நீட் தேர்விற்கு எதிர்ப்பு, மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிர்ப்பு, என தொடர்ந்து பிரபல நடிகர் சூர்யா கருத்து தெரிவித்து வரும் நிலையில், தாம் நடித்த ஜெய் பீம், படத்தை ஹிந்தி மொழியில் வெளியிட்டு இருப்பது மக்கள் மத்தியில் பேசுப் பொருளாக மாறியுள்ளது.
பிரபல திரைப்பட நடிகர் சூர்யா அவர்கள் மத்திய அரசு அண்மையில் கொண்டு வந்த மும்மொழி கல்விக் கொள்கைக்கு எதிராக தனது கடும் விமர்சனத்தை தெரிவித்து இருந்தார். நடிகர் கார்த்தி, சீமான் மற்றும் மோடி அரசு மீது என்றும் வன்மத்தை கக்கும் நபர்கள் வரை சூர்யா கருத்திற்கு தங்களது ஆதரவினை தெரிவித்து இருந்தார். ஏழை மாணவ, மாணவிகள், என்ன? படிக்க வேண்டும் என்பதை அவர்களின் பெற்றோர்கள் மட்டுமே தீர்மானிக்க வேண்டும். நடிகர்கள், அரசியல்வாதிகள், தலையிடுவது வெட்க கேடான செயல் என்று அந்நாட்களில் மக்கள் தங்களின் உணர்வுகளை வெளிப்படுத்தி இருந்தனர்.
இதனை தொடர்ந்து நடிகர் சூர்யா அவர்கள் தாம் நடித்த ‘சூரரைப்போற்று’ திரைப்படத்தை ஹிந்தி மொழியில் தயாரிக்க உள்ளதாக மகிழ்ச்சியுடன் தெரிவித்து அண்மையில் தெரிவித்து இருந்தார். ஏழை மாணவர்கள் அரசு பள்ளியில் இந்தி மொழி படிப்பது குறித்து குழப்பத்தையும், அச்சத்தையும், மாணவர்களின் பெற்றோர்கள் மத்தியில் பயத்தை உருவாக்கியவர் நடிகர் சூர்யா என்பது நிதர்சனம்.
அரசு பள்ளியில் பயிலும் மாணவர்கள் எப்படி 3 மொழி படிக்க முடியும் என்று கேள்வி எழுப்பிய நடிகர். தாம் நடித்த ’ஜெய் பீம்’ திரைப்படத்தை 5 மொழிகளில் வெளியிட்டு இருப்பதன் மூலம் இவரின் உண்மையான சுயரூபத்தை புரிந்து கொள்ள வேண்டும் என்று பலர் கருத்து தெரிவித்து வருகின்றனர். .