ஒலிம்பிக் மற்றும் சர்வதேச விளையாட்டு போட்டிகளில் பதக்கங்களை வெல்ல வீரர்களுக்கு பயிற்சி அளிப்பதற்காக சென்னை,மதுரை,திருச்சி,நீலகிரி ஆகிய மாவட்டத்தில் ஒலிம்பிக் பயிற்சி ,மையங்கள் அமைக்கப்படும் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
தற்போது சீனாவில் நடந்த ஆசிய விளையாட்டு போட்டிகளில் இந்தியா மொத்தமாக 107 பதக்கங்களை வென்றது. அதில் தமிழ்நாடு மட்டும் 28 பதக்கங்களை வென்றுள்ளது. தமிழகத்தில் விளையாட்டு மேம்பாட்டிற்காக “தமிழ்நாடு சாம்பியன் பவுண்டேஷன்” என்கிற அறக்கட்டளை உருவாக்கப்பட்டுள்ளதாகவும் மேலும் சென்னையில் விளையாட்டு நகரம் அமைக்கப்பட உள்ளதாகவும் ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மேலும் பதக்கங்கள் வென்ற விளையாட்டு வீரர்களுக்கு 9.40 கோடி மதிப்பில் ஊக்கத்தொகை வழங்கி சிறப்பித்துள்ளார் முதலமைச்சர் ஸ்டாலின். இதற்குமுன் ஆசிய விளையாட்டுப் போட்டியில் அதிக எண்ணிக்கையில் பதக்கம் வென்று சரித்திர சாதனை படைத்த விளையாட்டு வீரர்களுடன் பிரதமர் மோடி டில்லியில் கலந்துரையாடினார் என்பது குறிப்பிடத்தக்கது