மக்களவை தேர்தளுக்கு நாட்கள் மிக குறைவாகவே உள்ளதால் அனைத்து கட்சினரும் தீவிர பிரச்சாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இந்நிலையில் சீமான் மேடையில் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தார். இதனிடையே சீமான் சொந்தமாக எழுதிய பாடல் ஒன்றை. ஓட்டு போட போகும் பெண்ணே ஒதுங்கி நிக்காதே, கண்ட கண்ட சின்னம் இருக்கும் கலங்கி நிக்காதே. என்ற பாடலை பாடி கொண்டிருந்தார். அப்போது இளைஞர் ஒருவர் தீடிரென மேடையேறி சீமானின் அருகில் சென்று செல்பி ஒன்றை எடுக்க ஆர்வமாக சென்றார். இதனால் ஆத்திரமடைந்த சீமான் அந்த இளைஞரின் போனை பிடிங்கி தூக்கி எறிந்தார். அருகில் இருந்த நாதக நிர்வாகிகள் அந்த இளைஞரை குண்டுக்கட்டாக தூக்கி சென்றனர்.
போனை தூக்கி எறிந்தது மட்டுமல்லாமல் அந்த இளைஞரை மிகவும் கொச்சையான வார்த்தையால் மேடையிலேயே திட்டினார். இதனால் நாதக நிர்வாகிகளும் மக்களும் அதிர்ச்சி அடைந்தனர். ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் கூட்டத்தில் எவ்வாறு பேச வேண்டும் என்று சீமானுக்கு தெரியவில்லை. அந்த இளைஞர் செய்தது தவறாகவே இருந்தாலும் பொறுமையுடன் அவருக்கு அறிவுரை கூறி இருக்கலாமே ? அதை விட்டுவிட்டு இவ்வாறு ஆபாசமாக பேசுவதுதான் ஒரு கட்சி நடத்தும் சீமானுக்கு நாகரிகமா ? இவ்வாறு இருப்பதால் தான் சீமான் எல்லா தேர்தல்களிலும் தோல்வியை மட்டுமே பெறுகிறார் என்று சமூக வலைத்தளங்களில் நெட்டிசன்கள் சீமானை வறுத்தெடுத்து வருகின்றனர்.