ஈ.வி.கே.எஸ். இளங்கோவனுக்கு ஆதரவு வழங்கிய நடிகர் கமலை நெட்டிசன்கள் கடுமையாக விமர்சனம் செய்து வருகின்றனர்.
பிரபல திரைப்பட நடிகர், இயக்குனர், பாடலாசிரியர் என பன்முக தன்மை கொண்டவர் நடிகர் கமல்ஹாசன். இவர், மக்கள் நீதி மய்யம் கட்சியின் நிறுவனராகவும் இருந்து வருகிறார். இவரது, கட்சி தி.மு.க.வின் ’பி டீம்’ என்று அந்நாட்களில் அழைக்கப்பட்டது. நான், எந்த கட்சியின் பி டீம் அல்ல. தி.மு.க., அ.தி.மு.க. கட்சிகளுக்கு மாற்றாக எனது கட்சி செயல்படும் என்று ஆவேசமாக கூறியவர். இதனை தொடர்ந்து, கடந்த நாடாளுமன்ற, சட்டமன்ற தேர்தல்களில் தனித்து நின்று களம் கண்டார். எனினும், தமிழக மக்கள் மக்கள் நீதி மய்யத்தை முழுமையாக அங்கீகரிக்கவில்லை.
அந்த வகையில், கடந்த 2021 – ஆம் ஆண்டு நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், கோவை தெற்கு தொகுதியில் நடிகர் கமல் போட்டியிட்டார். இவரை, எதிர்த்து பா.ஜ.க. மூத்த தலைவர் வானதி சீனிவாசன் களம் கண்டார். மக்களின் பெரும் ஆதரவுடன் பா.ஜ.க. அத்தொகுதியை கைப்பற்றி நடிகர் கமலுக்கு அதிர்ச்சி வைத்தியத்தை கொடுத்தன.
மக்களின் செல்வாக்கை தொடர்ந்து இழந்து வந்த கமல், தனது பெயரையும் கட்சியையும் காப்பாற்றும் வகையில், தி.மு.க.விடம் சமீப காலமாக நெருக்கம் காட்ட துவங்கினார். இந்த நிலையில் தான், காங்கிரஸ் கட்சியின் வேட்பாளர் திருமகன் ஈ.வெ.ரா. சமீபத்தில் அகால மரணமடைந்தார்.
இதனை தொடர்ந்து, ஈரோடு கிழக்கு சட்டமன்ற தொகுதயில் காங்கிரஸ் கட்சியின் சார்பில் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் வேட்பாளராக களம் இறக்கப்பட்டுள்ளார். இவருக்கு, ஆதரவாக தி.மு.க. தீவிரமாக தேர்தல் பிரச்சாரத்தை மேற்கொண்டு வருகிறது. இப்படிப்பட்ட சூழலில் தான், மக்கள் மைய்யத்தின் நிறுவனர் நடிகர் கமல்ஹாசன் காங்கிரஸ் கட்சியின் வேட்பாளருக்கு தனது ஆதரவினை வழங்குவதாக தெரிவித்துள்ளார்.
கமலின் இந்த முடிவிற்கு நெட்டிசன்கள் கடும் கண்டனத்தை பதிவு செய்து வருகின்றனர்.