கோவையில் மத்திய அரசுக்கு எதிராக அவப் பெயர் உருவாக்கும் சூழ்ச்சி

கோவையில் மத்திய அரசுக்கு எதிராக அவப் பெயர் உருவாக்கும் சூழ்ச்சி

Share it if you like it

நேற்று கோவையில் மத்திய அரசின் சார்பாக மாபெரும் கடன் வழங்கும் விழா நடத்தப்பட்டது .கோவை கொடிசியா அரங்கில் உள் அரங்க நிகழ்வாக வர்த்தக கண்காட்சி வளாகத்தில் நடைபெற்ற இந்த நிகழ்வில் மத்திய நிதித்துறை மற்றும் நிறுவன விவகாரங்கள் துறை அமைச்சர் திருமதி நிர்மலா சீதாராமன் அவர்கள் கலந்து கொண்டார். மத்திய அரசின் சார்பில் தொழில்துறைக்கான கடன் உதவிகள் வழங்கும் திட்டத்தை தொடங்கி வைக்கும் விழாவில் அவர் சிறப்பு அழைப்பாளராக பங்கேற்று திட்டத்தை பற்றியும் அதன் நடைமுறை பங்களிப்பு பற்றி பேசினார். பல்வேறு தொழில் வியாபாரம் வர்த்தகம் சார்பான கடன் உதவி திட்டங்கள் அதன் பயனாளர்கள் பயன்பெறும் விதம் சம்பந்தமான ஒரு தெளிவான வழிகாட்டும் கருத்தரங்கமாக இந்நிகழ்ச்சி வடிவமைக்கப்பட்டிருந்தது. இதில் மத்திய அரசின் முக்கிய நிர்வாகிகள் வங்கித் துறை சார்ந்த அதிகாரிகள் கோவையை சார்ந்த பாஜக நிர்வாகிகள் சட்டமன்ற உறுப்பினர்கள் என்று முக்கியஸ்தர்கள் பலரும் கலந்து கொண்டனர்.

விழாவின் இடையே ஒரு நபர் தனக்கு வங்கி கடன் எதுவும் கிடைக்கவில்லை. பலமுறை முயற்சித்தும் வங்கிகளில் கடன் உதவி கிடைக்கவில்லை. மாறாக அலைக்கழிப்போம் அவமதிப்பும்தான் கிடைக்கிறது என்று மத்திய அரசுக்கும் கடன் உதவி வழங்கும் திட்டத்திற்கும் எதிராக ஆக்ரோஷமாக பேசி கோஷமிட்டார் . இதை ஊடகங்கள் இந்நிகழ்ச்சியின் நோக்கத்தை சிதைக்கும் வகையில் திசைதிருப்பும் முயற்சியை உணர்ந்து சுதாரித்துக் கொண்ட மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவரை உடனடியாக மேடை ஏற்றி அவரின் சிக்கலை அவரின் வாயாலயே அனைவருக்கும் தெரிவிக்க வைத்தார். பல்வேறு வங்கிகளிலும் தான் கடன் கொடுக்கப்படாமல் அலைக்கழிக்கப்படுவதாகவும் தனக்கு கடன் உதவி அவசியம் தேவை என்று பேசியவரிடம் உங்களின் தேவை அதில் இருக்கும் இடர்பாடுகள் அலைக்கழிப்புகள் பற்றி தெளிவாக ஒரு மனுவை எழுதி என்னிடம் கொடுங்கள் .நான் நிச்சயம் அதன் மீது உரிய நடவடிக்கை எடுக்கிறேன் என்று வாக்குறுதி அளித்தார்.

சம்பந்தப்பட்ட அந்த நபரின் மீது அவருக்கு வங்கிகள் கடன் கொடுக்காமல் திருப்பி அனுப்பிய விவகாரம் அதன் பின்னணி முழுவதும் இன்று பொதுவெளியில் அம்பலமாகி இருக்கிறது. கோவையை சார்ந்த அந்த நபர் தனது குடும்பத்தாரின் பெயரில் ஏற்கனவே ஒரு வங்கியில் பெற்றுக் கொண்ட கடனுக்கான நிலுவை சுமார் ஒன்றே முக்கால் லட்சம் அளவில் நீண்ட காலமாக நிலுவையில் இருக்கிறது மேலும் வேறொரு வங்கிக் கிளையின் மூலமாக குடும்பத்தாரின் பெயரில் எடுத்த இரண்டாவது கடனும் நிலுவை கட்டப்படாமல் பாக்கி தொடர்கிறது. இந்த இரண்டு கடன்கள் அது அதன் நிலுவை தொகை சம்பந்தமாக வங்கிகளில் இருந்து பலமுறை நினைவூட்டல் மற்றும் வசூல் நடவடிக்கைகள் மேற்கொண்ட போதும் சம்பந்தப்பட்ட நபர் எந்தவிதமான ஒத்துழைப்பும் வங்கி நிலுவைத் தொகையையும் செலுத்தாமல் நாள் கடத்தி வந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் புதிதாக ஒரு கடன் வேண்டும் என்று வங்கியில் விண்ணப்பத்தவரின் பின்னணியை வங்கிகளின் சாதாரண நடைமுறை வாயிலாக விசாரித்ததில் ஏற்கனவே இரண்டு வங்கிகளில் கடன்கள் திருப்பி செலுத்தாமல் நிலுவையில் இருப்பதும் அதற்கு உரிய பதில் அளிக்காமல் அலைக்கழிப்பதும் தெரியவந்தது. இதன் காரணமாக இவர் பேங்க் ஆப் பரோடாவில் கருப்பு பட்டியலில் வைத்திருப்பதும் பேங்க் ஆப் பரோடா அறிவுறுத்தலின் பேரில் இதர வங்கிகளும் கடன் கொடுப்பதற்கு தகுதியற்ற நபர் என்ற தடை செய்யப்பட்ட கருப்பு பட்டியலில் வைத்திருப்பதும் தெரிய வருகிறது. உரிய காரணங்கள் விளக்கங்கள் ஏதும் இன்றி வங்கிகளுக்கான கடன் தொகையை செலுத்த தவறியது. வங்கி கடன் நிலுவைத் தொகை சம்பந்தமான எந்த ஒரு நடவடிக்கைக்கும் உரிய ஒத்துழைப்பு தராமல் வங்கிகளை அலைக்கழி த்தது . மேலும் தனது வங்கி கடன் பின்னணியை மறைத்து மேலும் ஒரு வங்கி கடனை பெற முயற்சித்தது என்று அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளுடன் உலவிய ஒரு நபர் மத்திய அரசு சார்பிலான ஒரு விழா மேடையில் கூச்சல் குழப்பம் விளைவித்தும் அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சி செய்திருப்பதும் கோவையில் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

எதிர்வரும் நாடாளுமன்ற தேர்தல் காரணமாக மத்திய அரசின் நலத்திட்டங்கள் அதன் மீதான மக்களுக்கு இருக்கும் நம்பிக்கை இவற்றையெல்லாம் குலைத்து மத்திய அரசின் திட்டங்கள் மீது அதிருப்தியும் அவநம்பிக்கையை ஏற்படுத்தும் விதமான இந்த செய்கை நிச்சயம் தனிமனித தவறாக மட்டுமே இருக்க முடியாது. காரணம் ஏற்கனவே இரண்டு வங்கிகளில் கடன் நிலுவையை வைத்திருப்பவர் அதன் மீதான சட்ட .நடவடிக்கைகளில் இருந்து தப்பி வருவதும் கூடுதலாக மூன்றாவது வங்கியில் கடன் பெற முயற்சித்ததும் அவரின் பின்னணி அதில் ஏதேனும் அரசியல் பின்புலம் இருக்கக்கூடும். அதிலும் மத்திய அமைச்சர் பங்கேற்கும் ஒரு விழாவில் கலந்துகொண்டு அந்த விழாவிலேயே மத்திய அரசுக்கும் அதன் கடன் திட்டங்களுக்கும் எதிராக கோஷமிட்டு தனக்கு கடன் கிடைக்கவில்லை என்ற சர்ச்சையை கிளப்பி அதன் மூலம் இந்த விழாவிற்கும் மத்திய அரசின் நல்ல திட்டங்களுக்கும் ஏதேனும் ஒரு அவப்பெயரை உண்டு பண்ணும் திட்டமாக கூட இருக்கலாம் .

மேலும் மத்திய அமைச்சர் ஒருவர் பங்கேற்கும் விழாவில் இது போன்ற சர்ச்சையை ஏற்படுத்தி அதன் மூலம் அங்கு ஏதேனும் சட்ட விளைவுகள் நேரிட்டால் அதை வைத்து மத்திய அரசுக்கும் மத்திய அமைச்சருக்கும் எதிராக ஒரு கருத்துகளை உருவாக்கும் திட்டமிட்ட சூழ்ச்சியாகவும் இது இருந்திருக்க கூடும். ஆனால் மத்திய அமைச்சர் சுதாரிப்பாக நடந்து கொண்டதன் காரணம் இந்த பெரும் சூழ்ச்சிகள் எல்லாம் தவிடு பொடியாகி இருக்கிறது. கோஷமிட்டவரை காவல்துறை கொண்டு அப்புறப்படுத்தாமல் கடுமையாக கையாளாமல் அவரை அப்படியே மேடைக்கு ஏற்றி அவரின் பிரச்சனைகளை சொல்ல வைத்ததும் அதற்கு உரிய நடவடிக்கை எடுக்கிறேன் மனு கொடுங்கள் என்று கேட்டு பெற்றுக்கொண்டு மத்திய அமைஙஅவரின் கண்ணியத்தை காப்பாற்றிக்கொண்டார். மறுபுறம் என்ன காரணமாக அவரின் வங்கிக் கடன் கிடப்பில் இருக்கிறது ? அவரின் வங்கி கடன் விண்ணப்பம் நிராகரிக்கப்பட்டதன் பின்னணி என்ன? என்று ஆராய்ந்ததன் பேரில் இன்று அவரின் பின்புலமும் வங்கிக் கடன்கள் விவகாரத்தில் அவர் செய்து வந்த மோசடியும் இன்று பொதுவெளிக்கு அம்பலமாகி இருக்கிறது.

நீண்டகாலமாக பேங்க் ஆப் பரோடாவின் கருப்பு பட்டியலில் வைத்திருக்கப்பட்ட அந்த நபர் மத்திய கடன் வழங்கும் விழாவில் பங்கேற்று இதுபோன்ற வங்கிகளுக்கும் அதன் கடன் உதவிகளுக்கும் எதிராக தவறான கருத்துகளை பரப்பிய காரணமாக இன்று பேங்க் ஆப் பரோடா சட்ட நடவடிக்கை காரணமாக அவர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டிருப்பதாக தகவல்கள் வெளியாகிறது. நேற்று விழா மேடையில் மத்திய அரசுக்கும் கடன் உதவி திட்டத்திற்கும் எதிராக அவர் கோஷமிட்ட போதும் அவருக்கு கடன் கொடுக்காமல் வங்கிகள் அலைக்கழிப்பதாக அவர் வைத்த குற்றச்சாட்டை முன்வைத்தும் மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டத்திற்கும் அதன் பெயரிலான நலத்திட்டங்களுக்கும் பெரும் அவதூறை பரப்பும் விதமான விவாதங்கள் கருத்தியல்கள் சமூக ஊடகங்கள் ஊடகங்கள் வழியாக ரெக்கை கட்டி பறந்தது .

ஆனால் இன்று அந்த நபர் ஒரு மோசடி பேர்வழி அவர் ஏற்கனவே இரண்டு வங்கிகளில் கடன் நிலுவை வைத்திருப்பவர் பேங்க் ஆப் பரோடா கருப்பு பட்டியலில் இருப்பவர். மத்திய அமைச்சர் பங்கேற்கும் விழாவில் அவர் வந்து சர்ச்சையை கிளப்பியதும் மத்திய அரசுக்கும் கடன் உதவி திட்டங்களுக்கும் எதிராக கோஷங்கள் எழுப்பியதும் ஒரு திட்டமிட்ட சூழ்ச்சி. ஆனால் அவர் எதிர்பார்த்தபடி கடுமையான நடவடிக்கைகள் ஏதும் இல்லாமல் மத்திய அமைச்சர் இதை லாவகமாக கையாண்டதால் அவரின் சூழ்ச்சிகளும் அவரின் பின்னிருந்து இயக்கியவர்களின் திட்டங்களும் தவிடு பொடியாகி இன்று அவர் காவல்துறை வசம் ஒப்படைக்கப்பட்டுள்ளார். சொல்லி வைத்தார் போல இன்று அத்தனை ஊடக விவாதங்களும் சமூக ஊடக கருத்துக்களும் இருக்கும் இடம் தெரியாமல் காணாமல் போய் இருக்கிறது.

தமிழகத்தில் தேசியவாதிகள் திட்டமிட்டு தாக்கப்படுவதும் அவர்கள் மீது அவதூறு அதிருப்தி வருவதற்கான சூழ்ச்சிகள் அரங்கேற்றப்படுவதும் தமிழகத்திற்கும் புதிதல்ல . பாரதத்தின் தேசியவாதிகளுக்கும் புதிதல்ல .ஆனால் சாதிய வன்மம் கொண்டு நாடாளுமன்றத்திலேயே தனக்கு எதிராக எப்படிப்பட்ட அவமதிப்புகள் அவதூறுகள் கட்டமைக்கப்படுகிறது? என்பதை கண்ணெதிரே பார்த்த பிறகும் தமிழகத்திற்கு வரும்போது மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் அவர்கள் உரிய சுதாரிப்போ அல்லது முன்னெச்சரிக்கையோ இல்லாமலா வந்திருப்பார் ? ஆனால் அவரின் முன் கோஷமிட்டு தேவையற்ற சர்ச்சை களைக் கிளப்பி அதன் மூலம் ஆதாயம் தேட முயற்சித்தவர்கள் இன்னும் கூடுதலாக முயற்சி செய்து சரியான நபரை தேர்ந்தெடுத்து களம் இறக்கி இருந்தால் நிச்சயம் அவர்களின் திட்டம் ஓரளவு வெற்றி பெற்றிருக்கலாம். கோவையில் கோட்டை விட்ட அவர்களுக்கு ஆழ்ந்த இரங்கல்களை மட்டுமே நாம் தெரிவிக்க முடியும்.

ஒரு மத்திய அமைச்சராக பூர்வீகமான தனது சொந்த மாநிலத்திற்கு கடன் வழங்கும் விழாவிற்கு சிறப்பு அழைப்பாளராக வந்தார் . வந்த நிகழ்ச்சியை நல்லபடியாக பங்கெடுத்து மத்திய அரசின் நலத்திட்டங்கள் அதன் பங்களிப்புகள் பற்றி மக்களுக்கு எடுத்துரைத்து விட்டு வந்த வழியே திரும்பி போனார்.இன்று அவரின் வழக்கமான பணிகளில் அவர் கவனம் செலுத்திக் கொண்டிருக்கிறார். ஆனால் மத்திய அரசுக்கும் மோடி சார்ந்த பாஜக கட்சிக்கும் பெரும் ஆதரவு திரண்டு வரும் கொங்கு மண்டலத்தில் கோவை நாடாளுமன்ற தொகுதியை பாஜக குறி வைக்கும் என்ற கணிப்பில் அதற்கு அவப்பெயரை உருவாக்கி அதன் மூலம் அரசியல் ஆதாயம் தேட நினைக்கும் சூழ்ச்சியின் ஒரு பகுதியாக ஒரு மோசடி பேர்வழியை முன்னிறுத்தி மத்திய அமைச்சருக்கும் மத்திய அரசின் கடன் வழங்கும் திட்டத்திற்கும் அவதுறை பரப்ப வேண்டும் என்று நினைத்தவர்கள் தான் இன்று தேள் கொட்டிய திருடர்களைப் போல திணறிக் கொண்டிருக்கிறார்கள்.


Share it if you like it