பிரபல திரைப்பட நடிகர் மாதவனின் மகன் வேதாந்த் பாரத தேசத்திற்கு மீண்டும் பெருமை சேர்த்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
தமிழ் திரை உலகின் முன்னணி நடிகராக இருப்பவர் மாதவன். இவரது, மகன் வேதாந்த் மாதவன். இவர், கடந்த ஆண்டு டென்மார்க்கில் நடைபெற்ற 800 மீட்டர் நீச்சல் போட்டியில் கலந்து கொண்டு தங்கப்பதக்கம் வென்றார். நாட்டிற்கு, பெருமை சேர்த்த வேதாந்தை பாரதப் பிதமர் உள்ளிட்ட பல தலைவர்கள் வாழ்த்தி இருந்தனர். இதையடுத்து, நெட்டிசன்கள், பொதுமக்கள் என பலர் மாதவன் மகனுக்கு தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில், நடிகர் மாதவனின் மகன் மீண்டும் நீச்சல் போட்டியில் சாதனை படைத்துள்ளான். இதுகுறித்து, அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், கடவுளின் அருளால் – 100 மீ, 200 மீ மற்றும் 1500 மீ எனது மகன் தங்கம் வென்றுள்ளான். மேலும், 400 மீ மற்றும் 800 மீ வெள்ளியை வென்று இருக்கிறான் என பதிவிட்டுள்ளார்.