பாரதம் போன்ற அதிக மக்கள் தொகையும் உழைக்கும் திறன் கொண்ட இளைய தலைமுறை அதிகம் கொண்டிருக்கும் நாடுகளில் வேலை வாய்ப்பும் வருமானமும் அத்தியாவசியமாகிறது. எல்லா மனிதர்களுக்கும் அரசு வேலை வாய்ப்பு அல்லது எல்லோருக்கும் பெரிய அளவிலான தொழில் கட்டமைப்புகளோ சாத்தியம் இல்லை. ஆனால் ஒவ்வொரு தனி மனிதனுக்கும் தனிநபர் வருமானம் தேவை . அந்த வருமானத்தை ஏற்படுத்தி தருவதற்கான தொழில் வியாபாரம் வர்த்தகம் என்று ஏதோ ஒரு பொருளாதாரம் மூலம் தேவை. விவசாயம் பெரிய அளவிலான தொழிற்சாலைகள் சிறு குறு தொழில்கள் கால்நடை வளர்ப்பு ஜவுளித்துறை மருத்துவம் என்று பல்வேறு துறைகள் எப்படி ஒரு தேசத்திற்கு அத்தியாவசியமாகிறதோ? அப்படியே கைவினைப் பொருட்கள் கலைப் பொருட்கள் சிறு குறு கைவினை குடிசை தொழில் செய்யும் உழைப்பாளிகளை ஒருங்கிணைத்து ஊக்குவிப்பதும் அவர்களின் தொழில்களை அவர்களின் வாழ்வாதாரமாக மாற்றி அவர்களுக்கு நிரந்தரமான வருமானத்தையும் பொருளாதார கட்டமைப்புகளையும் உருவாக்கித் தருவதும் தேசத்தின் வளர்ச்சிக்கு அவசியம்.
ஒரு தேசம் சீரான வளர்ச்சியை பெற வேண்டும் எனில் விவசாயம் கால்நடை வளர்ப்பு தொழில் துறை பாதுகாப்பு என்று எல்லாத் துறைகளிலும் தடம் பதிக்க வேண்டும். இதில் சிறு குறு தொழில்களும் குடும்ப அளவிலான குடிசைத் தொழில்களும் கூட முக்கிய இடம் பெறுகிறது . அந்த வகையில். கைவினை தொழிலாளர்களையும் குடிசை தொழில் அளவில் பாரம்பரிய கைத்தொழில் மூலம் சமூகத்தில் அத்தியாவசிய பொருட்களுக்கான தேவைகளை பங்களிப்பாக வழங்குபவர்களையும் அவர்களின் நலிந்த நிலையில் இருந்து மீட்டு அவர்களின் கைவினை தொழில்களையும் பாதுகாக்க வேண்டும். அந்த தொழில்களை மூலமாகவே அவர்களுக்கு உரிய வாழ்வாதாரத்தையும் பெற்றுத் தர வேண்டும். இந்த இரண்டையும் முன்வைத்து அவர்களுக்கான தொழில் வருமான வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு எதிர்காலத்தில் ஒரு பெரும் சந்தை பொருளாதாரத்திற்கும் வழிகோல முடியும். அதே நேரத்தில் இந்த கைவினை தொழில்கள் கலை பொருட்கள் உற்பத்தி உள்ளிட்டவற்றை லாபகரமான தொழிலாக மாற்றி சர்வதேச அளவில் போட்டி போடவும் முடியும். அடுத்த தலைமுறைக்கு இந்த பாரம்பரிய தொழில்களை எல்லாம் லாபகரமான பன்னாட்டு தொழிலாகவும் மாற்றித் தர முடியும். ஒரு தொலைநோக்கு பார்வை கொண்ட மக்கள் நலன் சார்ந்த அரசாக மத்திய அரசு தேசத்தின் முழுவதும் இருக்கும் கைவினை கலைஞர்களின் எதிர்காலம் பாரதத்தின் பாரம்பரிய தொழில்களின் மீட்பு உள்ளேற்றவற்றை மனதில் வைத்து இதற்காக ஒரு மாபெரும் திட்டத்தை முன்மொழிந்திருக்கிறது.
பாரதம் முழுவதும் இருக்கும் கைவினை கலைஞர்களை ஒன்றிணைத்து அவர்களின் பாரம்பரியமான கைவினை தொழில்களை பாதுகாத்து அதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு போவதற்கான ஒரு சிறப்பு பொருளாதார திட்டத்தை மத்திய அரசு விஸ்வகர்மா யோஜனா என்ற பெயரில் அமலுக்கு கொண்டு வருகிறது. இந்த திட்டத்தின் படி நாடு முழுவதும் இருக்கும் கைவினை கலைஞர்கள் தங்களின் சுய விருப்பத்தின் பேரில் இந்தத் திட்டத்தில் தங்களை இணைத்துக் கொள்ள முடியும்.
மண்பாண்டக் கலைஞர்கள் கைவினை கலைஞர்கள் கலைப் பொருட்கள் உற்பத்தி நுண்கலைப் பொருட்கள் தயாரிப்பு முதல் விவசாய உள்ளீடுகளை முன்வைத்து அத்தியாவசிய பொருட்களை தயாரிக்கும் கைவினை கலைஞர்கள் வரை பலரும் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தில் இணைந்து கொள்ள முடியும். அவரவர்க்கு விருப்பமான ஆர்வமுள்ள ஒரு கைத்தொழிலை தேர்ந்தெடுத்து கற்றுக்கொள்ள முடியும். மத்திய அரசே அவர்களுக்கு தேவையான கைத்தொழில் பயிற்சிகளை வழங்கும். அதற்கு தேவையான தொழில்நுட்பங்கள் உட்பட கட்டமைப்புகள் அனைத்தையும் மத்திய அரசே உருவாக்கும். இதில் பயிற்சி காலத்தில் பயிற்சி பெறும் நபர்களுக்கு நாள் ஒன்றுக்கு ரூபாய் ₹500 வீதம் உதவித்தொகை வழங்கப்படும். பயிற்சியை வெற்றிகரமாக முடித்த பிறகு அந்த தொழிலை தொடங்குவதற்கு தேவையான கருவிகள் வாங்குவதற்கு நபர் ஒன்றுக்கு ரூபாய் 15,000 இந்த திட்டத்தின் கீழ் வழங்கப்படும்.
தங்களின் உற்பத்தி பொருட்களை பெரிய அளவில் உற்பத்தி செய்யவும் அதை சந்தைப்படுத்தி லாபகரமாக தொழில் ஈட்டவும் தேவையான அனைத்து கட்டமைப்புகளையும் மேற்கொள்ள அவர்களுக்கு ஒரு லட்சம் ரூபாய் வட்டி இல்லாத கடன் உதவியாக வழங்கப்படும். அடுத்த இரண்டு லட்ச ரூபாய்கள் 5% வட்டியுடன் கடனாக வழங்கப்படும். இந்தத் திட்டத்திற்கென்று நாடு முழுவதும் பயனாளர்களின் பயிற்சிகள் மற்றும் கடன் உதவிக்காக ₹ 13,000 கோடிகளை மத்திய அரசு ஒதுக்கி இருக்கிறது. சமகாலத்தில் நலிந்த கைவினைகளுக்கு இதன் மூலம் பெரிய அளவில் மறுவாழ்வு கிடைக்கும். அவர்களின் பாரம்பரிய தொழில் இதுநாள் வரையில் அவர்களின் மனதிருப்திக்காக மட்டுமே இயங்கியது. சில பெரும் நஷ்டத்தில் கூட இருந்தது. இனி லாபகரமாக இயங்கி அவர்களை மன நிம்மதி அடைய செய்யும் . அந்த வகையில் எவ்வளவு வறுமையின் பிடியில் இருந்தாலும் தனது பாரம்பரிய தொழிலை விடக்கூடாது என்ற வைராக்கியத்துடன் வாழ்ந்து வந்த பாரதியர்கள் அவர்களின் தவத்தில் வெற்றி பெற்றதன் அடையாளமாகவே இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை பார்ப்பார்கள். ஏழையின் சிரிப்பில் இறைவனை பார்ப்போம் என்று உளமாற நம்பும் ஒவ்வொரு பாரதியனும் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கரம் கூப்பி வணங்கவே செய்வான். இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் இந்த மண்ணின் பாரம்பரிய தொழிலும் அதை மட்டுமே நம்பி வாழும் சாமானியனும் எந்த காலத்திலும் தலை நிமிர்ந்து வாழ்ந்து விடக்கூடாது என்ற கெடுமதி கொண்டவனாகவே இருக்க முடியும்.
இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டம் வெற்றிகரமாக அமலுக்கு வரும்போது தென் தமிழகத்தின் பனை ஓலையை பயன்படுத்தி செய்யப்படும் கலைப் பொருட்கள் எல்லாம் வடகிழக்கு மாநிலங்களிலும் காஷ்மீரின் பனி மலைகளிலும் ஆன்மீக தலங்கள் முதல் வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் வரை அனைவரின் கைகளுக்கும் போய் சேரும். வடகிழக்கு மாநிலங்களில் உற்பத்தி செய்யப்படும் குளிர் காலத்து ஆடைகள் தமிழகத்தின் ஊட்டி கொடைக்கானல் பகுதி மக்களுக்கு எளிதாக கிடைக்கும். அவ்வாறே சௌராஷ்டிரம் ராஜபுத்திரனும் உள்ளிட்ட மக்களின் கைவினைப் பொருட்களும் ஆடைகளின் கைவண்ணமும் தென்னிந்திய மக்களுக்கு இன்னும் பெரிய அளவில் சந்தைப்படுத்தப்படும். திருமலை திருப்பதியில் மட்டுமே சொற்ப அளவில் விற்பனையாகும் அபூர்வ மரப்பாச்சி பொம்மைகள் நாடு முழுவதிலும் உள்ள ஒவ்வொரு குழந்தையின் நலனையும் ஆரோக்கியமும் பாதுகாக்க தேசம் முழுமைக்கும் சந்தைப்படுத்தப்படும்.
இதன் மூலம் வீட்டில் இருந்தபடியே பாரதத்தின் மூலை முடுக்குகளில் எல்லாம் தனது உழைப்பாலும் திறமையாலும் நுண்கலை சார்ந்த உழைப்பாலும் சாமான்ய பாரதியன் படைத்தளிக்கும் ஒவ்வொரு கைவினை பொருளும் நுண் கலை பொருளும் பாரதம் முழுமைக்கும் எல்லா இடங்களிலும் சர்வ சாதாரணமாக போய் சேரும். இதன் மூலம் ஒரு கடை கோடி கிராமத்தில் வாழும் பாரதியின் தற்சார்பு உற்பத்தி பொருளுக்கு தேசம் முழுவதும் சந்தை கிடைக்க பெறும்.. வெளிநாட்டு சுற்றுலா பயணிகளை கவரும் பட்சத்தில் அது சர்வதேச சந்தையிலும் ஏற்றுமதி என்ற பெயரில் தடம் பதிக்க தொடங்கும். இதன் மூலம் கிடைக்க பெறும் சந்தைகளும் பொருளாதார பலமும் தொழில் கட்டமைப்பும் இந்த தொழில்களில் தன்னை ஈடுபடுத்திக் கொள்ளும் ஒவ்வொரு பாரதியின் தனிநபர் வருமானத்தையும் உறுதி செய்யும். தொழில் வளத்தையும் உற்பத்தி சார்ந்த தொழில் வாய்ப்பையும் தேசிய அளவில் பலப்படுத்தும்.
தனிமனித வருவாய் சுயசார்பு தொழில் வள பாதுகாப்பு என்று பொருளாதார காரணிகளை பாதுகாத்து அதன் மூலம் தேசத்தின் பொருளாதாரத்தை பலப்படுத்தும். நாட்டில் வேலையில்லா திண்டாட்டம் நீங்கி சுயசார்பு பொருளாதாரத்தை நோக்கி அடுத்த அடுத்த தலைமுறைகள் நகரத் தொடங்கும். இதன் மூலம் உயர்கல்வியோ அல்லது பல லட்சங்களில் செலவு செய்து முதலீடு இருந்தால் மட்டுமே கை நிறைய சம்பாதிக்க முடியும். வளமாக வாழ முடியும். இல்லையென்றால் வறிய நிலையில் மட்டுமே வாழ முடியும் என்ற சமகால நிலை மாறும். சாதாரண கைத்தொழில் கூட திறம்பட கற்றுக் கொண்டு அதை அர்ப்பணிப்போடு செய்தால் அரசு உதவியோடு அதையும் ஒரு வளமான தொழிலாக மாற்றிக் கொள்ள முடியும். அதன் மூலம் தனது வாழ்வையும் வளப்படுத்திக் கொண்டு தேசத்தின் பொருளாதாரத்தையும் பலப்படுத்த முடியும் என்ற நிலை வரும்.
இது எதிர்காலத்தில் சந்ததிகளை மனதில் ஒரு தன்னம்பிக்கையை வளர்க்கும். கைத்தொழில் ஒன்றைக் கற்றுக்கொள் கவலை உனக்கில்லை ஒத்துக்கொள் என்ற முன்னோரின் வாக்குப்படி நம் சந்ததிகள் வெறும் ஏட்டுக்கல்வி என்பதை கடந்து ஏதேனும் ஒரு தொழில் கல்வியும் கைவசம் உண்டு என்ற அளவில் முழு தன்னம்பிக்கையுடன் வளர்ச்சி பாதையில் பயணிக்க முடியும். இதன் மூலம் எதிர்காலத்தில் ஒவ்வொரு தனி மனிதனின் சுயசார்பும் உறுதிப்படுத்தப்படும். தேசத்தின் பொருளாதாரம் பாதுகாக்கப்படுவதோடு தனிமனித குற்றங்கள் சமூக குற்றங்கள் குறைய தொடங்கும். குறிப்பாக வறுமை கோட்டிற்கு கீழே இருக்கும் மக்கள் எண்ணிக்கை குறையும். இதன் மூலம் கல்வி அரசாங்க வேலை வாய்ப்பு பெரிய தொழில் முதலாளி என்ற அந்தஸ்து இல்லாவிட்டாலும் கூட ஒரு சாமானியலும் தன் சொந்த உழைப்பை கொண்டு இந்த தேசத்தில் கௌரவமான ஒரு சுயசார்பு வாழ்க்கையை வாழ முடியும் என்ற உன்னதமான இலக்கை எட்ட முடியும் .அது ஒன்றே சர்வதேச அளவில் பாரதத்தின் உன்னதத்தை நிலை நிறுத்தும்.
அந்த வகையில் அந்நிய சார்பு என்ற நிலையிலிருந்து விலகி முற்றிலுமாக சுயசார்பு பொருளாதாரம் தற்சார்பு பாரதம் என்ற வகையில் மேக் இன் இந்தியா என்ற திட்டத்தின் மூலம் பெரும் தொழில்களுக்கு சுயசார்பு கட்டமைப்புகளை உருவாக்கி கொடுத்த மத்திய அரசு சாதாரண கைத்தொழில் கைவினை தொழில தொழிலாளர்கள் கலைப் பொருள் உற்பத்தியாளர்களையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் அவர்களுக்கான சுயசார்பு பொருளாதாரத்தையும் தொழில்வள பாதுகாப்பையும் பாரம்பரிய தொழில்களை மீட்டு அதை லாபகரமான தொழிலாக மாற்றி எக்காலமும் அவை நிலையாமல் பாதுகாக்க வேண்டும் என்ற நல்லெண்ணத்திலும் தொலைநோக்கு அடிப்படையிலும் தான் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை கொண்டு வருகிறது.
ஆனால் நாடு முழுமைக்குமான எந்த ஒரு நலத்திட்டம் வந்தாலும் அதை எதிர்த்து விஷம பிரச்சாரம் செய்வது. தனி மனித வருவாய் முன்னேற்றம் என்ற எந்த ஒரு நல்வாய்ப்பையும் மக்களுக்கு கிடைத்த பெறாமல் செய்வது. அதன் மூலம் இங்குள்ள வறிய மக்களை எப்போதும் வறுமையின் பிடியிலேயே இருக்கச் செய்வது . அவர்களை நிரந்தர இலவச வாக்கு வங்கிகளாக இருக்கச் செய்வது என்ற முழுக்க முழுக்க வாக்கு வங்கி அரசியலில் ஊறிப்போன அரசியல் கட்சிகளும் அமைப்புகளும் இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை சாதீய வண்ணம் பூசி எதிர்ப்பது ஒன்றும் ஆச்சரியம் இல்லை. மருத்துவத்திற்கு தகுதி தேர்வு கூடாது என்பவர்கள் .நாடு முழுமைக்கும் எந்த ஒரு திட்டமும் சட்டமும் பொதுவாக இருக்கக் கூடாது என்று பிரிவினை எண்ணம் உடையவர்கள் . நாட்டில் உள்ள ஒட்டுமொத்த கைவினை தொழிலாளர் தொழிலாளர்களையும் கலைப்பொருள் உற்பத்தியாளர்களையும் ஒருங்கிணைத்து அதன் மூலம் ஒரு சுயசார்பு பொருளாதாரத்தையும் சர்வதேச அளவில் ஒரு பாரம்பரிய பொருட்களுக்கான சந்தையையும் மீட்டெடுக்க மத்திய அரசு முயல்வதை நிச்சயம் ஏற்கமாட்டார்கள். எதிர்க்கத்தான் செய்வார்கள்.
தங்கம் விலை வெள்ளி விலை உயர்ந்து அதன் மூலம் சாதாரண பொற்கொல்லர்கள் நகை உற்பத்தி தொழிலில் தினக்கூலிகளாக வேலை பார்த்தவர்கள் வாழ்விலந்து பெரும்பாலானவர்கள் தற்கொலை செய்து கொண்டதை வேடிக்கை பார்த்தவர்கள். பாரம்பரியமான பட்டு நெசவு தொழிலில் இருந்தவர்கள் எல்லாம் தாக்குப் பிடிக்க முடியாமல் தொழிலில் இருந்து வெளியேறிவதை மௌனமாக ரசித்தவர்கள் . அந்த தொழில்களை எல்லாம் இன்று தனதாக்கி பாரம்பரிய தொழிலை சிதைத்தவர்கள். இந்த சாமானிய கைவினை தொழிலாளர் மற்றும் கலைப் பொருட்கள் தயாரிப்பாளர்களை எல்லாம் மீட்டு தொழில்களை பாதுகாக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டத்தை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும். ?
ஒரு சாமானியன் தனது தொழிலை முன்னெடுக்க முடியாத நிலையில் பொருளாதார காரணிகள் மாறி அதன் காரணமாக அவன் தொழிலை விட்டு வெளியேறுவது. வாழ்வாதாரம் இழந்து தற்கொலை செய்து கொள்வது. இல்லையேல் தனக்கு பரிச்சயமும் இல்லாத ஏதேனும் ஒரு தொழிலில் தினக் கூலியாக பயணிப்பது. என்று ஒரு தொழிலையும் அது சார்ந்த ஒரு பொருளாதாரத்தையும் முற்றாக அழித்துவிட்டு அந்த மக்களை எல்லாம் அரசாங்கத்தின் நலத்திட்ட உதவிகளை எதிர்பார்த்து நிற்கும் நிலையில் வைத்தவர்கள் .இலவசம் வாக்களிக்க பணம் என்பதை முன்னிறுத்தி அவர்களின் வாக்குகளை கவர்ந்து அதன் மூலம் ஆட்சி அதிகாரத்திற்கு வந்து கொள்ளை அடிப்பதே தொழிலாக கொண்டவர்கள் .அந்த சாமானிய மக்களின் வாழ்வாதாரத்தை என்றைக்கும் பாதுகாக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டங்கள் வேப்பங்காய் போல கசக்கத்தான் செய்யும்.
இந்தத் திட்டத்தை எதிர்ப்பவர்கள் எல்லாம் உழைப்பு திறமை முயற்சி பன்முகத் திறமை வளர்ப்பு என்ற ஆக்கபூர்வமான வழிகளில் இருந்த மக்களை நாள் முழுவதும் நெடுந்தொடர்கள் அதன் மூலமாக சீரழிவு உற்பத்தி உழைப்பு சார்ந்த எந்த ஒரு தொழிலுக்கும் வாய்ப்பு இல்லாத ஒரு சமூக சூழல் ஆண்களுக்கு போதை பெண்களுக்கு இலவசம் உரிமைத் தொகை வாக்குறுதிகள் என்று ஒட்டுமொத்தமாக சமூகத்தின் பொருளாதார காரணிகளையே சிதைத்தவர்கள்.தங்களின் ஆட்சி அதிகாரம் மட்டுமே குறிக்கோளாக கொண்டு செயல்படுபவர்களுக்கு தொலைநோக்கு பார்வையில் பல தலைமுறைகளையும் வாழ வைத்து அதன் மூலம் அருகி வரும் பல பாரம்பரிய தொழில்களையும் மீட்டெடுக்கும் விஷ்வகர்மா யோஜனா திட்டங்கள் சாதிய திட்டங்களாக குலத்தொழில் திணிப்பாக தான் தெரியும் .அது காமாலை கண்டவனுக்கு பார்ப்பதெல்லாம் மஞ்சளாக தெரியும் என்பார்களே அது போன்றதொரு நிகழ்வு தான் . அவர்களின் கூச்சலையும் வெற்று அரசியலையும் ஒரு பொருட்டாக கருதாமல் புறம் தள்ளி போனாலே போதும்.
இந்த விஸ்வகர்மா யோஜனா திட்டத்தின் மூலம் பயன்பெற இருக்கும் பல கோடி பாரதியர்கள் தாமாக முன்வந்து திட்டத்தில் தங்களை இணைத்துக் கொண்டு அவர்களும் வாழ்வார்கள். அவர்களின் சந்ததிகளின் வாழ்வையும் பாதுகாத்துக் கொள்வார்கள். நமக்குத் தேவை அந்த சாமானிய பாரதியர்களின் ஆதரவும் ஒத்துழைப்பும் தான் தவிர அரசியல் கட்சிகளின் ஆதரவு ஒத்துழைப்பு அல்ல. அந்த வகையில் யார் ஆதரித்தாலும் எதிர்த்தாலும் சாமானிய கைவினை தொழிலாளர்களை பாதுகாக்கும் விஸ்வகர்மா யோஜனா திட்டம் வெற்றிகரமாக அமலுக்கு வரும். அது எண்ணற்ற பாரதியர்களின் வாழ்வில் ஒளி விளக்கை ஏற்றி வைக்கும்.