வார்த்தையை பார்த்து பயன்படுத்து: ஆபாச நடிகருக்கு ராணுவ வீரர் எச்சரிக்கை!

வார்த்தையை பார்த்து பயன்படுத்து: ஆபாச நடிகருக்கு ராணுவ வீரர் எச்சரிக்கை!

Share it if you like it

இந்திய துணை ராணுவ படை வீரர் குருமூர்த்தி நடிகர் சித்தாத்திற்கு எச்சரிக்கை விடுத்திருக்கும் காணொளி ஒன்று தற்போது வைரலாகி வருகிறது.

விருதுநகர்‌ மாவட்டம் ராஜபாளையம் அருகேயுள்ள கீழராஜகுலராமன் பகுதியைச் சேர்ந்தவர் குருமூர்த்தி. இவர், துணை ராணுவ படை வீரராக இருந்து வருகிறார். தேசத்திற்கு எதிராகவும், பிரிவினையை தூண்டும் விதமாகவும் பேசும் நபர்களை கண்டித்து காணொளி வெளியிடுவதை வழக்கமாக கொண்டவர். அந்தவகையில், சென்னை அம்பேத்கர் சட்டக்கல்லூரியில் புத்தக வெளியிட்டு விழா அண்மையில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில், கலந்து கொண்ட திருமா, “தமிழ்நாட்டை தனி நாடாக அமைப்பதே தமிழ் தேசியத்தின் இலக்கு” என்று தெரிவித்து இருந்தார். இவரின், பிரிவினை கருத்து பொதுமக்கள் மத்தியில் பலத்த அதிர்வலைகளை ஏற்படுத்தி இருந்தது.

திருமாவின் கருத்தை கண்டித்து குருமூர்த்தி காணொளி ஒன்றினை வெளியிட்டு இருந்தார். இதனால், உஷ்ணமான சிறுத்தை குட்டிகள் குருமூர்த்தியை தொடர்பு கொண்டு கொலை மிரட்டல் விடுத்திருந்தனர். என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படிப்பட்ட சூழலில், மதுரை விமானத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தம்மை துன்புறுத்தியதாக தனது சமூக வலைத்தள பக்கத்தில் நடிகர் சித்தார்த் கருத்து தெரிவித்து இருந்தார். ஆபாச நடிகரின் கருத்திற்கு, பதிலடி கொடுக்கும் விதமாக குருமூர்த்தி வெளியிட்ட காணொளியில் கூறியதாவது ;

இந்த பதிவு யாருக்கு என்றால் நடிகர் சித்தார்த்திற்கு, மதுரை விமான நிலையத்தில் சி.ஆர்.பி.எப். வீரர்கள் தம்மை ஹிந்தியில் பேசுமாறு துன்புறுத்தியதாக கூறியுள்ளார். இந்திய துணை ராணுவ படையை ஆங்கிலத்தில் பேச வேண்டும் என்று சொல்ல நீங்கள் யார்? நாங்கள் என்ன? வெள்ளைகாரனா? அல்லது பிரிட்டிஸா?. இந்திய மொழிகளில் ஏதேனும் ஒரு மொழியில் பேச சொல்ல வேண்டியது தானே? தமிழ் மொழி பேசும் யாராவது ஒரு அதிகாரி அங்கு இருந்திருப்பார்.

அவரை, நீங்கள் அழைத்திருக்கலாமே. தெலுங்கு தெரியும் என்றால், அம்மொழி பேசும் அதிகாரியை நீங்கள் அழைத்திருக்கலாமே. ஆங்கிலத்தில் பேச சொல்வதற்கு நீங்கள் யார்? நீங்கள் என்ன? வெள்ளைகாரனா. வெள்ளைகாரனே இங்கு வந்து ஹிந்திமொழியை கற்று கொண்டு இருக்கிறான் என காட்டமாக பேசியிருக்கிறார்.

மேலும், விவரங்களுக்கு அதன் லிங்க் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.

ஆதாரம் இதோ.


Share it if you like it