சமீபத்தில் கனடாவில் கொல்லப்பட்ட காலிஸ்தான் பயங்கரவாதி ஹார்தீப் சிங் கொலை விவகாரத்தில் கனடா இந்திய உளவுத்துறையை குற்றம் சாட்டுகிறது அதை முன் வைத்து கனடாவில் இருந்த இந்திய தூதரை வெளியேற்றி இருக்கிறது இந்த விவகாரத்தில் பாரதத்திற்கு எதிராக கூட்டறிக்கை விடுமாறு தனது நட்புக்காக நாடுகளிடமும் கோரிக்கை விடுத்திருக்கிறது இந்த விவகாரத்தில் சர்வதேச ஆதரவை திரட்டி பாரதத்திற்கு ஒரு உலகளாவிய நெருக்கடியை கொடுக்க கனடா முயற்சிக்கிறது. கனடாவின் குற்றச்சாட்டுகளை அடியோடு மறுத்து நிராகரித்த பாரதத்தின் வெளியுறவுத்துறை கடந்த காலங்களில் கனடாவை மையமாகக் கொண்டு செயல்படும் சமகாலங்களிலும் பயங்கரவாதத்தை கட்டவிழ்த்து விடும் பல்வேறு காலிஸ்தான் பிரிவினைவாத பயங்கரவாத அமைப்புகள் . அதன் தலைவர்கள் பொருளாதார மூலம் அனைத்தையும் ஆதாரபூர்வமாக பட்டியலிட்டு கனடா நாட்டு வெளியுறவுத் துறைக்கு அனுப்பி வைத்து அதற்கு பதில் கேட்கிறது.
அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகளிலும் காலிஸ்தான் பயங்கரவாத அமைப்பை சார்ந்தவர்கள் குடியுரிமை பெற்று வாழ்கிறார்கள். அவர்களுக்கு அங்கும் தொழில் வியாபார கட்டமைப்புகள் உண்டு. சமீப காலமாக அந்தந்த நாடுகளிலும் பல்வேறு காலிஸ்தான் பயங்கரவாதிகளும் கடந்த காலங்களில் பாரதத்தால் தேடப்பட்டு வந்த பயங்கரவாதிகளும் மர்மமாக மரணித்தும் இருக்கிறார்கள். தனிமனித கொலைகளாக கொல்லப்படும் இருக்கிறார்கள். அதற்கு உரிய விசாரணைகளை அந்தந்த நாடுகள் நடத்தி சட்ட நடவடிக்கையும் எடுத்திருக்கிறது. ஆனால் இதுவரையில் எந்த ஒரு நாடும் பாரதத்தின் உளவுத்துறையையும் வெளியுறவுத் துறையையும் குற்றம் சாட்டியதில்லை .
ஒருவேளை இன்று கனடா குற்றம் சாட்டுவது போல ஹர்தீப் சிங் நிசார் கொலையில் இந்திய உளவுத்துறை சம்பந்தப்பட்டிருப்பதாக அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா உள்ளிட்ட நாடுகள் சந்தேகித்தாலும் அதைப்பற்றி அந்த நாடுகள் வெளிப்படையாக பேசவோ விமர்சிக்கவோ முன் வராது . காரணம் இந்தியாவிற்கு என்று எப்படி ரா என்று ஒரு உளவுத்துறை இருக்கிறதோ ? அதே வகையில் அமெரிக்கா பிரிட்டன் ஆஸ்திரேலியா நாடுகளுக்கும் தனித்தனியே உளவுத்துறை உண்டு. அந்த உளவுத்துறைகள் எல்லாம் உலகம் முழுவதும் கால் பதித்து தங்களது நாட்டுக்கு ஆதரவாக கருத்தியல் உருவாக்குவதும் அந்தந்த நாடுகளுக்கு எதிரான அமைப்புகள் தனிநபர்கள் ஆட்சியாளர்கள் மீது ரகசிய நடவடிக்கை மேற்கொள்வதையும் இன்றுவரை செய்து வருகிறது . எப்படி அவர்களின் நாடுகளுக்கு உளவுத்துறை கட்டமைத்து அதன் மூலம் அவர்களின் பாதுகாப்பு கண்காணிப்பு பணிகளை செய்ய அவர்களுக்கு அதிகாரம் இருக்கிறதோ? அதேபோல பாரதத்திற்கும் தனது தேசத்தின் பாதுகாப்பிற்கென்று தேசத்திற்கு உள்ளும் புறமும் தேவையான ரகசிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு முழு உரிமை உண்டு என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள். அதனால் எந்த ஒரு நாடும் கனடாவின் பேச்சுக்கு ஆதரவு தெரிவிக்கவும் கூட்டறிக்கை விடவோ நிச்சயம் முன் வராது.
கனடா நாட்டின் கருத்துக்கு அமெரிக்கா ஆஸ்திரேலியா பிரிட்டன் உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தெரிவிக்காததால் அவை யாவும் பாரதத்தை முழுமையாக நம்புவதாகவோ அல்லது கனடாவை எதிர்ப்பதாகவோ அர்த்தம் இல்லை. அவர்களை பொறுத்தவரையில் ஹர்திக் சிங் கொலை விவகாரம் முழுக்க முழுக்க பாரதத்தின் காலிஸ்தான் பயங்கரவாதம் இந்திய வம்சாவளி சார்ந்த ஒரு தனிநபர் மரண விவகாரம். கனடா நாட்டு குடியுரிமை பெற்று வாழ்ந்திருந்தாலும் அவன் பூர்வ குடி கனடியன் இல்லை. கனடா நாட்டு அரசியலில் நேரடி பங்கு வகித்தவனோ இல்லை. அதனால் அவனது மரணம் அது தொடர்பான விவகாரங்களில் கனடாவில் மேற்கொண்டு ஆராய்ச்சிகள் செய்யத் தேவையில்லை என்பதையே இந்த நாடுகள் நிலைப்பாடு. அதையே கனடாவிற்கும் அறிவுறுத்தும். கனடா அதை ஏற்காத பட்சத்தில் அமைதியாக கடந்து போகும் . ஆனால் நிச்சயம் கனடாவின் கருத்திற்கு ஆதரவு கொடுக்காது.
ஹர்தீப் சிங் நிசார் கொலை செய்யப்பட்டதோ அல்லது அவனுக்கு நீதி வேண்டி மட்டும் கனடா பாரதத்தை சீண்டிப் பார்க்கவில்லை. உண்மையில் கனடாவின் பிரச்சனை தொடர்ச்சியாக சமீப காலங்களில் பாரதத்திற்கு எதிரான பயங்கரவாத நடவடிக்கைகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் ஈடுபட்ட சுமார் 40க்கும் மேற்பட்டவர்கள் பல்வேறு நாடுகளில் தனி மனித கொலைகள் ஆகவும் விபத்திலும் மர்மமாகவும் மரணித்து வருகிறார்கள். அந்த வகையில் தொடர்ச்சியான காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மரணம் உலகம் முழுவதிலும் இருக்கும் காலிஸ்தான் பயங்கரவாத தலைவர்கள் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது. இவர்களை எல்லாம் பின்னிருந்து ஆதரித்து வரும் பல்வேறு நாடுகளின் உலக பிரிவுகளும் எங்கே தங்களின் கூட்டு வெளிப்பட்டு விடுமோ? என்ற அச்சத்தில் இருக்கிறது. இதற்கெல்லாம் ஒரு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் எனில் பாரதத்தின் நடவடிக்கைகளை கட்டுப்படுத்த வேண்டும். அதை உலக அளவில் ஒரு நெருக்கடிக்கு உள்ளாக்க வேண்டும் என்று திட்டமிட்டு தான் கனடா ஹர்திப் சிங் விவகாரத்தை கையில் எடுத்திருக்கிறது.
ஹர்திக் சிங் கொலை விவகாரத்தை கையில் எடுப்பதன் மூலம் கனடாவிற்கு இரட்டை லாபம் இருக்கிறது. ஒன்று உலக அளவில் எதிரிகளே இல்லாத விஸ்வரூப வளர்ச்சியை கொண்டிருக்கும் பாரதத்தை கட்டுப்படுத்துவதன் மூலம் வல்லரசு நாடுகளும் கூட கனடாவை மெச்சம் படியாக ஒரு அசாத்திய சக்தியாக கனடா தன்னை உலக அளவில் நிலை நிறுத்திக் கொள்ளும். மறுபக்கம் ஹர்தீப் சிங் விவகாரம் பெரிய அளவில் எதிரொலிக்கும்போது அதன் மூலம் கனடா நாட்டில் கணிசமான வாக்கு வங்கியாக செயல்படும் சீக்கிய மக்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் கனடாவின் தற்போதைய பிரதமர் ஜஸ்டின் புரோட்டோவிற்கு முழுமையாக கிடைக்கும். அதை வைத்து அவர் உள்நாட்டு அரசியலில் தன்னை ஒரு வலுவான ஆளுமையாக நிலை நிறுத்திக் கொள்வார். எதிர்வரும் தேர்தலில் இன்னும் பெருவாரியான வெற்றிகளை பெறவும் அது உதவும் என்று திட்டமிட்டு தான் ஹர்திப் சிங் விவகாரத்தை பாரதத்திற்கு எதிரான அஸ்திரமாக அவர் பயன்படுத்தி வருகிறார்.
தன்னுடைய அரசியல் ஆதாயத்திற்காகவும் சர்வதேச அளவில் பாரதத்திற்கு ஒரு தலைகுனிவை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தோடு கனடா நாட்டு பிரதமர் கையில் எடுத்தாலும் அது அவரின் தனிமனித முயற்சி மட்டும் இல்லை. இதன் பின்னணியில் பல்வேறு மேற்குலக நாடுகள் இருக்கக்கூடும் . ஆனால் எந்த ஒரு நாடும் வெளிப்படையாக ஆதரிப்பதற்கு தயங்கவே செய்யும். காரணம் இந்த ஹர்திப் சிங் விவகாரத்தை கையில் எடுக்கும் பட்சத்தில் காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவான கனடாவின் நிலைப்பாடு உலக அளவில் வெளிப்பட்டதை போல் தங்களின் நிலைப்பாடும் வெளிப்பட்டு விடுமோ? அதன் மூலம் வரும் ராஜ்ஜிய நெருக்கடிகள் எப்படி இருக்குமோ? என்ற அச்சம் அவர்களை வெளிப்படையாக ஆதரிக்க வைக்காது. அதனால் கனடா சில நாட்கள் உள்நாட்டு வாக்கு வங்கி அரசியலுக்காக ஹர்திப் சிங் விவகாரத்தை வைத்து அறிக்கை போர் கண்டனம் என்று சில அரசியலை செய்து விட்டு வழக்கம் போல் தனது வேலையை பார்க்க போய்விடும்.
சர்வதேச அளவில் பேசு பொருளாகும் எந்த ஒரு விஷயத்திலும் அவ்வளவு எளிதாக எந்த ஒரு நாடும் ஆதரவு எதிர்ப்பு தெரிவித்து விடாது..நட்பு நாடுகள் சர்வதேச கூட்டமைப்பில் இருக்கும் தோழமை நாடுகள் என்று வரும்போது சில விஷயங்களுக்கு வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பதும் எதிர்ப்பு தெரிவிப்பதும் சகஜம் . என்றாலும் ஹர்திப் சிங் விவகாரம் போன்ற உளவு பிண்ணனி விஷயங்களில் வெளிப்படையாக ஆதரவு தெரிவிப்பது தனக்குத்தானே குழிப்பறித்துக் கொள்ளும் அரசியல் சூழ்ச்சி என்பதை ஒவ்வொரு நாடும் நிச்சயம் உணர்ந்திருக்கும். அந்த வகையில் கனடாவின் இந்த முயற்சிக்கு வலுவான உளவுத்துறையும் தொலைநோக்குப் பார்வையுள்ள வெளியுறவுத் துறையும் கொண்டு செயல்படும் எந்த ஒரு நாடும் ஆதரவு கொடுக்க முன்வராது.
உளவுத்துறை வெளியுறவு துறை சார்ந்த புரிதல்கள் இருந்திருந்தால் கனடா பிரதமர் ஹர்தீப் சிங் விவகாரத்தில் வெளிநாடுகளையும் கூட்டறிக்கை விடுமாறு அழைப்பு விடுத்திருக்க மாட்டார். ஒரு வேளை அவருக்கு இந்த உளவுத்துறை வெளியுறவுத் துறை சார்பில் புரிதல் இல்லாத நிலையில் அவர் இதை செய்திருந்தால் நிச்சயம் அது அவருக்கு உள்நாட்டு அளவில் பெரிய அளவில் அரசியல் நெருக்கடியையும் எதிர்ப்பையும் தேடித் தரும் .
ஹர்தீப் சிங் விவகாரத்தை கையில் எடுத்ததாலோ அதை வைத்து இப்படி ஒரு அவதூறு பிரச்சாரத்தை கனடா தன் மீது வைத்ததாலோ பாரதம் இனி ஒரு அடி கூட பின்வாங்க போவதில்லை . ஆனால் வழக்கத்தைவிட அதிகமான பாய்ச்சலில் முன்னோக்கி நகரும். இனி கனடாவை தளமாக கொண்டு செயல்படும் ஒட்டுமொத்த காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கும் அதன் பின்னணியில் இருக்கும் சர்வதேச நாடுகள் உளவுத்துறைகளின் தொடர்புகளையும் அம்பலப்படுத்தி அதற்கு உரிய விளக்கத்தையும் பதிலையும் கனடாவிடம் கேட்கும். கிடைக்காத பட்சத்தில் தொடர்ச்சியாக கனடாவிற்கு உலக அளவில் ராஜ்ஜிய ரீதியான நெருக்கடிகளை ஏற்படுத்தும். அது எதிர்காலத்தில் கனடாவிற்கு தொடர்ச்சியான சர்வதேச நெருக்கடிகளையும் உள்நாட்டில் அரசியல் குழப்பங்களையும் ஏற்படுத்தும். அந்த வகையில் கனடா ஹர்திப் சிங் விவகாரம் ஒரு கனடாவிற்கு விஷப் பரீட்சையே.
ஒருவேளை இந்த புரிதல் எல்லாம் இருந்தும் கூட எப்படியாவது பாரதத்தை சர்வதேச அரங்கில் அவமதித்து காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு எதிரான பாரதத்தின் நடவடிக்கையை தடுத்து நிறுத்த வேண்டும் என்று அவர் இந்த சீண்டுதலை செய்திருந்தால் நிச்சயம் இதற்கு பாரதத்தின் பதிலடி கடுமையாக இருக்கும். காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு முழு தளமாக இடம் கொடுக்கும் கனடாவின் நடவடிக்கை அரசியல் ஆதரவு முன் வைத்து காலிஸ்தான் பயங்கரவாதிகளின் மரணத்திற்கு பாரதத்தை குற்றம் சாட்டும். இதே கனடாவின் மீது காலிஸ்தான் பயங்கரவாதத்திற்கு ஆதரவாக செயல்படும் குற்றச்சாட்டுகளை ஆதாரப்பூர்வமாக பாரதம் முன்வைக்கும். அப்போது சர்வதேச அளவில் கனடா தலைகுனியும் . அந்த வகையில் அவர் மலேசியா அதிபரின் வரிசையில் அடுத்து இடம் பெறக்கூடிய வாய்ப்பு அதிகம்.