இன்று நாடு முழுவதும் ராம நவமி கொண்டாடப்பட்டு வருகிறது. ராம நவமியை முன்னிட்டு அயோத்தியில் உள்ள ஸ்ரீ ராமர் கோவிலில் சிறப்பு பூஜைகள் நடைப்பெற்று வருகிறது. இதை தொடர்ந்து அயோத்தி ராமர் கோவில் கட்டுமானக் குழுத் தலைவர் நிருபேந்திர மிஸ்ரா, ராம நவமி அன்று கர்ப்பகிரகத்தில் அமைந்துள்ள பகவான் ஸ்ரீ ராம்லாலாவின் ‘மீது சூரிய கதிர்கள் விழுமாறு கட்டட அமைப்புகள் வடிவமைக்கப்பட்டுள்ளதாக கூறினார். அவர் கூறியதை போலவே இன்று பகவான் ஸ்ரீ பால ராமருக்கு பூஜை செய்த போது சூரியனின் கதிர்கள் சூர்ய திலகம்’ போல் பால ராமரின் நெற்றியில் விழுந்தது. இதனை கண்ட பக்தர்கள் பக்தியால் பரவசமடைந்தனர்.
அயோத்தியில் ஜனவரி 22 அன்று பிரதமர் மோடியால் பகவான் ஸ்ரீ ராம் லல்லா பிரதிஷ்டைக்குப் பிறகு கொண்டாடக்கூடிய முதல் ராம நவமி இதுவாகும்.
அயோத்தி ராமர் கோவில் தலைமை பண்டிதர் ஆச்சார்யா சத்யேந்திர தாஸ் கூறியதாவது: விழாவிற்கான அனைத்து ஏற்பாடுகளையும் அறக்கட்டளை நிர்வகித்து வருவதாகவும், ராம நவமி விழா மிகவும் உற்சாகமாக கொண்டாடப்பட்டு வருவதாகவும் தெரிவித்தார். “அலங்காரங்களையும் அறக்கட்டளை நிர்வகித்து வருகிறது.
நம்பிக்கை மற்றும் கொண்டாட்டத்தின் அடிப்படையில் இன்று காலை ராமர் கோவிலில் ஏராளமான பக்தர்கள் குவிந்தனர். தரிசனத்திற்கு முன், பக்தர்கள் சரயு நதியின் புனித நீரில் நீராடினர். கோவிலில் தரிசனம் அதிகாலை 3:30 மணிக்கு தொடங்கியது. இந்த நிகழ்வினை நகரம் முழுவதும் சுமார் 100 LED திரைகளில் ஒளிபரப்பப்பட்டது. அறக்கட்டளையின் சமூக ஊடக கணக்குகளிலும் ஒளிபரப்பப்பட்டது.
பகவான் ஸ்ரீ ராம்லாலாவின் ‘மீது சூரிய கதிர்கள் விழுமாறு கட்டட அமைப்புகளை இந்தியன் இன்ஸ்டிடியூட் ஆஃப் அஸ்ட்ரோபிசிக்ஸ் உடன் கலந்தாலோசித்து, ரூர்க்கியில் உள்ள இந்திய தொழில்நுட்பக் கழகத்தைச் சேர்ந்த விஞ்ஞானிகள் இந்த வழிமுறையை உருவாக்கினர்.
ஒவ்வொரு ஆண்டும் ராம நவமி அன்று சிலையின் நெற்றியில் சூரியனின் கதிர்களை துல்லியமாக நிலைநிறுத்துவதற்கு ஆப்டோமெக்கானிக்கல் அமைப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. சூரியனின் திசையில் ஏற்படும் மாற்றங்களுக்கு ஏற்ப கண்ணாடிகள் மற்றும் லென்ஸ்களில் சிறிய மாற்றங்கள் தேவைப்படும் என்று கூறப்படுகிறது.
புனித நாளில், ராம் லல்லா மஞ்சள் ஆடை அணிந்து பஞ்சாமிர்தத்துடன் நீராடினார். ராமருக்கு ஐம்பத்தாறு வகையான பிரசாதங்களும் வழங்கப்பட்டன என்று ராமர் கோவில் தலைமை அர்ச்சகர் தெரிவித்தார்.
தமிழகம் என்றவுடன், பழங்காலக் கோயில்கள், பிரமாண்டமான கட்டிடக்கலை, ஆன்மிகப் புனிதம் ஆகியவற்றின் தெளிவான உருவங்கள் நமது நினைவுக்கு வரும். இந்த கம்பீரமான மாநிலம், இது ஒரு புகழ்பெற்ற கலாச்சார மற்றும் ஆன்மீக பாரம்பரியத்தை பெருமைப்படுத்துகிறது. உயரமான கோபுரங்கள் முதல் நுணுக்கமாக செதுக்கப்பட்ட சிற்பங்கள் வரை, தமிழகத்திலுள்ள ஒவ்வொரு கோவிலிலும் மகத்துவம், நம்பிக்கை மற்றும் வரலாற்றைக் கூறுவது உங்களை ரசிக்க வைக்கும்.
தமிழர்களின் சிறந்த கட்டிட கலைக்கு மதுரை மீனாட்சி அம்மன் கோவில், தஞ்சை பெரிய கோவில், சிதம்பரம் நடராஜர் கோவில் என சொல்லி கொண்டே போகலாம். இந்த வகையில் அயோத்தி ராமர் கோவிலை மிகவும் நேர்த்தியாக அறிவியல் அறிவுடன் கட்டியுள்ளனர்.
https://x.com/mediyaannews/status/1780493621340574172