இதுதான் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் – விளாசிய சவுக்கு சங்கர் !

இதுதான் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம் – விளாசிய சவுக்கு சங்கர் !

Share it if you like it

காவல் துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் திமுகவின் கூலிப்படையாகவே செயல்படுகின்றனர். இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் செய்வதறியாது வேதனையில் இருக்கின்றனர் என்று அரசியல் விமர்சகர் சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார். இதுதொடர்பாக சவுக்கு சங்கர்எக்ஸ் பதிவில்,

திமுக ஆட்சியில் பெண்கள் பாதுகாப்பின் லட்சணம்!

படத்தில் உள்ளவர் பெயர் புருஷோத்தமன். மடிப்பாக்கம் உதவி ஆணையர். சென்னை அண்ணா நகரில் உள்ள ஒரு பெண்ணை ஒரு வருடமாக பாலியல் ரீதியாக தொல்லை அளித்து வந்துள்ளார்.

அந்தப் பெண் இப்படி தொல்லை செய்தால் கமிஷனரிடம் புகார் அளிப்பேன் என்று, கூறியதும், எனக்கு மடிப்பாக்கம் உதவி ஆணையர் பதவியை வாங்கித் தந்ததே உதயநிதிதான். உன்னால் ஒன்னும் செய்ய முடியாது என்று கூறி, மேலும் கடும் தொல்லைகள் அளித்திருக்கிறார்.

தொல்லை பொறுக்க முடியாமல் போகவே, சென்னை மாநகர ஆணையர் ராத்தோரிடம் சில மாதங்கள் முன்பு புகார் அளித்துள்ளார்.

உதயநிதிக்கு நெருக்கம் என்றால், ஆளும் கட்சி கூலிப்படைத் தலைவரான ராத்தோர் எப்படி நடவடிக்கை எடுப்பார் ?

புகார் கிடப்பில் போடப்பட்டது. தேர்தல் அறிவிக்கப்பட்டு, நடத்தை விதிகள் அமலுக்கு வந்த பிறகும் புருஷோத்தமனால் அப்பெண்ணுக்கு பாலியல் சீண்டல் தொடரவே, பத்திரிக்கையாளர்களை சந்திக்கப் போகிறேன் என்று அப்பெண் முடிவெடுத்ததும், இப்போது பெயருக்கு, அண்ணா நகர் துணை ஆணையர் வி.ஆர்.சீனிவாசன் விசாரணை செய்வார் என்று உத்தரவிட்டுருக்கிறார் ராத்தோர்.

சீனிவாசனுக்கு, இந்த உத்தரவு பெயருக்குத்தான் என்பது தெரியும் என்பதால், புகாரை வாங்கி மேசைக்கடியில் வைத்து விட்டு அமைதியாக இருக்கிறார்.

காவல் துறை அதிகாரிகள் பெரும்பாலானோர் திமுகவின் கூலிப்படையாகவே செயல்படுகின்றனர். இதனால் பாதிப்புக்கு உள்ளாகும் பெண்கள் செய்வதறியாது வேதனையில் இருக்கின்றனர்.

இது போக வசூல் செய்வது மட்டுமே புருஷோத்தமனின் வாழ்க்கை லட்சியம். இவர் வசூல் செய்வதும், இந்த பெண் புகாரும் இணை ஆணையர் சிபி சக்கரவர்த்திக்கும், கூடுதல் ஆணையர் பிரேம் ஆனந்த் சின்ஹாவுக்கும் நன்றாகவே தெரியும்.

ஆனால் மடிப்பாக்கத்துக்கு புருஷோத்தமனை அழைத்து வந்ததே கூலிப்படை ராத்தோர்தானே…. எப்படி கண்டிப்பார்கள் ?

இதுதான் ஸ்டாலின் சட்டம் ஒழுங்கை காக்கும் லட்சணம்

இவ்வாறு சவுக்கு சங்கர் குறிப்பிட்டுள்ளார்.


Share it if you like it