ராணிப்பேட்டையில் சிஎம்சி மருத்துவமனை என்று அழைக்கப்படும் கிறிஸ்தவ மருத்துவக் கல்லூரி மற்றும் மருத்துவமனை ஒன்று உள்ளது. சமீபத்தில் இந்த மருத்துவமனையில் மேற்கு வங்கத்தை சேர்ந்த பெண் ஒருவர் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். ஆனால் சிகிச்சை பலனின்றி அந்த பெண் உயிரிழந்தார். இந்நிலையில் அந்த பெண்ணின் உடலை சொந்த ஊருக்கு எடுத்து செல்ல சிஎம்சி மருத்துவமனை ஆம்புலன்சில் எடுத்து செல்ல 85 ஆயிரம் கேட்டுள்ளனர்.
இதனால் வெளியில் தனியார் ஆம்புலன்சில் சென்று கேட்க அவர்கள் 65 ஆயிரம் கேட்டுள்ளனர். இதனால் உயிரிழந்தவரின் உறவினர்கள் தனியார் ஆம்புலன்சிலேயே நாங்கள் உடலை எடுத்து செல்கிறோம் என்று கூற உடனே அதெல்லாம் வேண்டாம் தனியார் ஆம்புலன்சில் சென்றால் அவர்களை அதிக பணம் கேட்பார்கள். நீங்கள் எங்கள் ஆம்புலன்சிலேயே உடலை எடுத்து செல்லலாம். முதலில் பணத்தை கட்டுங்கள் இல்லையன்றால் பிணத்தை தர மாட்டோம் என்று வாக்குவாதம் செய்தனர்.
ஆனால் சிஎம்சி மருத்துவமனை ஆம்புலன்சில் பிணத்தை எடுத்து செல்ல மறுப்பு தெரிவித்துள்ளனர் இறந்தவரின் உறவினர்கள். இதனால் ஒரு கட்டத்தில் மிரட்ட ஆரம்பித்து விட்டனர். எங்கள் ஆம்புலன்சில் தான் எடுத்து செல்லவேண்டும். இல்லை என்றால் பிணத்தை தரமாட்டோம் என்று கழுத்தை பிடித்து மிரட்டி உள்ளனர்.
நோயாளிகள் உயிரோடு இருக்கும்போதுதான் சிகிச்சை என்ற பெயரில் பணத்தை சுருட்டுகின்றனர். இறந்த பிறகும் கூட பணம் சுருட்ட பார்த்தால் நாங்கள் என்ன செய்வது என்று புலம்பி தீர்த்துள்ளனர். இந்த சம்பவம் பெரிய சர்ச்சையை ஏற்படுத்தியது.
ஒப்பந்த ஆம்புலன்ஸ்களின் அட்டூழியமும், சிஎம்சி மருத்துவமனையின் அடாவடித்தனமும் சில நாட்களாக நீடித்து வந்த நிலையில் திடீரென தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுனர்கள் மருத்துவமனையை முற்றுகையிட்டு வாக்குவாதம் செய்தனர். பின்னர் போலீசார் வந்து தனியார் ஓட்டுனர்களை சமாதானப்படுத்தினர்.
நோயாளிகளுக்கான ஆம்புலன்ஸ் தேவைக்கு தலா 10 ஆம்புலன்ஸ் என நான்கு நிறுவனங்களோடு சிஎம்சி மருத்துவமனை ஒப்பந்தம் போட்டுள்ளது. வருடா வருடம் அந்த ஒப்பந்த ஆம்புலன்ஸ் நிறுவனங்களுக்கு மட்டும் ஒப்பந்தம் கொடுக்கப்படுமாம். மருத்துவமனை வளாகத்திலேயே நிறுத்தி வைக்கப்படும் ஆம்புலன்களில் கொள்ளை பணம் வசூலிக்கப்படுவதாக குற்றச்சாட்டு முன்வைக்கப்படுகிறது.
இதுதொடர்பாக இந்து முன்னணி எக்ஸ் பதிவில், அப்பாவிகளின் பிணத்தில் கூட பணம் பார்க்கும்
கிருத்துவ மிஷனரி CMC மருத்துவக் கல்லூரி மருத்துவமனை.!
மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த மேற்குவங்கத்தைச் சேர்ந்த நோயாளியின் இறந்த உடலை எடுத்துச் செல்ல இறந்தவரின் உடலை வைத்து ரூ.60,000, ரூ 85 ஆயிரம் என ராணிப்பேட்டை CMC மருத்துவ மனையில் பேரம் பேசி வாக்குவாதத்தில் ஈடுபட்டது கொடுமையிலும் கொடுமை..
சேவை என்ற பெயரில் மருத்துவமனை ஆரம்பித்து, ஒப்பந்த அடிப்படையில் அமரர் ஊர்தி வைத்து பிணத்திலும் கொள்ளை இலாபம் சம்பாதிக்கும் CMC மருத்துவமனை.!
நோயாளிகளையும் இறந்தவர்களின் பிணத்தை வைத்தும் பணபேரம் பேசும் சிஎம்சி மருத்துவமனையே இதுதான் சேவையா.? இவ்வாறு குறிப்பிட்டுள்ளது.