ஊரடங்கு உத்தரவு அமலில் உள்ள நிலையில் மக்களுக்கு சில நன்மைகள் ஏற்பட்டுள்ளது என்பதில் யாருக்கும் மாற்று கருத்த இருக்க முடியாது.
குடிமகன்களின் சேட்டைகள் குறைந்திருத்தல் மற்றும் குடிப்பவர்கள் உடல் ஆரோக்கியம் மேம்பட்டு இருத்தல். வரும் 7-தேதி தமிழக அரசு, மீண்டும் மதுபான கடைகளை திறப்பதற்கு, அனுமதி வழங்கி இருப்பதற்கு, நாடு முழுவதும் கடும் கண்டனங்கள் எழுந்து வருகிறது.
இந்நிலையில் டாக்டர் கிருஷ்ணசாமி தனது டுவிட்டர் பக்கத்தில் ஒட்டு மொத்த தமிழர்களின் ஆதங்கத்தை இவ்வாறு வெளிப்படுத்தியுள்ளார்.
50 வருடங்களுக்கு பிறகு குடிப்பழக்கம் அற்ற தமிழ் சமுதாயத்தை காண்பதற்கான அரிய வாய்ப்பு கிடைத்திருக்கும். இந்த அரிய வாய்ப்பை எடப்பாடி அரசு நழுவ விட்டுவிட்டதாகவே கருதுகிறேன். படிப்படியாக மதுபானம் தமிழகத்தில் இருந்து ஒழிக்கப்படும் என்று இவர்கள் சொல்லி வந்ததும் பச்சைப்பொய் என தெரிகிறது.
டாஸ்மாக் இழப்பை சரிகட்ட பல வழிகள் அரசுக்கு உண்டு. அரசின் ஊதாரித்தனமான பல செலவுகளை குறையுங்கள். இம்மியளவும் ஊழல் இல்லாத அளவில் அனைத்து துறைகளிலும் டெண்டர்களை வெளிப்படையாக்குங்கள். பொதுமக்களுக்கு எந்த விதத்திலும், பலன் அளிக்காத அனைத்து இலவச திட்டங்களையும் முற்றாக நிறுத்தி வையுங்கள்
டாஸ்மாக் திறக்கப்படும், மது குடிக்க பார்கள் திறக்கப்படாது. அவர்கள் எங்கே குடிப்பார்கள்? வீதியிலா? வீட்டிலா? வீட்டில் குடிக்க குடும்பம் அனுமதிக்குமா? குடித்த பின் அங்கு அமைதி நிலவுமா? அதுமட்டுமல்ல, வீடுகளிலும், வீதிகளிலும், சமுதாயத்திலும், சண்டைகளும்; சச்சரவுகளும் மேலோங்கும்.