மே மாதத்தில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடைபெறுவது வழக்கம். சென்னையில் கோவூர் உள்ளிட்ட தமிழகத்தின் பல பகுதிகளில் ஆர்.எஸ்.எஸ் அமைப்பின் பண்பு பயிற்சி முகாம் நடைப்பெற்று வருகிறது. இந்நிலையில் இந்து முன்னணி அமைப்பை சேர்ந்த சிலர் ஏழு நாட்கள் பண்பு பயிற்சி முகாமை முடித்துவிட்டு ராணிப்பேட்டையில் இருந்து அரக்கோணம் செல்லும் ரயிலில் பயணித்துள்ளனர். அப்போது ரயிலில் சில கிறிஸ்துவ மிஷனரிகள் மதமாற்றம் முயற்சியில் ஈடுப்பட்டு வந்துள்ளனர். இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்த இந்து முன்னணியினர் கிறிஸ்துவ மிஷனரிகளை தடுத்து நிறுத்தி அரக்கோணம் ரயில் நிலையத்தில் ரயில்வே காவல் துறை அதிகாரியிடம் ஒப்படைத்தனர். இதுதொடர்பான காணொளி ஒன்று தற்போது சமூக வலைதளத்தில் வைரலாகி வருகிறது.