வீட்டிலிருந்தே விநாயகரை வழிபடலாம் – அமைச்சர் சேகர் பாபு – விடியல் அரசின் அடுத்த பரிசு

வீட்டிலிருந்தே விநாயகரை வழிபடலாம் – அமைச்சர் சேகர் பாபு – விடியல் அரசின் அடுத்த பரிசு

Share it if you like it

தமிழகத்தில் விடியல் அரசின் அடுத்த பரிசாக எதிர்வரும் விநாயகர் சதுர்த்தி விழாவை ஒட்டி பொது இடங்களில் விநாயகர் சிலையை வைத்து வழிபாடு செய்யவும் பொதுவாக சிலையை ஊர்வலமாக எடுத்துச் சென்று நீர் நிலைகளில் கரைப்பதற்கும் அனுமதிப்பதில் நேரடியாக மறைமுகமாக இடையூறுகளை செய்து வருகிறது. இதைப் பற்றிய முழு விவரங்கள் காரணம் பின்னணி என்ன என்று முழுமையாக வெளிவரும் முன்பே தமிழக அரசின் இந்த நிலைப்பாட்டை உறுதிப்படுத்தும் விதமாகவும் ஆதரிக்கும் விதமாகவும் தமிழக இந்து அறநிலையத்துறை அமைச்சர் சேகர் பாபு ஒரு தத்துவத்தை உதிர்த்திருக்கிறார். அதில் வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் கூட அவர்களின் கோரிக்கையை விநாயகர் கட்டாயம் ஏற்றுக் கொள்வார். அரசியல் நடத்துவதற்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன. கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று தெரிவித்துள்ளார்.

முதலாவது விஷயம் திமுக என்ற கட்சி உருவாக்கப்பட்டதன் காரணமே இந்து மதத்தை அழிக்க வேண்டும் என்ற நோக்கம் கொண்டு தான். அதற்காக ஆட்சியை இழக்கவும் தயாராக இருக்கிறோம். ஆனால் இந்து சனாதன தர்மத்தை ஒழிக்காமல் விடமாட்டோம் என்று சமீபத்தில் திமுகவின் இளைஞர் அணி தலைவரும் விளையாட்டு மற்றும் இளைஞர் நலன் மேம்பாட்டு துறை அமைச்சருமான உதயநிதி திட்டவட்டமாக தெரிவித்து இருந்தார். அவரது கருத்தை ஆமோதிக்கும் விதமாக சனாதன ஒழிப்பு மாநாடு தொடங்கி அவரது சமீபத்திய சனாதன எதிர்ப்பு கருத்துக்கள் வரை அத்தனையையும் தொடர்ந்து ஆதரிப்பவர் தமிழகத்தின் இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சேகர் பாபு. அந்த வகையில் திமுகவின் இளவரசர் உதயநிதி சனாதன அழைப்பு ஒன்றே எங்களின் குறிக்கோள் என்பதை வார்த்தைகளில் தெரிவித்தார். அதை இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சேகர் பாபு நடைமுறைப்படுத்த முயல்கிறார்.

இந்து அறநிலையத்துறை அமைச்சர் பொறுப்பில் இருக்கும் சேகர் பாபு புரிந்து கொள்ள வேண்டிய விஷயங்கள் நிறைய இருக்கிறது. கடவுளே இல்லை என்ற கொள்கையுடைய திமுகவிற்கு கடவுளை வைத்து அரசியல் செய்ய வேண்டாம் என்று யாரையும் பார்த்து பேசும் அறுகதை இல்லை. அதே நேரத்தில் தமிழகத்தில் மாநில அளவிலும் சரி தேசிய அரசியலிலும் சரி. இதுவரையில் மதத்தை வைத்து மலிவான அரசியல் செய்யும் கட்சி என்றால் அதில் முன் இருப்பது திமுகவாகத்தான் இருக்கும் . வாக்கு வங்கி அரசியலுக்காக சிறுபான்மை மக்களை பெரும்பான்மை மக்களுக்கு எதிராக தொடர்ச்சியாக வெறுப்புணர்வு கசப்புணர்வு வளர்க்கும் வகையிலான மத வெறுப்பை வளர்த்தவர்கள் திமுகவினரே. திமுகவினரின் பேச்சும் விமர்சனங்களும் தான் இங்கு பெரும்பான்மை சிறுபான்மை மக்களிடையே ஒரு பெரும் இடைவெளியை கட்டமைத்திருக்கிறது. அதனால் மதத்தை வைத்து மலிவான அரசியல் செய்வது திமுக தான் . சனாதன தர்மத்தின் வழிபாடு பண்டிகைகள் உற்சவங்கள் சிலை வழிபாடு என்று அத்தனை விஷயங்களையும் கொச்சைப்படுத்தி சனாதன துவேசம் என்னும் மத அரசியலை வெறுப்பு அரசியலாக செய்வதும் திமுக தான். இந்த விஷயத்தில் பாஜக உள்ளிட்ட அரசியல் கட்சிகளும் சரி. இந்து முன்னணி உள்ளிட்ட இந்து அமைப்புகளும் திமுகவினரின் இந்த துவேஷங்களுக்கு பதிலடி மட்டுமே கொடுத்து வருகிறார்கள். இங்குள்ள இந்து மக்கள் ஆலயங்கள் பாதுகாக்கப்பட வேண்டி தற்காப்பு அரசியல் மட்டுமே செய்து வருகிறார்கள். அந்த வகையில் அரசியல் செய்வதற்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கிறது கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று பாடம் நடத்தும் அருகதை திமுகவின் அமைச்சருக்கு இல்லை .

விநாயகர் சதுர்த்தி வழிபாட்டை எப்படி வழிபட வேண்டும்? அதை எப்படி கொண்டாட வேண்டும்? என்பது இந்து மக்கள் சனாதன தர்மத்தின் வழியில் வாழும் மக்களின் தனிப்பட்ட விஷயம். மத நம்பிக்கை .அதில் தலையிடவோ உத்தரவு பிறப்பிக்கவும் யாருக்கும் அதிகாரம் இல்லை . அதே நேரத்தில் பொது இடங்களில் சிலைகளை வைத்து வழிபாடு செய்யும்போது அதனால் ஏற்படக்கூடிய நன்மை தீமை இரண்டுக்குமே மாநில அரசு தான் பொறுப்பு. என்ற வகையில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகள் வழிகாட்டும் நெறிமுறைகள் கட்டுப்பாடுகளை விதித்து அதை ஒரு ஒழுக்கமான நிர்வாகத்தின் கீழ் நடத்தி கொடுப்பதே ஒரு திறமையான மாநில அரசுக்கும் மதச்சார்பற்ற ஆட்சியாளர்களுக்கும் பொருத்தமாக இருக்கும். அதை விடுத்து இத்தனை காலமாக இருக்கும் ஒரு வழிப்பாட்டு முறையை தடுக்க வேண்டும்.அதன் மூலம் ஒரு ஒற்றுமை ஒரு ஒருங்கிணைப்பு இங்குள்ள பெரும்பான்மை மக்களிடம் வளருவதை தடுக்க வேண்டும். என்ற கெடுமதியோடு பொது இடங்களில் சிலை வைத்து வழிபடுவதை கெடுக்க நினைப்பது அனைத்து தரப்பு மக்களுக்குமான ஆட்சியாக இருக்க முடியாது. அதன் ஆட்சியாளர்கள் மதசார்பற்றவர்களாக திறமையான நிர்வாகத்தை வழங்கும் ஆட்சியாளர்களாகவும் இருக்க முடியாது.

சனாதன ஒழிப்பு மாநாட்டில் சிறப்பு பங்கேற்பாளராக பங்கேற்று சனாதன தர்மத்தை ஒழிக்க வேண்டும் எனில் அதன் வழியில் வாழும் மக்களை முதலில் ஒழிக்கத்து கட்ட வேண்டும் என்ற தெளிவான முடிவில் தனது ஆட்சியை வழிநடத்திப் போகிறார் இந்து அறநிலையத்துறை அமைச்சர். இவரின் பொறுப்பில் இருக்கும் இந்து அறநிலையத்துறையும் அதன் பிடியில் இருக்கும் இந்து ஆலயங்களில் கதியும் என்னவாக இருக்கும்? என்பதற்கு இந்த ஒற்றை அறிக்கை தெளிவான சாட்சியமாக இருக்கும்.

அரசியல் நடத்துவதற்கு பல்வேறு பிரச்சனைகள் இருக்கின்றன கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று சொல்கிறார். உண்மையில் இங்கு அரசியல் நடத்துவதற்கு பல்வேறு பிரச்சனைகள் இருப்பது உண்மை தான் . அந்த வகையில் உண்மையை ஒப்புக்கொண்ட அறநிலையத்துறை அமைச்சருக்கு அவரின் நேர்மைக்கு நிச்சயம் ஒரு பாராட்டுதலை தெரிவிக்க வேண்டும். ஏனெனில் இங்கு இவர்களது ஆட்சியில் நிர்வாக சீரழிவு சட்டம் ஒழுங்கு சீர்குலைவு பொது அமைதியின்மை திரும்பிய பக்கமெல்லாம் லஞ்சம் ஊழல் என்று மக்களின் இயல்பு வாழ்க்கை ஒரு அச்சுறுத்தலிலேயே தினந்தோறும் கடந்து போகிறது . அந்த வகையில் ஒவ்வொரு நாளும் தப்பிப்பிழைத்தால் போதும் . இந்த ஆட்சி முடியும் வரை உயிர் பிழைத்தால் போதும் என்ற அளவில் தான் பொதுமக்களின் இயல்பு வாழ்க்கை இருக்கிறது. அந்த அளவிற்கு பிரச்சனைகள் இருக்கிறது அதை வைத்து அரசியல் செய்யலாம் என்று அவராகவே எதிர்க்கட்சிகளுக்கு ஒரு தெளிவான வழிகாட்டுதலை கொடுத்திருக்கிறார். ஒரு வேங திமுகவின் தலைமை குடும்பத்திடமும் ஆட்சி அதிகாரத்திலும் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு ஏதேனும் பெரும் மனக்கசப்பும் எதிர்ப்பு மனநிலையும் இருக்குமோ? என்ற சந்தேகம் எழுகிறது. தலைமை குடும்பம் உடனடியாக விசாரித்து அதை சரி செய்வது கட்சிக்கும் ஆட்சிக்கும் நல்லது.

கடவுளை வைத்து அரசியல் நடத்த வேண்டாம் என்று அறிவுரை வழங்கும் இந்து அறநிலையத்துறை அமைச்சருக்கு அந்த கடவுளை இழித்தும் பழித்தும் பேசுபவர்களை வளர்த்து தான் நாம் அரசியல் செய்து கொண்டிருக்கிறோம் என்பதை முதலில் அவர் உணர வேண்டும். இந்து கடவுளை துவேஷிப்பது என்ற ஒற்றை சனாதன விரோதம் என்ற சித்தாந்தம் வைத்துதான் திமுக என்ற கட்சி பிறந்தது. இன்று வரை அந்த இலக்கில் தான் திமுக ஆட்சியும் பயணித்துக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் கடவுளை வைத்து அரசியல் செய்வதில் இரண்டு நிலைப்பாடு இருக்கிறது. ஒன்று ஆன்மீக வழியில் இறை வழிபாட்டை மதிக்கும் நேர்மறை அரசியல். அதை இங்குள்ள பாஜக உள்ளிட்ட மதசார்பற்ற கட்சிகள் முன்னெடுக்கிறது. திமுக போன்ற இந்து விரோத கட்சிகள் சனாதன கடவுள் என்று வரும்போது கடவுள் மறுப்பு முற்போக்கு வாதம் பேசி சனாதன கடவுள்களை இழிப்பதையும் சிறுபான்மை மதம் என்று வரும்போது மத நம்பிக்கைகள் சிறுபான்மை பாதுகாப்பு என்ற பெயரில் பெரும்பான்மை விரோத சிறுபான்மை ஆதரவு அரசியலையும் செய்கிறது . அந்த வகையில் உண்மையில் கடவுளை வைத்து மலிவான அரசியல் செய்வது நீங்களும் உங்களின் திமுக கட்சியும் தான் தமிழகத்தில் முதலிடம் பிடிக்கிறது .அதனால் இந்த அறிவுரையை அடுத்தவருக்கு வழங்கும் அருகதை உங்களுக்கும் உங்களின் கட்சிக்கும் இல்லை.

வீட்டிலிருந்தே விநாயகரை வழிபட்டால் அவர்களின் கோரிக்கையை விநாயகர் ஏற்றுக்கொள்வார் என்று தமிழகத்தின் மக்களுக்கு நீங்கள் அறிவுரை வழங்கலாம். ஆனால் அதே தமிழக மக்கள் உங்களைப் பார்த்து சபரிமலை ஐயப்பனை நீங்களும் வீட்டில் இருந்தே வணங்கலாமே ? எதற்கு உங்களின் மனைவியை அழைத்துக்கொண்டு அவ்வளவு தூரம் போய் சிரமப்பட வேண்டும்? என்று கேட்டால் உங்களின் முகத்தை எங்கே கொண்டு வைத்துக் கொள்வீர்கள். .?

ஊருக்கு உபதேசம் செய்யும் நீங்கள் உங்களின் தலைமை குடும்பத்தில் முதல்வரின் மனைவி தினம் ஒரு கோவிலில் பூஜை புனஸ்காரம் என்று செய்வதையும் வெளிமாநிலத்தில் இருக்கும் கேரள குருவாயூர் கோவிலுக்கு தங்க கிரீடத்தை எடுத்துக்கொண்டு போய் சாற்றி வழிபாடு செய்வதையும் கொஞ்சம் கவனிக்கலாம். இப்படி நீங்கள் சிறப்பு பாதுகாப்பு வளையத்தில் இருக்கும் போது எந்நேரமும் பிரயாணம் செய்து கோவில் கோவிலாக அலைந்து சிரமப்பட வேண்டியதில்லை. உங்களின் வீட்டு பூஜை அறை இவ்வளவு அழகாக இருக்கிறது. நீங்களும் எவ்வளவு அழகாக ஸ்லோகம் சொல்கிறீர்கள் .வீட்டில் இருந்தே சாமி கும்பிடலாமே ? எதுக்கு இவ்வளவு சிரமம் என்று ஒரு நாளாவது உங்களின் முதல்வரின் மனைவியை பார்த்து அக்கறையாக கேட்டிருக்கலாம். அவரையும் வீட்டிலிருந்து சாமி கும்பிட செய்திருக்கலாமே.? அப்படியானால் உங்களுக்கு முதல்வரின் குடும்பத்தின் மீது அக்கறை இல்லையா. ? என்று தமிழக மக்கள் கேட்டால் அதற்கு உங்களிடம் என்ன பதில் இருக்கும்? .

இதையெல்லாம் யோசிக்காத நீங்கள் தமிழக மக்களை மட்டும் வீட்டில் இருந்தே சாமி கும்பிடலாம் என்று சொல்வது. இங்கு இருக்கக்கூடிய கோவில் வழிபாடு பொது இடங்களில் வழிபாடு செய்யக்கூடிய உரிமை எல்லாம் உங்களின் கட்சிக்காரர்களுக்கும் ஆட்சியாளர்களுக்கும் மட்டும் தான். சாமானிய மக்களுக்கு இல்லை என்று தான் அர்த்தம். அந்த வகையில் திமுக என்ற கட்சி இந்து சனாதன எதிர்ப்பு கட்சி இங்குள்ள இந்து மக்களுக்கான விரோதம் போராட்டம் கட்சி இந்து அமைப்புக்கள் அவர்களின் வழிபாடுகள் உற்சவங்கள் அனைத்தையும் முடக்கி இங்குள்ள மக்களை தங்களின் வழிபாட்டு உரிமைகள் பண்டிகை கொண்டாட்டங்கள் விழா உற்சவங்கள் என்று அத்தனையும் தடை செய்து அதன் மூலம் பெரும்பான்மை மக்களை ஒரு அச்சத்தில் இருக்க வைத்து உங்களின் ஆட்சி அதிகாரத்தை அதிகார துஷ்பிரயோகத்தை நிலை நிறுத்த பார்க்கிறீர்கள் என்று தான் அர்த்தம்.

தனிப்பட்ட மனிதராக நீங்கள் எல்லோரும் எந்த மதத்தை வேண்டுமானாலும் ஆதரிக்கலாம். எதிர்க்கலாம். எந்த மத நம்பிக்கைகள் வழியில் வாழலாம் .அது உங்களின் தனிப்பட்ட விருப்பம் . உங்களுக்கு அதில் முழு உரிமை உண்டு. ஆனால் ஒரு சட்டமன்ற உறுப்பினராக இருக்கும் ஒரு மக்கள் பிரதிநிதியாக நீங்கள் அனைத்து மதத்தையும் சமமாக மதிக்க வேண்டும். மாநிலத்தின் ஒரு அமைச்சர் பொறுப்பில் இருக்கும் முக்கிய ஆட்சியாளராக இருக்கும் நீங்கள் அனைத்து தரப்பு மக்களையும் அரவணைத்து செல்ல வேண்டும். அதற்கு உரிய வகையில் நேர்மையான நிர்வாகத்தை வழி நடத்துவதும் தான் உங்களின் பொறுப்பிற்கும் நீங்கள் வகிக்கும் பதவிக்கும் குறைந்தபட்ச மரியாதையாக இருக்கும். ஆனால் நீங்கள் வகிக்கும் பொறுப்பிற்கும் குறைந்தபட்சம் இந்து அறநிலையத்துறை அமைச்சர் என்ற பெயரில் கோவில்களில் முதல் மரியாதை வாங்கிக் கொள்வது. எந்த கோவிலில் என்ன செய்ய வேண்டும் ? என்ன செய்யக்கூடாது என்று இருந்த இடத்திலிருந்து உத்தரவு பிறப்பிக்கும் அதிகாரம் என்ற அந்தஸ்தில் இருக்கும் அந்தத் தகுதியை யாவது காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்ற அடிப்படையிலாது குறைந்தபட்சம் உங்களின் துறை சார்ந்த விஷயம் என்ற வகையில் இந்த இந்து மக்களின் பரிதாப நிலையை பற்றி மனிதாபிமானத்தோடு யோசித்து இருக்கலாம்.

விநாயகர் சதுர்த்தி விழா என்பது வெறும் பண்டிகை கொண்டாட்டம் மட்டுமல்ல . களிமண் சிலைகளை நிறுவி ஐந்து நாட்கள் நடைபெறும் விழா உற்சவத்தில் சிறு குறு வியாபாரிகளாக எத்தனையோ லட்சம் பேர் அவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்து கொள்வார்கள். இந்த விநாயகர் சதுர்த்தி உற்சவத்தின் விழா ஏற்பாடுகள் சம்பந்தமாக எத்தனையோ லட்சம் சுயதொழில் முனைவோர்கள் வாழ்வாதாரம் பெறுகிறார்கள் . இந்த விநாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் செல்வதன் மூலம் மக்கள் மத்தியில் ஒரு விழாக்கால உற்சவமும் மனதளவில் ஒரு புத்துணர்வும் நம்பிக்கையும் ஆன்மீக ரீதியாக மக்களை ஒருங்கிணைக்கும் ஒரு பெரும் ஒற்றுமையும் உருவாகும் .இந்த சிலைகளை எல்லாம் கொண்டு போய் நீர் நிலைகளில் விதர்சனம் செய்வதன் மூலம் எல்லா நீர் நிலைகளிலும் களிமண் படுகைகள் கொண்டுவரப்பட்டு நீர் நிலைகளின் பாதுகாப்பு சுற்றுச்சூழல் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்படும்.

சுற்றுச்சூழல் முதல் மக்களின் வாழ்வாதாரம் வரை அத்தனையையும் ஒருசேர கட்டமைக்கும் இதுபோன்ற விழா உற்சவங்களை எந்த யோசனையும் இன்றி உங்களால் இடையூறு வருமானால் உங்களுக்கு இந்த மண்ணைப் பற்றியும் இங்குள்ள மக்களை பற்றியோ அவர்களின் ஆன்மீக உணர்வை பற்றியோ எள்ளளவும் அக்கறை இல்லை. உங்களுக்கென்று ஒரு அஜெண்டா இருக்கிறது. அந்த வகையில் இங்குள்ள மக்கள் நிம்மதியாக வாழ கூடாது.வாழ விடக் கூடாது. அவர்களின் நல்வாழ்வு ஆன்மீகம் பக்தி என்ற வகையில் எந்த வகையிலும் சீர்பட்டு விடக்கூடாது. இதற்கெல்லாம் காரணமான ஒரு ஆன்மீக உணர்வு எழுச்சியோ மக்களிடம் ஒரு ஒருங்கிணைப்பு ஒற்றுமையோ வந்து விடக்கூடாது. அதையெல்லாம் செய்ய முயலும் இந்து அமைப்புகள் இங்கு தலை தூக்கவே கூடாது. அந்த ஒற்றை எண்ணம் கொண்டு இந்த விநாயகர் சதுர்த்தி விழாவை முழுமையாக சீர்குலைக்க வேண்டும் என்ற கெடுமதியோடு நீங்கள் செயல்படுவது சந்தேகத்திற்கு இடம் என்று நிரூபணம் ஆகிறது.

இந்து என்றால் திருடன் என்று உங்களின் முன்னாள் தலைவர் சொன்னதையும் இந்து சடங்குகள் சம்பிரதாயங்கள் எல்லாம் உண்மையில் கேவலமானவை என்று உங்கள் கட்சியின் தலைவரும் இப்போதைய முதல்வரும் சொன்னதையும் அவரின் மகனும் இளவரசருமான உதயநிதி திமுகவை உருவாக்கியதே சனாதனத்தை அழிப்பதற்கு தான் என்று சொன்னதையும் நீங்கள் நிறைவேற்றி வைக்க பாடுகிறீர்கள் அந்த வகையில் கட்சியின் தலைமைக்கும் கொள்கைக்கும் உங்களின் பங்களிப்பை சிறப்பாக வழங்குகிறீர்கள். அந்த வகையில் உங்களின் நேர்மைக்கு நிச்சயம் பாராட்டுதல்கள் தெரிவிக்க வேண்டும்.


Share it if you like it