிக்காவின் சீல் போர்ஸ் படையினர் நள்ளிரவில் தரை இறங்கி திடீர் தாக்குதல் நடத்தி ஒசாமா பின்லேடனை கொன்று குவித்தார்கள். அவனது சகாக்கள் குடும்பம் என்று பலரை சுட்டுக் கொன்றார்கள். சிலரை கைது செய்து அமெரிக்கா அழைத்துப் போனார்கள்.
உலகையே அச்சுறுத்திய ஒசாமா பயங்கரவாதிக்கு தன்னுடைய தேசத்தில் அஃபோதா பாத் நகரில் பாதுகாப்பும் அபயமும் அளித்து ஒருபுறம் அமெரிக்காவின் ஆதரவோடு பாரதத்தை சீண்டுவது மறுபுறம் அதே அமெரிக்காவின் எதிரியான ஒசாமாவிற்கு இடம் கொடுத்து தனது பயங்கரவாத முகத்தை வெளிப்படுத்துவது என்ற பாகிஸ்தானின் இரட்டை வேடம் உலக அளவில் இந்த நிகழ்வின் மூலம் அம்பலமானது . இதன் பிறகு அமெரிக்கா பாகிஸ்தான் மீது கடுமை காட்டத் தொடங்கியது. ஐரோப்பிய நாடுகளும் பாகிஸ்தானை விட்டு விலகி நிற்கத் தொடங்கியது. பெரியண்ணன் அந்தஸ்தில் இருக்கும் அமெரிக்காவிற்கே பாகிஸ்தான் இவ்வளவு பெரிய துரோகத்தை செய்யும் எனில் பகை பாராட்டும் பாரதத்திற்கு எவ்வளவு கொடூரங்களை செய்திருக்கும் என்ற பாரதத்தின் நியாயத்தை உலகம் உணரத் தொடங்கியது. ஒசாமா பின்லேடன் படுகொலை சம்பவத்திற்கு பிறகு தான் அந்த வகையில் தன்னுடைய தேசத்தின் பாதுகாப்பு இறையாண்மை பாதுகாக்க வேண்டும் என்பதற்காக அன்று அமெரிக்கா எடுத்த அதிரடி முடிவு தெற்காசியாவில் ஒரு நிரந்தரமான அமைதிக்கும் பாரதத்திற்கு எதிரான எல்லை தாண்டிய அச்சுறுத்தலுக்கும் ஒரு முடிவை கொடுத்தது.
அப்போதாபாத்தில் பதுங்கி இருக்கும் ஒசாமா பின்லேடனை கொல்வதற்கு அமெரிக்கா பாகிஸ்தானிடம் முன் அனுமதியோ அல்லது முன்கூட்டியே தகவல் பரிமாற்றமோ எதையும் செய்யவில்லை. சம்பவம் நடந்து முடிந்த பிறகு பாகிஸ்தான் அதை கண்டித்த பிறகும் அதற்கு உரிய பதிலை கூட அமெரிக்கா வெளியுறவுத்துறை வழங்கவில்லை. அந்த வகையில் தன்னுடைய தேசம் தன்னுடைய பாதுகாப்பு இறையாண்மை என்று வரும்போது எந்த ஒரு நாட்டிலும் இறங்கி அடிக்கும் அமெரிக்கா அதன் பிறகு அதே பாகிஸ்தானால் பெரும் பாதிப்புக்கு உள்ளாகும். பாரதத்திற்கு வழிய வந்து அறிவுரை வழங்கும் காஷ்மீர் விவகாரத்தில் பஞ்சாயத்து பேசும் விவகாரமும் முடிவுக்கு வந்தது. காரணம் பாரதம் திருப்பி கேள்வி கேட்கும் என்ற எண்ணம் அமெரிக்காவை கட்டி வைத்தது.
20-25 ஆண்டுகளில் அமெரிக்காவில் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் குடியேறல் குடிப்புகள் விஷயங்களில் எத்தனையோ கட்டுப்பாடுகளை கொண்டு வந்தது. இந்த பாதுகாப்பு சோதனைகள் கெடுபிடிகள் சம்பந்தமாக அமெரிக்காவின் குடிமக்களே தங்களது தனிமனித சுதந்திரம் பாதிக்கப்படுவதாக வீதியில் இறங்கி போராடிய போதும் அமெரிக்கா அதைக் கண்டு கொள்ளாமல் தேசத்தின் பாதுகாப்பில் சமரசம் இல்லை என்று உறுதி காத்தது.
அதே அமெரிக்கா தான் வெளியுறவு துறை அமைச்சர் என்ற பெயரில் காண்டலிசாரைஸ் முதல் ஹிலாரி கிளின்டன் வரை பாரதம் பாகிஸ்தான் என்று வரும்போது காஷ்மீரை முன்வைத்து பாகிஸ்தானுக்கு ஒரு பாசமும் பாரதம் என்றால் ஒரு நயவஞ்சகமும் என்று தனது ஆயுத வியாபார அரசியலை கணக்கச்சிதமாக முன்னெடுத்தது. பாரதம் வந்து இறங்கும்போது காஷ்மீர் விவகாரத்தை பேசி தீர்த்துக் கொள்ளுங்கள். சகோதர நாடுகளுக்குள் யுத்தம் வேண்டாம் என்று அறிவுரை வழங்குவது. அடுத்த நாள் பாகிஸ்தானில் போய் இறங்கியவுடன் காஷ்மீர் விவகாரத்தில் பாகிஸ்தான் நிலைப்பாட்டை முழுமையாக ஆதரிக்கிறோம். உங்களுக்கு எதிரான பாரதத்தின் நிலைப்பாட்டை நாங்கள் எப்போதும் ஆதரிக்க மாட்டோம் என்று தனது கோர முகத்தை ஒவ்வொரு முறையும் அம்பலப்படுத்தியது.
அந்த வகையில் தன்னுடைய நாட்டின் பாதுகாப்பு தன்னுடைய நாட்டின் குடியேறல் குடிப்புகள் என்று வரும்போது அமெரிக்கா சமரசம் செய்து கொள்ளாது. அதன் வெளியுறவு கொள்கைகள் உள்துறை கொள்கைகளில் எந்த ஒரு நாடும் கேள்வி கேட்கவோ விமர்சனம் செய்யவும் முடியாது. அமெரிக்க நாட்டின் குடிமக்களும் கூட தேசத்தின் பாதுகாப்பு என்று வரும்போது அரசாங்கத்தை கேள்வி கேட்கக் கூடாது என்பது அமெரிக்காவின் பாதுகாப்புக் கொள்கை.
ஆனால் அதே பாரதம் காஷ்மீரை முன்வைத்து பாகிஸ்தானால் அனுபவிக்கும் கொடுமைகளை உள்நாட்டு பயங்கரவாதத்தை கட்டுப்படுத்தவோ கண்காணிக்கவோ தீவிரமான நடவடிக்கைகளை எடுத்தாலோ எடுக்க முயன்றாலோ அதற்கு பெரிய அளவில் முட்டுக்கட்டை போடும் முதல் நாடு அமெரிக்காவும் அதன் ஆதரவு பெற்ற பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ அமைப்பு தான் என்பது உலகறிந்த ரகசியம். ஆனால் 2014க்கு பிறகு பாரதம் எப்படி உங்களின் தேசத்திற்கு என்று ஒரு வெளியுறவு கொள்கை இருக்குமோ உள்நாட்டு பாதுகாப்பிற்கு என்று ஒரு கட்டமைப்பு இருக்குமோ .அதே போல பாரதத்திற்கும் உண்டு. அதை கட்டமைக்க நிர்வகிக்க முழு உரிமை அதிகாரம் பாரதத்தின் ராஜ்ஜியத்திற்கும் உண்டு என்று முகத்தில் அடித்தார் போல் ஒவ்வொரு இடத்திலும் சொல்லி எங்களுடைய தேசத்தின் பாதுகாப்பில் எங்களுக்கு முழு அதிகாரம் இருக்கிறது. அதை தக்க வைத்துக்கொள்ள நாங்கள் எங்கள் எல்லைக்கும் போவோம். எங்களுக்கு எந்த ஒரு தேசத்தின் அறிவுரையோ ஆதரவோ தேவையில்லை என்பதை வெளிப்படையாக நடைமுறைப் படுத்தி அமெரிக்காவின் சட்டம் பிள்ளைத்தனத்திற்கு முடிவு கட்டியது . அதன் மூலம் பாகிஸ்தானின் ஐஎஸ்ஐ ஆப்கானிஸ்தானின் பயங்கரவாதம் என்று அனைத்தும் ஒரு நேர்கோட்டில் பாரதத்தின் எதிரிகளாக அடையாளப்படுத்தப்பட்டு உலக நாடுகளின் முன் உங்களுக்கு அமைதியும் நலமும் வளர்ச்சியும் முன்னெடுக்கும் பாரதம் வேண்டுமா நாச வேலைகளை முன்னெடுக்கும் இந்த பயங்கரவாத நாடுகளின் உறவு வேண்டுமா? என்ற ஒற்றை கேள்வியின் மூலம் பாரதம் உலக நாடுகளை தன் பக்கம் நிறுத்திக் கொண்டது.
அவர்களின் பார்வையில் அமெரிக்க அல்லாத அனைவரையும் அவர்கள் சந்தேகக் கண் கொண்டே பார்ப்பார்கள். அது பாரதத்தின் குடியரசு தலைவராக இருந்தாலும் சரி சவுதி நாட்டு இளவரசராக இருந்தாலும் சரி. அவர்களின் பார்வையில் அன்னியர்கள் அந்நியர்களே. அவர்கள் முழுமையான சோதனைக்கும் கண்காணிக்கும் உட்படுத்தப்பட்டே தங்களது தேசத்தில் அனுமதிக்கப்படுவார்கள் என்ற உறுதியான நிலைப்பாட்டில் 25 ஆண்டுகள் அமெரிக்கா நிலையாக நின்றதன் பலன் தான் அந்த ஒற்றை தினம் நடந்த கொடும் துயர் தாக்குதலுக்கு பிறகு இன்றளவும் அது போன்ற ஒரு தாக்குதலை அமெரிக்க மண்ணில் நடத்துவதற்கு இடமும் துணிவும் தராத வகையில் தன்னுடைய தேசத்தின் பாதுகாப்பை அமெரிக்கா உறுதிப்படுத்தி வைத்திருக்கிறது.
அந்த வகையில் அமெரிக்காவில் ஆட்சிகள் மாறலாம். ஆனால் காட்சிகள் மாறாது. வெளியுறவுத்துறை உள்துறை என்று ஆட்சியாளர்களின் பெயர் மாறும் .தவிர அமெரிக்காவின் உள்நாட்டு பாதுகாப்புக் கொள்கையோ வெளியுறவுத் துறை கொள்கையோ ஒரு நாளும் மாறாது. அவர்களை பொறுத்தவரையில் மற்ற நாடுகளின் துக்கத்தில் பங்கெடுத்தாலும் அதில் அமெரிக்காவின் நலன் இருந்தால் மட்டுமே பங்கெடுப்பார்கள். அமெரிக்க நாட்டின் ஒரு விசேஷத்திற்கு அந்நிய நாட்டில் இருந்து ஒரு தலைவரை அழைப்பு விடுத்தாலும் அதன் மூலம் அமெரிக்காவிற்கு ஏதேனும் ஒரு லாபம் இருந்தால் மட்டுமே அழைப்பு விடுப்பார்கள். என்ற அமெரிக்காவின் சுய லாபம் தன்னலம் பாதுகாப்பு மட்டுமே பிரதானம் என்ற உள்துறை கொள்கையும் வெளியுறவுக் கொள்கையும் இன்றளவும் மாறாமல் அதன் போக்கில் அப்படியே பயணிக்கிறது. அமெரிக்கர்களுக்குள் கட்சி அரசியல் சித்தாந்த மாறுபாடு இருக்கலாம். அதிகாரப் போட்டி இருக்கலாம். தலைமைகளுக்குள் பெரும் பனிப்போர் இருக்கலாம் .ஆனால் தங்களது தேசிய பாதுகாப்பு தேசத்தின் இறையாண்மை உள்நாட்டு பாதுகாப்பு அமெரிக்க மக்களின் நலன் வளர்ச்சி என்று வரும்போது அனைவரும் ஓரணியில் திரண்டு நின்று தங்களது தேசப்பற்றை தேசிய இறையாண்மை மீதான மதிப்பை ஒவ்வொரு நாளும் மதித்துப் பாதுகாக்கிறார்கள். அந்த வகையில் அமெரிக்கர்கள் உலக நாடுகளுக்கும் மக்களுக்கும் ஒரு முன் உதாரணமாக சமகால பாடமாக இருக்கிறார்கள்.