தொழிலாளர் நலத்துறையின் உதவி தொழிலாளர் ஆணையருக்கான 29 பணியிடங்களை கொண்ட, இந்திய ஆட்சி பணிக்கு நிகரான தேர்வில் தேர்ச்சி பெற்ற திரு.மு. இராமநாதன், தென்காசி மாவட்டம் கடையநல்லூர் கிருஷ்ணாபுரத்தை சேர்ந்தவர். இந்திய அளவில் 18வது தரவரிசையில் தேர்ச்சி பெற்றுள்ளார் இவர்.
திரு. மு. இராமநாதன், சென்னை அண்ணா நகரில் உள்ள PL RAJ IAS & IPS ACADEMY மற்றும் பாரதி பயிலகம் நடத்தும் இலவச பயிற்சி மையத்தில் தயாரான மாணவர் ஆவார்.
தமிழ்நாட்டில் இருந்து இப்பணிக்கு தேர்வாகியுள்ள ஒரே மாணவர் இவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இவரின் பெற்றோர் திரு.சு.முருகையா, திருமதி.மு.லெட்சுமி இருவரும் கூலித்தொழிலாளர்கள்.
திரு.ராமநாதன் தனது பள்ளி கல்வியினை தமிழ் வழியில் பயின்றவர். மேலும் உணவத்தில் பகுதி நேரமாக பணிபுரிந்து கொண்டே கல்லூரி படிப்பை முடித்தார். பின்னர் PL RAJ IAS & IPS ACADEMY மற்றும் பாரதி பயிலகத்தில் சேர்ந்து பயிற்சி பெற்றார்.
தற்போது இந்திய ரயில்வேயின் உற்பத்தி கேந்திரமான சென்னை ICF-ல் பணியாற்றி வருகிறார்.