பெரும் யுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல் – மேற்காசியாவில் பற்றும் போர் பதற்றம்

பெரும் யுத்தத்திற்கு தயாராகும் இஸ்ரேல் – மேற்காசியாவில் பற்றும் போர் பதற்றம்

Share it if you like it

கடந்த வாரம் பாலஸ்தீனத்தை மையமாகக் கொண்டு செயல்படும் பயங்கரவாத இயக்கம் இஸ்ரேல் மீது ராணுவம் பொதுமக்கள் ராணுவ நிலைகள் மீது திடீர் தாக்குதலை தொடங்கியது . இதில் நூற்றுக்கணக்கான இஸ்ரேலியர் ராணுவ வீரர்கள் பொதுமக்கள் உள்ளிட்டவர்களை பிழைய கைதிகளாக ஹமாஸ் இயக்கத்தினர் சிறை பிடித்தார்கள். அவர்களை பலரை கொடூரமாக கொன்று குவித்தார்கள். இஸ்ரேலியர்கள் மட்டுமல்லாது காசாவில் சுற்றுலா வாசிகளாக இருந்த ஐரோப்பா பிரிட்டன் அமெரிக்கா உள்ளிட்ட வெளிநாட்டவர்களையும் கடத்திக் கொலை செய்திருக்கிறார்கள். நேபாளம் மியான்மர் உள்ளிட்ட நாடுகளைச் சார்ந்த மாணவர்கள் பொதுமக்கள் உட்பட பலரும் இணைய கைதிகளாக இன்னுமும் சிறைப்பட்டு இருக்கிறார்கள்.

உலகின் சக்தி வாய்ந்த பாதுகாப்பு கவசம் என்னும் சொல்லப்படும் அயர்ன் டோம் சிஸ்டம் கொண்டது இஸ்ரேலிய பாதுகாப்பு மண்டலம். குறைந்த உயரத்தில் பறக்க வல்ல கிளைடர் விமானங்களை பயன்படுத்தி அந்த அயர்ன்டோம் சிஸ்டத்தை தகர்த்து பெரும் தாக்குதலை ஹமாஸ் இயக்கம் இஸ்ரேல் மீது கட்டமைத்து விட்டது. இஸ்ரேல் சுதாரிப்பதற்குள் கிட்டத்தட்ட 5,000 க்கும் மேற்பட்ட ஏவுகணை தாக்குதல்களால் ஹமாஸ் பேரழிவை நிகழ்த்தி இருந்தது. ஹமாஸ் பயன்படுத்திய தாக்குதல் பாணியும் யுத்தத்தில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்கள் அதன் பின்னணியில் இருந்த விவகாரங்கள் எல்லாம் இது தற்செயலாக நடத்தப்பட்ட யுத்தம் இல்லை. இதற்காக பல ஆண்டுகள் முனைப்போடு திட்டமிட்டு செயல்பட்டதும் பல நாடுகளின் ஆதரவு இருப்பதும் கண்கூடாக தெரிகிறது .

இதில் ஹமாஸ் இயக்கத்தினர் பயன்படுத்திய ஆயுதங்கள் ஈரான் அமெரிக்கா ரஷ்யா உள்ளிட்டவர் பயன்படுத்தும் ஆயுதங்கள் என்பதால் பெறும் குழப்பம் நீடித்தது . ஆனால் ஹமாசின் பின்னணியில் ஈரானும் ரஷ்யாவும் இருப்பது அனைவரும் அறிந்ததே. இதில் அமெரிக்க ஆயுதங்கள் உள் நுழைந்த விவகாரம் குழப்பத்தை ஏற்படுத்தியது. ஆனால் ஆப்கானிஸ்தானை விட்டு அமெரிக்கா வெளியேறும் போது அங்கு ஏராளமான ஆயுதங்களை அப்படியே போட்டுவிட்டு போனது. சிரியா ஈராக் உள்ளிட்ட பல இடங்களிலும் அமெரிக்காவின் ஆயுதங்கள் சர்வ சாதாரணமாக கிடைக்கும். இவற்றையெல்லாம் ஒருங்கிணைத்து தான் ஹமாஸ் திட்டமிட்ட பெரும் தாக்குதலில் தயாராகி இருப்பது இஸ்ரேலை அதிர வைத்தது. தான் உலகெங்கும் கேட்பாரின்றி போட்டு வைத்த ஆயுதங்கள் எல்லாம் ஒரே பயங்கரவாத அமைப்பால் திட்டமிட்டு திரட்டப்பட்டு அதை வைத்து தன்னுடைய செல்ல பிள்ளையான இஸ்ரேலை தாக்கி அழிப்பதும் அதில் தன் நாட்டைச் சார்ந்த குடிமக்களையும் கடத்திக் கொன்று குவித்ததும் அமெரிக்காவையும் அதிர வைத்தது. இரு நாடுகளும் கைகோர்த்து களம் இறங்கியதும் இன்று ஹமாஸ் ஆடிப் போய் கிடக்கிறது.

ஒரு பெரும் தாக்குதலை நிகழ்த்தி இஸ்ரேல் பதிலடி கொடுத்தால் அதன் காரணமாக அச்சமடையும் அருகில் இருக்கும் அரபு நாடுகள் எல்லாம் ஒன்று திரண்டு இஸ்ரேலை சமாதானப்படுத்தி கட்டி வைக்கும் . அமெரிக்கா ஈரான் உள்ளிட்ட நாடுகள் இருபுறமும் அழுத்தம் கொடுத்து சமாதான பேச்சுவார்த்தைக்கு ஏற்பாடுகள் செய்யும். இதில் கத்தார் முன்னிலை வகிக்கும். இந்த அமைதி பேச்சு வார்த்தையை தனக்கு சாதகமாக அமெரிக்க இஸ்ரேல் சிறைகளில் இருக்கும் பாலஸ்தீனியர்களை விடுவித்துக் கொள்ள வேண்டும். இஸ்ரேலிடமிருந்து ஒரு பெரும் அறுவடையை இம்முறை பார்த்து விட வேண்டும். அதோடு தன் இயக்கத்தின் இருப்பையும் நாயக பிம்பத்தையும் மீள் கட்டமைப்பு செய்வதன் மூலம் அரபு நாடுகளில் இருந்தும் ஒரு பணமழையை அறுவடை செய்து விட முடியும் என்று திட்டமிட்டு தான் ஹமாஸ் களத்தில் இறங்கி இருந்தது. ஆனால் இம்முறை அதன் கணக்குகள் எல்லாம் தவிடு பொடியாகி இருக்கிறது.

ஜி 20 மாநாடுகளின் பங்களிப்பு படி உலக நாடுகளின் நலன் வளர்ச்சி பாதுகாப்பிற்கு பெரும் சவாலாக அச்சுறுத்தலாக இருப்பது மத பயங்கரவாத அமைப்புகள் மற்றும் சர்வதேச பயங்கரவாத அமைப்புகள். இதன் உலகளாவிய சதிவலை பின்னல்கள் இருக்கும் வரை உலகளாவிய வளர்ச்சியும் ஒருங்கிணைப்பும் சாத்தியம் இல்லை என்பதை உணர்ந்து கொண்டு தான் ஒட்டுமொத்த அரபு நாடுகளும் பாலஸ்தீன விவகாரத்தில் ஒதுங்கி நிற்கிறது. இதுவரை பெயருக்கு கூட எந்த ஒரு அரபு நாடும் இஸ்ரேலை கண்டிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இத்தனைக்கும் இஸ்ரேல் இந்த யுத்தத்தில் தடை செய்யப்பட்ட ஆயுதங்களையும் பயன்படுத்திக் கொண்டிருக்கிறது. ஆனாலும் வழக்கமாக எம்பி குதிக்கும் ஈரான் எகிப்து உட்பட அனைத்தும் இம்முறை கனத்த மவுனம் காக்கிறது . காரணம் ஹமாசுக்கு ஆதரவாக யாரேனும் வாய் திறந்தால் அவர்களை அப்படியே இழுத்து வைத்து சபையில் நிறுத்தி பல ஆண்டுகளாக ஹமாஸ் சதி அதன் பின்னணியில் இருக்கும் நாடுகள் அதனால் இஸ்ரேலிய இராணுவமும் உள்நாட்டு மக்களும் தற்போது சந்தித்திருக்கும் பெயர் இழப்புகள் அனைத்தையும் அவர்களின் தலையில் கட்டி பஞ்சாயத்தை தொடங்குவதற்கு இஸ்ரேல் தயாராக இருக்கிறது. அதற்காகத்தான் கத்தார் காத்துக் கொண்டு இருக்கிறது என்பதால் அரபு நாடுகள் அமைதி காக்கிறது. அரபு நாடுகளே வாய் திறக்காமல் அமைதி காக்கும் போது தான் வலிய போய் வாய் திறந்தால் இருக்கும் கோபத்திற்கு இஸ்ரேலும் அமெரிக்காவும் ஹமாசையும் பாலஸ்தீனத்தையும் விட்டுவிட்டு நேரடியாக நம்மை குறி வைக்க தொடங்குவார்கள் என்பதால் ரஷ்யா மௌனம் காக்கிறது.

பல ஆண்டுகள் திட்டமிட்டு தந்திரமாக வியூகம் அமைத்து தாக்குதல் நடத்தி தன்னை அவமதித்ததோடு தன் தேச குடிமக்களை கொடூரமாக கொன்று குவித்ததால் ஆத்திரத்தின் உச்சத்தில் இருக்கும் இஸ்ரேல் இம்முறை ஆடி தீர்த்துக் கொண்டிருக்கிறது. யாராவது சமாதானம் என்று அதன் அருகில் போனால் அவர்கள் கதை கந்தலாகிவிடும் நிலையில் தான் இஸ்ரேல் யுத்த களத்தில் உருமிக் கொண்டிருக்கிறது. காசா மட்டுமே இஸ்ரேலின் இலக்கு என்றால் அதனிலும் இருக்கும் படைகளும் தொழில்நுட்பங்களுமே அதிகம். அதையும் கடந்து ஹமாசை முன்னிறுத்தி பாலஸ்தீனத்தை நொறுக்கி தள்ள வேண்டும் என்று இஸ்ரேல் நினைத்திருந்தாலும் அதற்கு தனி ஆளாக இஸ்ரேல் பெரிய சக்திதான் . ஆனால் அதையும் கடந்து அமெரிக்கா களத்தில் இறங்குவதும் அதன் இரண்டு அதிநவீன போர்க்கப்பல்கள் மத்திய தரை கடலில் காத்திருப்பதும் விபரீதங்கள் விளைவதற்கான அறிகுறிகள்.

அமெரிக்காவின் பாதுகாப்புச் செயலர் இரு தினங்களாக இஸ்ரேலில் முகாமிட்ட இருப்பது. இன்று அமெரிக்காவின் பாதுகாப்பு அமைச்சரே இஸ்ரேலுக்கு போக இருப்பது. இஸ்ரேலின் அதிநவீன படையான சீல் போர்சுக்கு இணையான பெரும் போர்படை இஸ்ரேலில் முகாமிட்ட இருப்பது என்று ஒவ்வொன்றும் கொடுக்கும் சமிக்ஞை இஸ்ரேல் தொடங்கி இருக்கும் யுத்தம் நிச்சயம் காசாவை ஹமாஸை முன்னிறுத்தியது அல்ல‌ அதன் பின்னணியில் வேறு ஏதோ ஒரு பெரிய இலக்கு இருக்கிறது. அதை மொத்தமாக முடித்துவிட்டு தான் இஸ்ரேல் யுத்தத்தை முடிக்கும் என்பது தெளிவாக தெரிகிறது. அதே நேரத்தில் சிரியா லெபனான் எகிப்து என்று வரிசையான பகை நாடுகள் இருக்கும் இடத்தில் சிறு பொறிப் பறந்தாலும் அது பெரும் சிக்கலை உருவாக்கும் என்று இஸ்ரேல் அறியாததல்ல.

இஸ்ரேலுக்கு மனித உரிமை பாடம் நடத்தும் யாரும் மனிதாபிமான அடிப்படையில் இஸ்ரேல் காஸாவில் பல ஆண்டுகளாக உணவு குடிநீர் மின்சாரம் விநியோகம் செய்ததை பற்றி பேசவில்லை. அந்த குடிநீர் மின்சாரம் விநியோகம் செய்த உபகரணங்கள் பயன்படுத்தி ஏவுகணை தாக்குதல் செய்து இஸ்ரேலை தாக்கிய ஹமாஸின் நன்றி விசுவாசம் பற்றி யாரும் பேச தயாரில்லை. ஊடகங்களிலும் சமூக ஊடகங்களிலும் சேவு பாலஸ்தின் நோ வார் டு இஸ்ரேல் என்று அவர்களின் போக்கில் விளையாடிக் கொண்டிருக்கிறார்கள். இஸ்ரேல் காஸாவில் உணவு குடிநீர் மின்சாரம் விநியோகம் செய்வதை நிறுத்தி இருப்பது மனிதாபிமானமற்ற செயல் என்று பேசும் யாரும் இத்தனை ஆண்டு காலம் உணவு- குடிநீர் -மின்சாரம் விநியோகம் செய்த இஸ்ரேல் மீது இவ்வளவு பெரிய தாக்குதல் நடத்திய ஹமாசுக்கு யாரும் இதுவரை மனிதாபிமானம் நன்றி பற்றி கேள்வி எழுப்பவில்லை. இதன் மூலம் இவர்கள் யார் ?இவர்களின் நோக்கம் என்ன ? என்பதை தெரிந்து கொள்ளலாம்.

இந்த யுத்தத்தின் முடிவு ஹமாஸ் என்ற இயக்கத்திற்கு முழுமையான முடிவு கட்டும் யுத்தமாக இருக்கும். அதன் பின்னர் இதுபோன்ற எந்த ஒரு இயக்கமும் எழவோ இதுபோன்ற இயக்கங்களை பின்னிருந்து ஆதரிக்கும் நாடுகளும் மீண்டு எழ முடியாத மரண அடியை பெற்றிருக்கும். இதை உணர்ந்து தான் இஸ்ரேலை சுற்றி இருக்கும் அரபு நாடுகள் அத்தனையும் கனத்த மவுனம் காக்கிறது. காரணம் இனியும் இது போன்ற பயங்கரவாத அமைப்புகளையும் அதை ஆதரிக்கும் நாடுகளையும் விட்டு வைத்தால் மத்திய கிழக்கு நாட்டில் எந்த ஒரு பொதுவான வளர்ச்சியும் எதிர்கால தொலைநோக்கு திட்டமும் செயல்படுத்த முடியாது என்பதை அவர்கள் நன்கு உணர்ந்து கொண்டார்கள். அதன் காரணமாகத்தான் தன்னுடைய தற்காப்புக்காகவும் தன் தேசத்தின் மக்களின் பாதுகாப்பிற்காகவும் இஸ்ரேல் செய்யக்கூடிய ஒவ்வொரு விவகாரமும் ஒட்டுமொத்த மத்திய கிழக்கு நாடுகளின் அமைதிக்கும் உகந்தது என்பதால் அத்தனை அரபு நாடுகளும் காசா விஷயத்தில் இஸ்ரேலுக்கு மறைமுகமான ஆதரவை கொடுத்து அமைதி காக்கிறது.


Share it if you like it