பிராமண வாத்தியார்கள் போட்ட பிச்சை: நடிகர் சிவக்குமார் பெருமிதம்!

பிராமண வாத்தியார்கள் போட்ட பிச்சை: நடிகர் சிவக்குமார் பெருமிதம்!

Share it if you like it

பிராமண வாத்தியார்கள் போட்ட பிச்சையால்தான் இன்று நான் இங்கு நிற்கிறேன் என்று நடிகர் சிவக்குமார் பெருமிதத்துடன் கூறியிருக்கிறார்.

தமிழர்களுக்கு கல்வி அறிவு கொடுத்தது, ஈரோடு வெ.ராமசாமியும், திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வினரும்தான் என்று, திராவிடர் கழகத்தினரும், தி.மு.க.வினரும் கூறிவருகின்றனர். அதற்கு முன்பு, பிராமணர்கள் மட்டுமே கல்வி கற்க முடியும் என்றும், மற்றவர்கள் கல்வி கற்க முடியாது என்று கூறிவந்தனர். ஆனால், இவர்கள் கூறியது பொய் என்பது நடிகர் சிவக்குமார் பேச்சின் மூலம் அம்பலமாகி இருக்கிறது. காரணம், பிராமணர்கள் போட்ட பிச்சையால்தான் தான் கல்வி அறிவு பெற்றதாக சிவக்குமார் கூறியிருக்கிறார்.

நடிகர் சிவக்குமார் கல்வி அறக்கட்டளை சார்பில் 43-வது ஆண்டு கல்வி உதவித்தொகை வழங்கும் விழா சென்னையில் நடந்தது. நடிகர் சிவக்குமார், நடிகர் கார்த்தி மற்றும் பலர் கலந்துகொண்டனர். இந்நிகழ்ச்சியில் நடிகர் சிவக்குமார் பேசும்போது, சென்னையில் சாதாரண ஆங்கில ஆசிரியராக இருந்த சீனிவாஸ சாஸ்திரி, தனது ஆங்கிலப் புலமையால் ஆங்கிலேயர்களால் சில்வர் டங் என்ற பட்டத்தைப் பெற்றவர். இவர், வலங்கைமான் என்கிற இடத்தில் கோயிலில் மணி அடிக்கும் சாதாரண பிராமண குடும்பத்தில் பிறந்தவர். பிராமணர்களைப் பற்றி நாம் ஏதேதோ செல்கிறோம். ஆனால், அடுத்த வேலை சாப்பாட்டுக்குக் கூட வழியின்றி இன்னமும் கோயிலில் பூஜை செய்து வயிறு வளர்க்கும் பிராமணர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்.

நானும் சாதாரண ஏழை குடும்பத்தில் பிறந்தவன்தான். நான் 6, 7, 8-ம் வகுப்பு படிக்கும்போது எனக்கு ஆசிரியர்களாக இருந்தவர்கள் சுந்தராம்பாள், சேதுராமய்யர், சந்திரசேகர் போன்றோர் பிராமணர்கள்தான். அவர்கள் டியூசனுக்கு 5 பைசாகூட வாங்க மாட்டார்கள். சோதா பயலுகளா மறுபடியும் மாடு மேய்க்கப் போயிடாதீங்கடா, ஒழுங்கா படிங்கடா என்று சொல்லி எங்களை படிக்க வைத்தார்கள். அந்த வாத்தியார்கள் போட்ட பிச்சையால்தான் நான் படித்து இந்த அளவுக்கு முன்னேறி இருக்கிறேன். வாழ்க்கையில் கல்வியும், ஒழுக்கமும் இருந்தால் மனிதன் எந்த உச்ச நிலையையும் அடையலாம்” என்றார்.

நடிகர் சிவக்குமார் இவ்வாறு பேசியிருப்பது, திராவிடர் கழகத்தினர் முகத்தில் கரியைப் பூசியதுபோல் இருக்கிறது. அதேசமயம், அவரது பேச்சு பிராமணர்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றிருக்கிறது. பிராமணர்கள் என்றாலே இளக்காரமாகப் பார்க்கும் தமிழகத்தில், பிராமணர்களுக்கு அங்கீகாரம் கொடுக்கும் வகையில் அமைந்திருக்கிறது நடிகர் சிவக்குமாரின் பேச்சு என்றால் மிகையாகாது.


Share it if you like it