சர்வதேச போதை மற்றும் பயங்கரவாத குற்றவாளிகளின் பதுங்கு கூடாரமா? தமிழகம் – பாதுகாப்பு அச்சுறுத்தலில் தமிழக மக்கள்

சர்வதேச போதை மற்றும் பயங்கரவாத குற்றவாளிகளின் பதுங்கு கூடாரமா? தமிழகம் – பாதுகாப்பு அச்சுறுத்தலில் தமிழக மக்கள்

Share it if you like it

சென்னையில் நட்சத்திர ஓட்டல்கள் மற்றும் சொகுசு விடுதிகளுக்கு போதை மருந்து விநியோகம் செய்த நைஜீரிய கும்பலை தேசிய பாதுகாப்பு முகமை கைது செய்துள்ளது. இவர்கள் molly , hug drug , moon rocks என்ற ரகசிய குறியீடு பயன்படுத்தி போதை மாத்திரைகளை விற்று வந்தது விசாரணையில் அம்பலமாகிறது. ஒரு மாத்திரையின் விலை இந்திய பண மதிப்பில் ₹ 10 ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்தது தெரிய வருகிறது.

கடந்த சில தினங்களில் கேரள மாநிலம் திருச்சூரை தலைமையாகக் கொண்டு செயல்பட்ட ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தின் தென் மாநில தலைவன் சென்னையில் வைத்து கைது செய்யப்பட்டதாக என்ஐஏ தரப்பிலிருந்து செய்திகள் வெளியானது.

ஐ எஸ் ஐ எஸ் பயங்கரவாத இயக்கத்தின் செயல்பாடுகளுக்கு தென்னிந்தியாவை ஒரு களமாக முயற்சித்ததும் அதற்கு தமிழகத்தில் பெரும் ஆதரவு எல்லா மட்டத்திலும் இருந்து வந்ததும் கடந்த ஓராண்டு காலமாக தமிழகத்தில் தொடர்ந்து நிலவும் தேசிய பாதுகாப்பு முகமையின் தொடர் சோதனைகள் விசாரணைகள் கைதுகள் மூலம் தெரிய வர தமிழகம் அதிர்ந்தது. அதன் தாக்கமே விலகாத நிலையில் தற்போது மீண்டும் தென் மாநில அளவில் தலைமை பயங்கரவாதி ஒருவனை சென்னையில் கைது செய்திருப்பதும் சர்வதேச அளவில் போதைப் பொருள் கடத்தல் மற்றும் விநியோகத்திற்கு பேர் போன நைஜீரிய நாட்டை சேர்ந்த கும்பலையும் சென்னையில் வைத்து கைது செய்திருப்பதும் மக்களை அச்சத்தில் உறைய வைக்கிறது.

சென்னை என்பது வெறும் தொழில் நகரமோ மாநகரமோ இல்லை. இது தமிழகத்தின் தலைநகரமும் ஆகும். பன்னாட்டு தொழிற்சாலைகள் பன்னாட்டு தகவல் தொழில்நுட்ப தொழில் பூங்காக்கள் சர்வதேச அளவில் தொழில் வர்த்தகம் வியாபாரம் ஏற்றுமதி இறக்குமதி என்று பெரும் பொருளாதார மையமாக விளங்குவது. சென்னையில் தங்கம் வெள்ளி ஆபரணங்கள் தொடங்கி ஆடைகள் இதர பயன்பாட்டுப் பொருட்கள் என்று அனைத்தையும் மொத்தமாக வாங்குவதற்கு தொழில் வியாபாரம் சார்ந்த நபர்கள் முதல் தனி நபர்கள் வரை தினம் தோறும் இலட்சக்கணக்கில் சென்னை நகருக்குள் வந்து போவதுண்டு. இதைத் தவிர ஒரு சர்வதேச விமான நிலையம் பெருமளவில் சரக்கு கையாளுகையை முன்னெடுக்கும் ஒரு துறைமுகம் என்று சென்னை மாநகரம் எப்போதும் பரபரப்பும் சுறுசுறுப்புமாய் இயங்கி வரும் ஒரு வர்த்தக மையம்.

இதில் ஏற்கனவே ஆக்கிரமிப்பு காரணமாக நீர் வள மேலாண்மை உள்கட்டமைப்புகள் சிதைந்து பஞ்சம் வெள்ளம் வறட்சி சுகாதார சீர்கேடு என்று பல்வேறு சிக்கல்கள் இருக்கிறது. இவை அனைத்தையும் கடந்து மக்கள் இங்கு இன்னமும் தொடர் புழக்கத்தில் இருப்பதே இது பெரும் வர்த்தக மையம். இங்கிருந்தால் மட்டுமே உத்தியோகம் தொழில் வியாபாரம் வர்த்தகம் என்ற தங்களின் ஏதோ ஒரு பிடிமானத்திற்கு உரிய களமும் வாய்ப்பும் கிடைக்கும் என்ற கட்டாயத்தால் மட்டுமே வாழ்வாதாரத்தை பாதுகாக்க வேண்டும் என்று இன்னுமும் சென்னை மாநகரில் நிலையாக வாழ்ந்து வருகிறார்கள்.

இப்படிப்பட்ட சூழலில் ஏற்கனவே போக்குவரத்து நெரிசல்கள் குடிநீர் தட்டுப்பாடு மின்சாரத் தட்டுப்பாடு என்று எத்தனையோ இடங்களுக்கு இடையில் வாழும் மக்களுக்கு உயிர் ஆபத்துக்களை விளைவிக்கும் வகையிலான சர்வதேச பயங்கரவாதிகளின் நடமாட்டமும் போதைப் பொருள் கடத்தல் கும்பலின் நடமாட்டமும் எப்படிப்பட்ட அச்சுறுத்தலை விளைவிக்கும்? அவர்களின் மனதில் எப்படிப்பட்ட உயிர் பயத்தை குழப்பத்தை விளைவிக்கும் ? என்பதை ஆட்சியாளர்கள் யோசிக்க வேண்டும்.

குஜராத் துறைமுகத்தில் பிடிப்பட்ட போதைப் பொருளின் நுனி சென்னை வரை நீள்கிறது எனும் போதே மாநில அரசு சுதாரித்து உளவுத்துறையை முடுக்கிவிட்டு அதன் வேர்களை கண்டறிந்து அருத்தெறிந்திருக்க வேண்டும். ஆனால் அதை செய்வதற்கு பதிலாக அதற்கு காரணமானவர்களை பாதுகாக்க முயற்சித்து அந்த போதைப் பொருள் பிடிபடவும் அவர்களின் மீது உரிய நடவடிக்கை எடுக்க காரணமாக இருந்த ஒரு உளவுத்துறை பின்னணி கொண்ட ஆளுநரின் மீது பெரும் வன்மமும் துவேசமும் கொண்டு வீதியில் இறங்கி போராட்டம் நடத்தியது. இன்று அதன் பலனை தமிழக மக்கள் அனுபவிக்கிறார்கள்.

ஆட்சி அதிகாரத்தில் கோலோச்ச அரசியல் ஆதரவு தேவை. அந்த அரசியல் ஆதரவிற்கு பல தரப்பட்ட கட்சிகள் அமைப்புகளின் இணக்கமான உறவும் ஆதரவும் தேவை. மறுப்பதற்கில்லை. ஆனால் அந்த ஆதரவாளர்கள் போதைப் பொருள் கடத்தல் ஆயுதங்கள் கடத்தல் பயங்கரவாத செயல்களை செய்யும் தேசவிரோதிகளாக சமூக விரோதிகளாக இருப்பார்களே ஆனால் அவர்களின் ஆதரவை பெற்று ஒரு ஆட்சியாளரால் எப்படி ஒரு நல்லாட்சியை கொடுக்க முடியும்? நங்களின் ஆட்சியை தக்க வைக்க இது போன்ற தேச விரோத பயங்கரவாத ஆதரவாளர்களின் ஆதரவு வேண்டும் என்று நினைத்தால் அந்த அரசியல் களமும் ஆட்சி நிர்வாகமும் எப்படி மக்கள்…


Share it if you like it