உத்தராகண்ட் மாநிலம் ஹரித்துவார் நகரின் பீரான் களியார் பகுதியில் உலகப் புகழ்பெற்ற சாபிர் சாஹிப் தர்கா உள்ளது. இங்கு உத்தராகண்ட் மாநில வக்ஃப் வாரியத் தலைவர் ஷதாப் ஷாம்ஸ் மற்றும் முஸ்லிம் சமூகத்தினர் பிரதமர் நரேந்திர மோடியின் வெற்றிக்காக போர்வை போர்த்தி பிரார்த்தனை செய்தனர்.
இதுதொடர்பாக வக்ஃப் வாரியத் தலைவர் ஷதாப் ஷாம்ஸ் கூறியதாவது :-
உலகம் முழுவதும் போர் மேகங்கள் சூழ்ந்துள்ளன. பல்வேறு நாடுகளில் குழப்பம் மற்றும் சச்சரவுகள் நிறைந்த சூழல் நிலவுகிறது. இதுபோன்ற காலங்களில் பிரதமர் நரேந்திர மோடியின் வலிமையான தலைமை இந்தியாவுக்குத் தேவைப்படுகிறது. அவர் மூன்றாவது முறையாக பதவியேற்க வேண்டும். இந்தத் தருணத்தில் அதன் தலைமை பலவீனமான கைகளுக்குச் சென்றால் நாடு பாதிக்கப்படும்,” என்று ஷம்ஸ் பிடிஐயிடம் தெரிவித்தார்.
மேலும், பிரதமர் மோடியின் திட்டம் சமுதாயத்தின் அனைத்து தரப்பினரையும் சென்றதடைவதாகவும் அவர் ஆட்சியில் சாலைகள் அமைக்கப்பட்டு, பல்வேறு நலத்திட்டங்கள் மக்களுக்கு செய்துள்ளார். இதனால் நாடு வளர்ச்சி பாதையில் முன்னேறி வருகிறது என்று கூறினார்.
பிரதமர் மோடியின் ஆட்சியில் முஸ்லிம்களுக்கோ அல்லது அரசியலமைப்புக்கோ ஆபத்தில்லை. “சில அரசியல்வாதிகளின் கடை தான் ஆபத்தில் உள்ளது என்றார்.நாட்டு மக்களை குறிப்பாக முஸ்லிம்களை தவறாக வழிநடத்துவதற்காக எதிர்க் கட்சித் தலைவர்கள் இந்தப் பொய்யை பரப்பி வருகின்றனர். இவ்வாறு ஷதாப் ஷாம்ஸ் கூறினார்.