சிவகங்கையில் புதிதாக திறக்கப்பட்ட கீழடி அருங்காட்சியகத்தை நடிகர் சூர்யா அண்மையில் தனது குடும்பத்தினருடன் சென்று பார்வையிட்டார். அவர்களுடன், மதுரை எம்.பி. வெங்கடேசனும் உடன் சென்று இருந்தார். அந்த வகையில், காலை பத்து மணிக்கு திறக்க வேண்டிய அருங்காட்சியகம் நடிகரின் குடும்பத்திற்காக வேண்டி ஒரு மணி நேரத்திற்கு முன்னதாகவே திறக்கப்பட்டன.
கீழடியை சுற்றி பார்க்கும் வண்ணம் அரசு பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் சற்று முன்னதாகவே அதாவது, காலை 9.30. மணிக்கே அங்கு வந்து விட்டனர். எனினும் 10.30 மணி வரை கீழடி அருங்காட்சியகம் திறக்கப்படவில்லை. இதன்காரணமாக, பள்ளி மாணவர்கள் வெயிலில் நிற்க வேண்டிய அவலம் ஏற்பட்டது.
அனைத்து இடங்களையும் பொறுமையாக சுற்றி பார்த்து விட்டு நடிகரின் குடும்பம் அங்கிருந்து புறப்பட்டுள்ளது. சூர்யாவின், குடும்பத்திற்காக பள்ளி மாணவர்களும், பொதுமக்களும் நீண்ட நேரம் காத்திருக்க வேண்டுமா? என சமூக ஆர்வலர்கள் கேள்வி எழுப்பி இருந்தனர்.
இப்படிப்பட்ட சூழலில் தான், திரையில் தான் அவர் சமூக நீதி பேசுவார். உண்மையில் அவரது சுயரூபம் வேறு என நெட்டிசன்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.