ரஷ்யாவின் மாஸ்கோவில் உள்ள ஒரு பெரிய கச்சேரி அரங்கமான குரோகஸ் சிட்டி ஹாலில் உள்ள மக்கள் மீது பயங்கரவாதிகள் துப்பாக்கிச் சூடு தாக்குதல் நடத்தியதில், 60 பேர் கொல்லப்பட்டனர், 100 க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். மாஸ்கோவில் நடந்த கொடிய பயங்கரவாதத் தாக்குதலுக்கு அமெரிக்கா, ஜெர்மனி உள்ளிட்ட பல்வேறு நாடுகள் கண்டனம் தெரிவித்துள்ளன.
ரஷ்ய ராக் இசைக்குழு பிக்னிக் நிகழ்ச்சிக்காக மக்கள் திரண்டிருந்த வேளையில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. மாநில குற்றப் புலனாய்வு அமைப்பான புலனாய்வுக் குழு இன்று அதிகாலையில் 60க்கும் மேற்பட்டோர் கொல்லப்பட்டதாக அறிவித்தது. காயமடைந்த 145 பேரின் பட்டியலை சுகாதார அதிகாரிகள் வெளியிட்டனர் – அவர்களில் 115 பேர் ஐந்து குழந்தைகள் உட்பட மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவித்து எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :- மாஸ்கோவில் நடந்த கொடூரமான தீவிரவாத தாக்குதலை வன்மையாக கண்டிக்கிறோம். எங்களின் எண்ணங்களும் பிரார்த்தனைகளும் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருடன் உள்ளன. இந்த துயரமான நேரத்தில் ரஷ்ய கூட்டமைப்பின் அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் இந்தியா ஒற்றுமையாக நிற்கிறது.