ஜனம் தமிழ் செய்தி சேனலானது, தேசியம் தெய்வீகம் இரண்டையும் நோக்கமாக கொண்டு உண்மையான செய்திகளை மக்களிடையே கொண்டு சேர்ப்பதில் முக்கிய பங்காற்றி வருகிறது. இந்நிலையில் ஜனம் மல்டிமீடியா லிமிடெட் நிறுவனத்துக்குச் சொந்தமான ஜனம் தமிழ் என்ற தமிழ் செய்தி சேனல் இன்று முதல் தனது ஒளிப்பரப்பை தொடங்க உள்ளது.
இதன் தொடக்க விழா சென்னையில் நடைபெறவுள்ளது, இந்நிகழ்ச்சிக்கு தகவல் மற்றும் ஒலிபரப்புத் துறை அமைச்சர் அனுராக் தாக்கூர் தலைமை தாங்குகிறார். இந்திய தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகத்தின் இணை அமைச்சர் எல்.முருகனும் கலந்து கொள்கிறார்.
ஜனம் மல்டிமீடியா மலையாள செய்தி சேனல் ஜனம் டிவிக்கு சொந்தமானது. இது ஏப்ரல் 2015 முதல் ஒளிபரப்பப்பட்டது.
ஜனம் தமிழ் என்பது கேரளாவில் வலது சார்பான ஜனம் டிவியின் விரிவாக்கம் ஆகும். கடந்த ஐந்து தசாப்தங்களாக மாநிலத்தில் ஆதிக்கம் செலுத்தும் திராவிட சித்தாந்தத்திற்கு எதிரான கருத்தை வழங்குகிறது.
ஜனம் டிவிக்கு வாழ்த்து தெரிவித்து பாஜக மாநில தலைவர் அண்ணாமலை எக்ஸ் பதிவில் குறிப்பிட்டிருப்பதாவது :-
முக்கிய செய்தி ஊடக முயற்சிக்காக, தமிழ் ஜனம் தொலைக்காட்சிக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள். பெயருக்கு ஏற்றாற்போல் ஜனம் தொலைக்காட்சி வளமான ஜனநாயகத்தின் நான்காவது தூணான பத்திரிக்கை மனசாட்சியை நிலைநிறுத்தி, மக்களுடன் நிற்கும் என்று நாங்கள் நம்புகிறோம். இந்தியாவின் செய்தி அரங்கில் நுழையும் ஜனம் தொலைக்காட்சியின் நிர்வாகத்திற்கும் குழுவிற்கும் வாழ்த்துக்களும் நல்வாழ்த்துக்களும் எனக் குறிப்பிட்டுள்ளார்.