வாரிசு சினிமா பார்த்துவிட்டு, நடிகர் விஜய்க்கு ஆதரவாக பேசிய இஸ்லாமிய பெண், அடுத்த சில மணிநேரங்களில் மன்னிப்புக் கேட்டு வீடியோ வெளியிட்ட சம்பவம் அரங்கேறி அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது.
இஸ்லாமியர்களின் ஷரியத் சட்டப்படி, மது அருந்துதல் உள்ளிட்ட போதைப் பொருட்களை பயன்படுத்துவது மட்டுமல்ல, சினிமா பார்ப்பதே குற்றமாகக் கருதப்படுகிறது. ஆனால், இவையெல்லாம் ஆண்களை விட பெண்களுக்கு மட்டுமே மிகவும் கெடுபிடியுடன் கடைப்பிடிக்கப்படுகிறது. குறிப்பாக, இஸ்லாமிய நாடுகளில் பெண்கள் முகம், உடல் முழுவதையும் மறைக்கும் வகையில், புர்கா அணிய வேண்டும். பள்ளிக்குச் செல்லக் கூடாது. வேலைக்குச் செல்லக்கூடாது. அவ்வளவு ஏன், வெளியிலேயே செல்லக் கூடாது. அப்படியே செல்வதென்றால், ஒரு ஆணை துணைக்கு அழைத்துச் செல்ல வேண்டும். அந்த ஆணும், அவரது உறவினராக இருக்க வேண்டும் என்றெல்லாம் கெடுபிடிகள் செய்யப்படுகின்றன.
கடந்த சில மாதங்களுக்கு முன்புகூட இஸ்லாமிய நாடான ஈரானில், தலைமுடியை மறைக்கும் வகையிலான ஹிஜாப்பை சரியாக அணியாததாகக் கூறி, அந்நாட்டைச் சேர்ந்த மாஷா அமினி என்கிற 22 வயது இளம்பெண், கலாசார பிரிவு காவலர்களால் அடித்தே கொலை செய்யப்பட்ட சம்பவம் அரங்கேறி உலகத்தையே உலுக்கியது குறிப்பிடத்தக்கது. இதை கண்டித்து ஈரான் நாடு முழுவதும் மிகப்பெரிய அளவில் பெண்கள் போராட்டத்தில் ஈடுபட்டிருக்கிறார்கள் என்பது வேறு விஷயம். இதன் காரணமாக, அந்நாட்டு அரசு கலாசார காவல் பிரிவையே கலைத்து விட்டது என்பதும் தனிக்கதை. இதேபோலதான், தற்போது ஆப்கானிஸ்தானிலும் பெண்களுக்கு எதிராக கட்டுப்பாடுகள் அதிகரித்து வருகின்றன. இதன் உச்சகட்டமாக, பெண்கள் சிகிச்சை பெற பெண் டாக்டர்களை மட்டுமே நாட வேண்டும் என்கிற லெவலுக்குச் சென்று நிற்கிறது.
இந்த நிலையில்தான், தமிழ்நாட்டில் நிகழ்ந்த ஒரு சம்பவம், இங்கும் பெண்களுக்கு எதிராக ஷரியத் சட்டம் கடைப்பிடிக்கப்படுகிறதா என்கிற கேள்வியை எழுப்பி இருக்கிறது. அதாவது, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, நடிகர்கள் விஜய் மற்றும் அஜித் ஆகியோர் நடித்த முறையே வாரிசு, துணிவு ஆகிய படங்கள் கடந்த 11-ம் தேதி வெளியானது. இதில், விஜய் படத்தைப் பார்த்து விட்ட வெளியே வந்த ஒரு இஸ்லாமிய பெண், தமிழ்நாட்டின் வாரிசே தளபதி விஜய்தான். அவருக்கு எந்த பிரச்னை வந்தாலும் நாங்கள் இருக்கிறோம் என்று கூறியிருந்தார். ஆனால், அடுத்த சில மணி நேரங்களிலேயே அப்பெண் பேசிய வீடியோ ஒன்று வெளியானது.
அந்த வீடியோவில், நான் இஸ்லாத்துக்கு எதிரான ஒரு பாவத்தை பண்ணி விட்டேன். இது தவறு என்பதை நான் உணர்ந்து விட்டேன். இந்த தவறுக்காக, நான் அல்லாவிடம் மன்னிப்புக் கேட்டுவிட்டேன். அல்லா என்னை மன்னிப்பார் என்று நம்புகிறேன். அதேபோல, அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளிடமும் நான் மன்னிப்புக் கேட்டுக் கொள்கிறேன். அனைவரும் என்னை மன்னிக்க வேண்டும். மேலும், அனைத்து இஸ்லாமிய சகோதர சகோதரிகளும் எனது பாவத்திலிருந்து என்னை மீட்டுத் தர துவா செய்ய வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். இனி இதுபோன்ற ஒரு தவறான செயலை செய்ய மாட்டேன் என்று கூறியிருக்கிறார்.
இதுதான் தமிழகத்திலும் ஷரியத் சட்டத்தின் படி இஸ்லாமிய பெண்கள் அடிமைப்படுத்தப்படுகிறார்களா என்கிற கேள்வியை சமூக ஆர்வல்கள் மத்தியில் எழுப்பி இருக்கிறது. அதோடு, ஹிந்து மதத்தில் பெண்களுக்கு ஏதாவது பிரச்னை என்றால் முதல் ஆளாக ஓடிவந்து கூக்குரல் எழுப்பும் போராளிகள், இந்த விஷயத்தில் இதுவரை வாய் திறக்கவில்லை. அதேபோல, பெண்ணுரிமை பேசும் டுபாக்கூர் போராளிகளும் கப்சிப் என்று இருக்கிறார்கள். இது ஏன் என்கிற கேள்வியும் சமூக ஆர்வலர்கள் மத்தியில் எழுந்திருக்கிறது.